02/08/2014 தெலுங்கானா, நிர்மல் காடுகள்,
மோண்டிகுட்டா (Mondigutta) கிராமம்
2014ஆம் ஆண்டு காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களும், அவருடன் அவரது 20 அடியார்களும் இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை மேற்கொண்டோம். 69ஆவது நாள் (02/08/2014) தெலுங்கானாவில் புகழ்பெற்ற நிர்மல் காடுகளை உடைய மலைகளின் ஊடே நடந்து சென்றோம். மாலை மணி 05.30 அளவில் மோண்டிகுட்டா (Mondigutta) என்ற சிறு கிராமத்தைச் சென்று சேர்ந்து அங்கே தங்கினோம். சாலையோரும் அனுமன் கோயில் ஒன்று உள்ளது.
இந்தக் கிராம மக்கள் இயற்கையோடு மிகவும் நெருங்கி வாழ்கின்றனர். ஒரு ஆரம்பப் பள்ளி உள்ளது. குடிக்கவும் குளிக்கவும் மின்மோட்டார் வசதியுடன் கூடிய தண்ணீர்த் தொட்டி உள்ளது. கிராம மக்கள் மிகவும் அன்பாகவும் பாசமாகவும் பழகினர். குழந்தைகள் எல்லோரும் அவர்களாகவே வந்து எங்களுடன் வழிபாட்டில் சேர்ந்து கொண்டனர். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து ரொட்டி, தேநீர், உணவு எல்லாமும் வழங்கிக் குழந்தைகளை ஆசிர்வதித்தார்.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக