புதன், 17 அக்டோபர், 2018

04.08.2014 இச்சோடா, இராமேசுவரம் காசி பாதயாத்திரை,

04.08.2014
இராமேசுவரம் காசி பாதயாத்திரை. குருசாமி பச்சைக்காவடி அவர்களும் அவர்களது அடியார்களுமாக மொத்தம் 20 பேர் இராமேசுவரத்திலிருந்து புறப்பட்டு காசிக்குப் பாதயாத்திரை சென்றோம்.

Ichoda, Telangana 504307 04.08.2014 அன்று இங்கே தங்கினோம்.




இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவர்  யாத்திரிகர் அனைவருக்கும் இளநீர் கொடுத்தார்.  இளநீர் வியாபாரியிடம் நாங்கள் பணம் கொடுத்த போது வாங்க மறுத்து விட்டார்.   2013ஆம் ஆண்டு அவருடைய குடும்பத்தில் இறக்கும் தருவாயில் ஒருவர் (மகனோ, மகளோ?) இருந்துள்ளார்.  அந்த வருடம்  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பாதயாத்திரை வந்தபோது அவருக்கு இளநீர் கொடுத்து உபசரித்துத் தனது துன்பநிலையைக் கூறியுள்ளார். 
குருசாமி அவர்களும் உனது குடும்பத்தில் சாவு வராது, பிழைத்துக் கொள்வார் என ஆசி வழங்கியுள்ளார்.  அதன்படியே, ஆச்சரியமான முறையில் நோய்வாய்ப்பட்டிருந்தவர் பிழைத்துக் கொண்டார் என்றும், குருசாமி பச்சைக்காவடி அவர்களின் ஆசியால்தான் இது நடந்தது என்றும் கூறினார். 

இச்சோடா இளநீர் வியாபாரி குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தெய்வமாகக் கருதினார்.  முழு (மூட) நம்பிக்கை.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

செவ்வாய், 16 அக்டோபர், 2018

02/08/2014 தெலுங்கானா, நிர்மல் காடுகள், மோண்டிகுட்டா (Mondigutta) கிராமம்

02/08/2014 தெலுங்கானா, நிர்மல் காடுகள், 

மோண்டிகுட்டா (Mondigutta) கிராமம்





2014ஆம் ஆண்டு காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும், அவருடன் அவரது 20 அடியார்களும் இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை மேற்கொண்டோம்.  69ஆவது  நாள் (02/08/2014)  தெலுங்கானாவில் புகழ்பெற்ற நிர்மல் காடுகளை உடைய மலைகளின் ஊடே நடந்து சென்றோம்.  மாலை மணி 05.30 அளவில் மோண்டிகுட்டா (Mondigutta) என்ற சிறு கிராமத்தைச் சென்று சேர்ந்து அங்கே தங்கினோம்.   சாலையோரும் அனுமன் கோயில் ஒன்று உள்ளது.









இந்தக் கிராம மக்கள் இயற்கையோடு மிகவும் நெருங்கி வாழ்கின்றனர்.  ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது.  குடிக்கவும் குளிக்கவும் மின்மோட்டார் வசதியுடன் கூடிய தண்ணீர்த் தொட்டி உள்ளது.  கிராம மக்கள் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகினர்.  குழந்தைகள் எல்லோரும் அவர்களாகவே வந்து எங்களுடன் வழிபாட்டில் சேர்ந்து கொண்டனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து ரொட்டி, தேநீர், உணவு எல்லாமும் வழங்கிக் குழந்தைகளை ஆசிர்வதித்தார்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

02/08/2014 தெலுங்கானா, அடிலாபாத், கதல் (Kadthal), ஐயப்பன் கோயில்



02/08/2014
தர்மசாஸ்தா ஸ்ரீ சபரிமலை ஐயப்பன் திருவருள் தென்னிந்தியா முழுவதும் பரவி உலகெங்கும் புகழுடன் விளங்குகிறது.  நாங்கள் இராமேசுவரம் காசி 110நாட்கள் பாதயாத்திரை மேற்கொண்டிந்தபோது தமிழகம், கருநாடகம், ஆந்திரம் எங்கும் சாலையோரங்களிலும் நகரின் முக்கியமான இடங்களிலும் ஐயப்பன் கோயில்களைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.  சில ஐயப்பன் கோயில்களில் தங்கியும் சென்றோம்.











தெலுங்கானா, அடிலாபாத் அருகே கதல் (Kadthal) என்ற ஊரில் எல்லையில் இருந்த ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 02.08.2014 அன்று காலை தங்கினோம். 
சாமியே சரணம் ஐயப்பா.

https://goo.gl/maps/J6wp8dATu2p

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

ஈராக்கில் முருகன் வழிபாடு

Venkatesan Tklp வீடியோ ஐ குழுவில் பகிர்ந்துள்ளார்: இந்துடா.
ஈராக்கில் முருகனை வழிபடும் பழங்குடியினர் - ஆதாரத்துடன் ஆச்சர்யமூட்டும் உண்மைகள்
#வின் தொலைக்காட்சி மக்களுக்கான ஊடகம்
#Wintvindia