செவ்வாய், 27 நவம்பர், 2018

31.07.2017 திண்டிவனம் மரகதாம்பிகை திந்திரிணீசுவரர் திருக்கோயில்.

31.07.2017 வழிபாடு.  காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் அறுபடைவீடு பாதயாத்திரை.

திண்டிவனம் அருள்மிகு மரகதாம்பிகை உடனாய திந்திரிணீசுவரர் திருக்கோயில்.  



சுயம்புலிங்கம்.  திந்திரி என்றால் புளியமரம் என்று பொருள்.  புளிமரம் சுயம்புலிங்கமாக மாறியுள்ளது என்கின்றனர்.  அதனால் திந்திரிணீசுவரர் என்ற காரணப்பெயர் உண்டாகியுள்ளது.  ராஜராஜசோழன் என்ற குலோத்துங்க மன்னனால் கோயில் கட்டப்பெற்றுள்ளது.   இந்தக் கோவிலில் உள்ள லிங்கங்களைத் திண்டி முண்டி கிங்கிலி கிலாலி என்ற நான்கு முனிவர்கள் பூசை செய்துள்ளனர்.  திருநாவுக்கரசு சுவாமிகளால் (சேத்திரக்கோர்வை) திண்டீச்வரம் என்ற வைப்புத் தலமாகப் பாடப்பெற்றுள்ளது. 

இத் திருத்தலம் திந்திரிணீசுவரர், பக்த பிரகலாதீசுவரர் ஞானபுரீசுவரர் கரகண்டேசுவரர் சுயம்புமூலநாதர் ஆகிய ஐந்து லிங்கங்கள் (பஞ்சலிங்கங்கள்) உள்ள சிறப்புடைய திருக்கோயிலாகத் திகழ்கிறது.






















அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்