வெள்ளி, 25 செப்டம்பர், 2020

12.08.2014 காசி பாதயாத்திரையில் ஓர் அதிசயம்

காசி பாதயாத்திரையில் ஓர் அதிசயம் 
ஆனால் உண்மை
அனைத்தும் ஆனைமுகத்தான் அருள்

காசி புனித பாதயாத்திரையில் ஓர் அற்புத நிகழ்ச்சி - 

    வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, ஆடி 27 (12.08.2014) செவ்வாய்கிழமை மகாராஷ்டிர மாநிலம் கண்கட்டி (kankati) என்ற ஊரில் உள்ள  (https://goo.gl/maps/YHvDWMNx9fMYHg4D7) ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து புறப்பட்டு  சுமார் 25 கி.மீ. யாத்திரை மேற்கொண்டு புட்டிபூரி (Butibori) என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.  https://goo.gl/maps/78SuewjLEePP2NLU6

 அந்த ஊரில் உள்ள மருத்துவர் ஒருவரின் மகனும் அவரது நண்பர்களும் சாலையோரம் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர். அந்த மருத்துவருக்குச் சொந்தமான நீண்ட பெரிய அடுக்குமாடி வணிக வளாகம் சாலையோரம் இருந்தது.  அந்தக் கட்டிடத்தில் தங்கினோம்.  கட்டிடப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தன.      மதிய உணவிற்குத் தேவையான காய்கறிகள், சமையல் எண்ணைய், குடிதண்ணீர் இவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து உபசரித்தனர்.  குறிப்பாக மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்களுக்கு வெற்றிலையும் பாக்கும் தேடிப்பிடித்து வாங்கி வந்து கொடுத்தனர்.

மாலைநேரத்தில் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான அந்த மருத்துவரும் அவரது நண்பர்கள் சிலரும் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றனர்.  நீண்ட  நேரம் குருசாமி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர். 

அந்த மருத்துவர் மிகப் பெருஞ் செலவில் இந்த வணிக வளாகத்தைக் கட்டியுள்ளார்.  முக்கால்வாசி வேலைகள் முடிவடைந்தநிலையில்,  உள்ளூர் அரசியல் வாதியிடமிருந்து மிரட்டல்,  அந்த இடத்தை தொழிற்சாலை வளாகமாக மாற்றித் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும்,  அதனால் இந்தக் கட்டிடத்தை அரசு கையகப்படுத்தி இடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.   மருத்துவரும் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.   வாய்தா எல்லாம் வாங்கி முடித்தபின்னர்,  வழக்கறிஞர் இதை சட்டப்படி மாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.  தீர்ப்பும் அப்படியே வழங்கப்பட்டுள்ளது.    அதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளார்.   அங்கும் அரசுக்குச் சதாகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது.

இனி எந்தவொரு நாளிலாவது அரசு தரப்பில் ஆட்கள் வந்து கட்டிடங்களை இடித்துத் தள்ளுவார்கள் என்ற நிலை.   அந்நாளில் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை சென்றுள்ளார்.

இந்த ஊரில் சாலையோரம் உள்ள இந்தக் கட்டிடம் பயன்பாட்டில் இல்லாமல் சும்மா கிடந்துள்ளது.  இங்கே சென்று யாத்திரிகர்களுடன் தங்கியுள்ளார்.  யாத்திரிகர்கள் வந்து கட்டிடத்தில் தங்கியுள்ள செய்தியை அருகில் நின்று கொண்டிருந்த ஒருவர் வழியாகச்  சொல்லி அனுப்பி யுள்ளார்.   செய்தி அறிந்த அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரான மருத்துவர்,  நேரில் வந்து குருசாமி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

அப்போது, இந்தக் கட்டிடம் பெரும் பொருட் செலவில் கடன்வாங்கிக் கட்டப்பெற்றுள்ளதையும்,  நீதிமன்றங்களில் அரசிற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த நாளிலும் இந்தக் கட்டிடம் இடிக்கப்படலாம் என்ற தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

அது கேட்ட குருசாமி பச்சைக்காவடி அவர்கள், இங்கே எங்களைத் தங்கும்படிச் செய்தவர் பிள்ளையார் ஆவார்.  பிள்ளையார் எங்களை இங்கே தங்கச் சொல்லித்தான் நாங்கள் இங்கே தங்குகிறோம்.  நீங்களும் முழு நம்பிகையுடன் 108 நாட்கள் பிள்ளையாரைத் தினமும் வழிபாடு செய்து வாருங்கள்.  இந்தக் கட்டிடம் உங்கள் கையை விட்டுப் போகாது என்று கூறி ஆசீர்வதித்துள்ளார்.

நீதிமன்றங்கள் எல்லாம் கைவிரித்துவிட்ட இந்த இக்கட்டான நிலையில்,  எல்லாமும் முடிந்துவிட்டது என்ற நிலையில்,  இனிமேல் கட்டிடத்தை இடிப்பதுதான் பாக்கி என்ற நிலையில், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கூறிய இந்தச் சொற்கள் மட்டுமே ஆதரவாக இருந்துள்ளன.

அரும்பாடு பட்டுக் கட்டிய கட்டிடம் இடிபடக்கூடாது, என் உழைப்பில் கட்டிய அந்தக் கட்டிடம் என்றும் என்னிடமே இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் அந்த மருத்துவர் தினமும் பிள்ளையாரை வழிபட்டு வந்துள்ளார்.

கட்டிடத்தை இன்று இடிப்பார்கள், நாளை இடிப்பார்கள் என்று நாட்கள் நகர்ந்து கொண்டே சென்றுள்ளன.  அரசியலில் திடீர் மாற்றமாக அந்த ஊரில் இருந்த மற்றொருவர் பதவியேற்க, அவர் அவருக்குச் சொந்தமான இடத்தில் தொழில்வளாகம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி அதைக் கொண்டுபோய் அரசிடம் கொடுத்துள்ளார்.  அவரது கோரிக்கை உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு,  அவர் கூறிய இடத்தில் தொழில்வளாகம் ஆரம்பிக் அரசு உத்தரவு வழங்கிவிட்டது.  

அரசின் இந்தப் புதிய ஆணையால், மருத்துவரின் இந்தக் கட்டிடம்  இடிபடாமல் தப்பித்துவிட்டது.  எல்லாமும் முடிந்துவிட்டன என்றிருந்த  நிலையில் குருசாமி பச்சைக்காவடி அவர்களது வழிகாட்டுதலின்படித் தினமும் பிள்ளையாரை வழிபட்டதன் பலனாகத் தங்களது சொத்து மீண்டும் தங்களுக்கே வந்துவிட்டது என்று அந்த மருத்துவர் அகம் மகிழ்ந்து கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னாளில் அந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் ஆனைமுகத்தானுக்கும் குருசாமிக்கும் அடியார் ஆகிவிட்டோம் என்றும் கூறி மகிழ்ந்தார்.

எல்லாம் ஆனைமுகத்தான் திருவருள்.   அனுதினமும் ஆனைமுகத்தானை வணங்குதல் செய்வோம்.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு ஆனைமுகத்தான் திருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


புதன், 23 செப்டம்பர், 2020

24.09.2014 காசி பாதயாத்திரை நிறைவு - 122 ஆம் நாள், புரட்டாசி 8

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்குக் காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் இராமேசுவரத்திற்குத் திரும்பினோம்.



குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.   அவ்வப்போது எங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டார்.

இன்று  122 ஆம் நாள் - புரட்டாசி8 (24.09.2014) புதன் கிழமை 

23.09.2014  நள்ளிரவு 12.00 மணிகடந்து 30 நிமிடங்கள் ஆகிவிட்டது.
24.09.2014 மணி 00.30 ஆகும் போது இராமேசுவரம் வந்து சேர்ந்தோம்.
திருப்பூவணம் ஸ்ரீ பொன்னனையாள் அன்னதான அறக்கட்டளையின் சார்பாகத் திரு முத்துப்பாண்டி அவர்களும், திரு முத்துக்குமாரசாமி அவர்களும், திரு ஞானபண்டிதன் அவர்களும் மற்றும் பலரும் இராமேசுவரம் வந்திருந்து யாத்திரிகர்கள் ஒவ்வொருவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்றனர்.


பரமக்குடியிலிருந்து சில அன்பர்கள் சிலர் வந்திருந்து யாத்திரிகர்களை வரவேற்றனர்.


அதிகாலையில் இராமேசுவரத்தில் தீர்த்தமாடி, அருள்மிகு இராமநாதசாமியையும், அருள்மிகு மலைவளர்காதலி (பர்வத வர்த்தினி) அன்னையையும் வணங்கிக் கொண்டோம்.  யாத்திரிகர்கள் திருவேணி சங்கமத்தில் இருந்துகொண்டு வந்து கொடுத்த தீர்த்தத்தால் சுவாமிக்கும் அம்பாளுக்கும் காலைநேர அபிஷேகம் செய்தனர்.    யாத்திரிகர் அனைவரும் வழிபாடு செய்து உய்வடைந்தோம்.

காலை 8.18 மணிக்குக் காலைஉணவு.  மதுரை காசிஸ்ரீ கந்தசாமி அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் காலையுணவு வழங்கினார்.

காலை உணவு முடிந்த பின்னர் யாத்திரிகர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு அவரவர் ஊர்களுக்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள்.  மதுரை காசிஸ்ரீ கந்தாமி அவர்களை அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் வந்திருந்தனர்.  பரமக்குடி காசிஸ்ரீ பஞ்சவர்ணம், காசிஸ்ரீ கந்தசாமி மற்றும்  இராமநாதபுரம் காசிஸ்ரீ தாமோதரன் இவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். திருச்சிராப்பள்ளி காசிஸ்ரீ அங்கமுத்து, காசிஸ்ரீ கலியபெருமாள்,  இவர்கள் திருச்சி செல்லும் பயணிகள் வண்டியில் மதியம் புறப்பட்டுச் செல்லத் தயாராக இருந்தனர்.  பாண்டிச்சேரி தொப்பை என்ற கலியபெருமாள், மற்றும் சென்னை காசிஸ்ரீ தனசேகரன் இருவரும் மாலைநேரத்தில் புறப்படும் சென்னை விரைவு வண்டியில் புறப்படத் தயாராக இருந்தனர்.  
    திருவெறும்பூர் காசிஸ்ரீ சண்முகவேலு அவர்கள்  இரவு நேரத்தில் புறப்படும் சென்னை விரைவு வண்டியில் திருச்சிக்குப் புறப்படத் தயாராக இருந்தார்.

காலை 8.20 மணி 
காரைக்குடி அண்ணன் காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும், நானும் காரைக்குடிக்குப் புறப்படத் தயார் ஆனோம்.  எனது அண்ணனும் தம்பியும் தம்பிமகனும் இராமேசுவரம் வந்திருந்து எங்கள் இருவரையும் காரைக்குடிக்கு அழைத்துச் சென்றனர்.



எங்களுடன் நின்று கொண்டிருந்த, எனது மைத்துனர் திருப்பூவணம் திரு முத்துப்பாண்டி அவர்களிடமும், சென்னை காசிஸ்ரீ தனசேகரன் அவர்களிடமும், திருப்பூவணம் திரு முத்துக்குமாரசாமி மற்றும் திருப்பூவணம் ஞானபண்டிதன் இவர்களிடமும்  விடை பெற்றுக் கொண்டு,   மகிழுந்தில் காரைக்குடிக்குப் பயணம் ஆனோம்.

மதியம்  1.00 மணிக்குக் காரைக்குடி வந்து சேர்ந்தோம்.

24.05.2014 அன்று காலை வழிபாடு செய்து கொண்டு உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டிலிருந்து யாத்திரைக்காகக் புறப்பட்டு,  இறையருளால் பாதயாத்திரையை நிறைவு செய்து இராமேசுவரத்தில் மீண்டும் வழிபாடு செய்து, நான்கு மாதங்கள் கழித்து, இன்று 24.09.2014 அன்று மதியம் வீட்டிற்கு வந்து சேர்ந்து வழிபாடு செய்து கொண்டு மதிய உணவு சாப்பிட்டோம்.

இறையருளால் இராமேசுவரம்-காசி பாதயாத்திரையும்,  காசி-இராமேசுவரம் தொடர்வண்டியில் பயணமும் இனிதே நிறைவுற்றன.

அன்னதான வண்டியில் திரும்பி வந்து கொண்டிருக்கும் குருசாமி பச்சைக்காவடி அவர்களும், காசிஸ்ரீ  சரவணன் அவர்களும் 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

செவ்வாய், 22 செப்டம்பர், 2020

23.09.2014 காசி பாதயாத்திரை - 121 ஆம் நாள், புரட்டாசி 7

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து, காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம்.  

இன்று  121 ஆம் நாள் - புரட்டாசி7 (23.09.2014) செவ்வாய்க் கிழமை 

இராமேசுவரம் திருப்புதல் -  நேற்றும் இன்றும், காசி-இராமேசுவரம் தொர்வண்டியல்  இராமேசுவரத்திற்குப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் காசியில் இருந்து புறப்பட்டு அன்னதான வண்டியில் சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்தனர். குருசாமி அவர்கள் அவ்வப்போது எங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டார்.


காலை 6.46 மணிக்குத் தொடர்வண்டி  ஆந்திரா மாநிலம் நெல்லூர் வந்து சேர்ந்தது.   காசிஸ்ரீ சிவப்பா அவர்கள் அடுத்து கூடூர் சந்திப்பு (GUDUR JN) வந்ததும் இறக்கிக் கொள்வதாகவும்,  அங்கிருந்து பேருந்தில் அவரது ஊருக்குச் செல்வதாகவும் கூறினார்.  அவர் எங்களுடன் இராமேசவரம் வருவதற்கு விரும்பம் தான், ஆனால் இராமேசுவரத்தில் இருந்து மீண்டும் அவரது ஊருக்குத் திரும்புவதற்குத் தோதான பேருந்து வசதியோ, தொடர்வண்டி வசதியோ இல்லாத காரணத்தினாலும்,  அவருக்குச் சரியாகத் தமிழ் பேச வராத காரணத்தினாலும் அவர் கூடூரில் இறங்கிக் கொள்வதாகக் கூறினார். பின்னர் ஒருநாள் அவர் தனது நண்பருடன் சேர்ந்து இராமேசுவரம் வந்து வழிபாடு செய்து கொண்டு திரும்பிக் கொள்வதாகவும் கூறினார். 

காலை 8.16 மணிக்குத் தொடர்வண்டி கூடூர் வந்து சேர்ந்தது.
 

காசிஸ்ரீ சிவப்பா அவர்கள் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அனுமதி பெற்று,  கூடூர்  சந்திப்பில் இறங்கிக் கொண்டார்.  யாத்திரிகர் அனைவரும் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

காலை 11.00 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேர்ந்தோம்.

காசிஸ்ரீ மாதவன் அவர்கள்  யாத்திரிகர் அனைவருக்கும் சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்து கொடுத்தார்கள்.   காசிஸ்ரீ தனசேகரன் அவர்களின் துணைவியார் திருமதி தனசேகரன் அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் ரொட்டியும் தேநீரும் குளிர்பானங்களும் வழங்கினார்கள்.

மாலை 6.00 மணிக்குத் தொடர்வண்டி திருச்சிராப்பள்ளி வந்து சேர்ந்தது.  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களின் நண்பர்கள் பழங்களும் தண்ணீரும் வாங்கிக் கொடுத்தனர். 

இரவு 8.30 மணிக்குக் காரைக்குடியில் காசிஸ்ரீ காளைராசன் அவர்களது சம்பந்தி திரு. பழனியப்பன் அவர்கள் யாத்திரிகர் அனைவருக்கும் இரவு உணவும் தண்ணீரும் பழங்களும் வழங்கினார். 

நள்ளிரவுக்கு மேல் இராமேசுவரமும் சென்று சேர்வோம்.  நாளை புதன்கிழமை காலையில் இராமேசுவரத்தில் வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

திங்கள், 21 செப்டம்பர், 2020

22.09.2014 காசி பாதயாத்திரை 120 ஆம் நாள் - புரட்டாசி 6

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து, காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து,  தெய்வங்களை வணங்கி வந்தோம்.

இராமேசுவரம் திருப்புதல் -  நேற்று புரட்டாசி 5 (21.09.2014) அன்று காசியிலிருந்து தொடரியில் இராமேசுவரம் பயணம் ஆனோம். 

இன்று  120 ஆம் நாள் - புரட்டாசி 6 (22.09.2014) திங்கள் கிழமை.  

நாங்கள் தொடரியில் பயணம் செய்து கொண்டிருந்தோம்.

குருசாமி அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் காசியில் இருந்து புறப்பட்டு அன்னதான வண்டியில் சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தார்.   அவ்வப்போது எங்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துக் கொண்டார்.

காசி - இராமேசுவரம் தொடர் வண்டியில் உணவு வசதி இல்லை.  ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்திரத்தில் பயணத்தின்போது சாப்பிடுவதற்குத் தேவையான உணவைப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்திருந்தனர்.  பயணத்தின்போது இந்த உணவுப் பொட்டலங்கள் பசியைப் போக்கின.   ஆங்காங்கே கிடைத்த உணவுகளை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு பயணத்தில் இருந்தோம்.

பயணத்தின்போது பாதயாத்திரையாகச் சென்று தங்கியிருந்த ஊர்கள் ஏதேனும் வருகிறதா? என ஆர்வமாகக் கேட்டறிந்து கொண்டும், நடைப்பயணத்தின் போது நடைபெற்ற பலவேறு நிகழ்ச்சிகளையும் பேசி ஆராய்ந்து கொண்டே பயணம் மேற்கொண்டிருந்தோம்.  

நாளை செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்குச் சென்னை சென்று சேர்வோம்.  மாலை 6.00 மணிக்குத் திருச்சிராப்பள்ளியும், இரவு 8.30 மணிக்குக் காரைக்குடியும்,  நள்ளிரவு நேரத்தில் இராமேசுவரமும் சென்று சேர்வோம்.  புதன்கிழமை காலையில் இராமேசுவரத்தில் வழிபாடு.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

21.09.2014 காசி பாதயாத்திரை - 119 ஆம் நாள், புரட்டாசி 5

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 110 நாட்கள் பயணம் செய்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து கொண்டிருந்தோம். நேற்று அருள்மிகு காலபைரவர் கோயிலுக்குப் பாதயாத்திரை சென்று  வழிபாடு செய்து எங்களது பாதயாத்திரையை நிறைவு செய்தோம்.

இராமேசுவரம் திருப்புதல் -
இன்று  119 ஆம் நாள் - புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக் கிழமை.  

குருசாமி பச்சைக்காவடி அவர்களும்,  காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதானவண்டியில் திரும்பி வருவதாகவும், மற்றபிற யாத்திரிகர் அனைவரும் காசி-இராமேசுவரம் தொடரியில் பயணம் செய்வதாகவும் குருசாமி அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி மற்றபிற யாத்திரிகர் அனைவரும் மாலை 7.00 மணிக்குக் காசியில் இருந்து இராமேசுவரத்திற்குப் பயணம்.  நேற்று மாலை நேரத்தில் காலபைரவரைக் கும்பிட்டுவிட்ட காரணத்தினால் இனிமேல் அருள்மிகு காசி விசுவநாதர் உட்பட, காசியில் உள்ள பிற கோயில்களுக்குச் செல்ல வேண்டாம் எனக் குருசாமி அவர்கள் அறிவுரை வழங்கினார். 

காசியில் உள்ள கடைகளுக்குச் சென்று அவரவருக்கு வேண்டிய திண்பண்டங்களையும் மற்றபிற பொருட்களையும் வாங்கி மூடையாகக் கட்டி வைத்துப் பயணத்திற்கு அனைவரும் ஆயத்தமானார்கள்.   தொடரியில் படுக்கைக்குக் கீழே வைப்பது போன்று மிகவும் குறைவான உயரத்தில் மூடையாகக் கட்டி வைத்தனர்.

கீழே கடைகள்,  மாடியில் ஸ்ரீ பிரகஸ்பதி கோயிலும் இருந்தது.  கோயில் இடத்தில் கடையா? கடையின் மாடியில் கோயிலா? என்ற சிந்தனைகளுடன் கடைவீதியில் காசிஅல்வா, தேன்நெல்லி, காசி லட்டு, காசி மிட்டாய், அப்பளம் மற்றும் விளையாட்டுப் பொருட்களை வாங்கி வந்தோம்.

ஸ்ரீகாசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்திரத்தில் பயணத்தின்போது சாப்பிடுவதற்குத் தேவையான உணவைப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்.  பயணத்தின்போது இந்த உணவுப் பொட்டலங்கள் பசியைப் போக்கின.

மாலை 6.00 மணிக்குச் சுபஹோரை நேரத்தில் யாத்திரிகர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து காசி தொடரி சந்திப்பு நிலையத்தை அடைந்தோம்.   சரியான நேரத்தில் வண்டி புறப்பட்டது.  எல்லோரும் அவரவர் உறவினர்களுக்குத் தொலைபேசி வாயிலாக அவரவர் வருகையைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.  “காசிஸ்ரீ” என்ற பட்டத்துடன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்தனர்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

சனி, 19 செப்டம்பர், 2020

20.09.2014 காசி புனித பாத யாத்திரை நிறைவு நாள் - 118 ஆம் நாள், புரட்டாசி 4

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

காசி புனித பாத யாத்திரை நிறைவு நாள்
இன்று  118 ஆம் நாள் - புரட்டாசி 4 (20.09.2014) சனிக் கிழமை.  

யாத்திரிகர்களும் உறவினர்களும் காசிமாநகரில் உள்ள சிறப்பான இடங்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தனர் .

காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிர்லா விஸ்வநாதர் கோயில் (பிர்லா மந்திர்).   சங்கட் மோட்சன் - ஆஞ்சநேயர் கோயில். இங்கு சுத்தமான நெய்யில் சுவையான லட்டு விற்பனை செய்கின்றனர்.   துளசிதாசரின் ‘மானஸ் மந்திர்’.  துர்க்கா குண்ட் (துர்க்கை கோயில்).   ஹனுமான் காட்டிலுள்ள சிவன் கோயில் முதலான இடங்களுக்குச் சென்ற வந்தனர்.











குடிமாதா (சோழி மாதா) கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துகொண்டு நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.   மதிய உணவு.

காசியில் காலபைரவர் வழிபாடு - மாலை 3.20 மணிக்கு யாத்திரிகர் அனைவரும் காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாத யாத்திரையாக  2 கி. மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயில் சென்று வழிபாடு செய்து, அருள்மிகு காலபைரவரின் திருவருளைப் பெற்றோம். 

இத்துடன் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை இனிதே நிறைவு பெற்றது.

நாளை இரவு தொடர்வண்டியில் இராமேஸ்வரம் பயணம் .
24.09.2014 அன்று இராமேஸ்வரம் கோயிலில் புனித கங்கை அபிஷேகம் வழிபாடு.  

இந்த யாத்திரையில் மானசீகமாக என்னுடன் பயணித்த அன்பர் அனைவருக்கும் திருவருள் சித்திப்பதாக .

அருள்மிகு திருப்பூவணநாதர் மின்னாள் திருவருளைச் சிந்தித்து, குருஜி பச்சைக்காவடி அவர்களின் பாதம் பணிந்து ,
அருள்மிகு காசி விசுவேசுவர், காசி விசாலாட்சி, காசி அன்னபூரணி, காசி காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருள் 
சித்திப்பதாக .....

அன்பன்
காசிஶ்ரீ,  முனைவர், நா.ரா.கி. காளைராசன் .

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

19.09.2014 காசிஸ்ரீ பட்டம் பெறுதல் - காசி பாதயாத்திரை 117 ஆம் நாள், புரட்டாசி 3

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

காசிஸ்ரீ பட்டம் பெறுதல்
இன்று  117 ஆம் நாள் - புரட்டாசி 3 (19.09.2014) வெள்ளிக் கிழமை.  தினசரி காலைவழிபாட்டை முடித்து, காலை உணவு சாப்பிட்டு முடித்ததோம். சுப ஓரை நேரம் தொடங்கியதும் சுமார் 10.00 மணிக்குக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு காசிதேவஸ்தான அலுவலகத்திற்குச் சென்றார்.

காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள் வெறொரு பணி காரணமாகச் சென்றிருந்தார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்களும்,  காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் அவர் பணியில் இருக்கும் இடத்திற்குச் சென்று பார்த்து வந்தனர்.  மதியம் 12.30 மணி ஆகிவிட்டது.  யாத்திரிகர்கள் வந்து காத்திருப்பதைத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவித்தனர்.  அதற்கு அவர்,  யாத்திரிகர்களை மதியம் சாப்பிட்டுவிட்டு வருமாறும்,  அதற்குள் தானும் திரும்பி வந்து விடுவதாகவும் கூறினார்.  எனவே குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்ளை அழைத்துக் கொண்டு சத்திரத்திற்கு வந்து மதிய உணவு சாப்பிட்டுவிட்டு மீண்டும் தேவஸ்தான அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

‘காசி தேவஸ்தான அலுவலகத்தின் நிர்வாக முதன்மைச் செயல்அலுவலர் அவர்கள்’ மதிய உணவு நேரத்திற்குப் பின்னர் அலுவலத்திற்கு வந்திருந்தார்.  மதியம் 1.00 மணி முதல் 3.00 மணிவரை சுபஓரை நேரம் என்பதால்,  அந்த சுபஓரை நேரத்தில் குருசாமி பச்சைக்காவடி அவர்களை முதலாவதாக அழைத்துக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார்.   
குருசாமி பச்சைக்காவடி அவர்களைத் தொடர்ந்து  யாத்திரிகர் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களுக்கு உரிய “காசிஸ்ரீ” பட்டத்தை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.   

அந்த நிமிடத்தில் இருந்து யாத்திரிகர் அனைவரும் அருள்மிகு காசி விசுவநாதார், அருள்மிகு காசி விசாலாட்சி, அருள்மிகு காசி அன்னபூரணி மற்றும் காசியில் உறைந்துள்ள அனைத்துத் தெய்வங்களின் திருவருளால்  “காசிஸ்ரீ” என்ற சிறப்புப் பட்டம் பெற்றவர்கள் ஆனோம்.

குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு இது 11ஆவது பாதயாத்திரை யாகும்.  எனவே அவருக்கு இதற்கு முன்னர் வழங்கப் பெற்றுள்ள 10 சான்றிதழ்களையும் சரிபார்த்து, அந்தப் பத்துச் சான்றிதழ்களையும் ஒன்றாக்கி, அத்துடன் இந்த 11ஆவது பாதயாத்திரையும் சேர்த்து மொத்தமாக ஒரே சான்றிதழாகக் காசிஸ்ரீ பட்டம் வழங்கினார்.   இதனால் குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு வழங்கிப்பெற்ற காசிஸ்ரீ சான்றிதழில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பெற்ற காசிஸ்ரீ பட்டங்கள் தொடர்பான வாசகம் இடம் பெற்றிருந்தது.

இராமேசுவரம் - காசி பாதயாத்திரை மேற்கொண்ட யாத்திரிகர் அனைவரும் பெரிதும் மகிழ்ந்து, குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் முதன்மைச் செயல்அலுவலர் அவர்களையும் வணங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

தினசரி இரவு வழிபாட்டை முடித்து, இரவு உணவு சாப்பிட்டு முடித்த பின்னர்,  யாத்திரிகளும், சமையல் பணியாளர்களும், உறவினர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தோம்.


இரவு 8.17 மணி

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக.....

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 17 செப்டம்பர், 2020

18.09.2014 காசி யாத்திரை - 116 ஆம் நாள், புரட்டாசி 2

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 116 ஆம் நாள் - புரட்டாசி 2 (18.09.2014) வியாழக் கிழமை.

பல்குனி ஆற்றின் கரையில் உள்ள புனித விஷ்ணு கயாவில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும் என  அதிகாலையில் எழுந்து யாத்திரிகர் பலரும்  இன்று கயாவிற்குப் பயணம் ஆனோம். குருசாமி பச்சைக்காவடி அவர்களும் மற்றும் சில யாத்திரிகர்களும் காசியிலேயே தங்கியிருந்தனர்.

காலை 7.31 
வண்டியில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டே பயணம் செய்தோம்.  காசி முதல் கயா வரையில் சுமார் 250 கி.மீ. தொலைவிற்கும் சிமிண்டில் நான்குவழிச் சாலை அருமையாகப் போட்டுள்ளனர்.  அலுப்பில்லாத பயணம்.  தீடிரென வண்டியின் வேகம் வெகுவாகக் குறைந்தது.  கண் விழித்துப் பார்த்தால் 7.30 (ஏழரை) மணி. ஏழரைபோல் லாரி ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.   நல்லவேளை ஓட்டுநர் திறமையால் தப்பித்தோம்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு, சற்று நன்கு முழித்துப் பார்த்தால், எங்களது வண்டியின் ஓட்டுநர் வண்டியை வலதுபக்க (ஒருவழி)ச் சாலையில் ஓட்டி வருகிறார் என்பது புரிந்தது.  ஒருவாராக அவருக்குப் புரியும்படிப் பேசி, வண்டியை இடபுறம் உள்ள சாலையில் செலுத்தச் செய்து பயணத்தைத் தொடர்ந்தோம்.


258 km
https://goo.gl/maps/CP3CPehKM8uvqMWW8


பகல் 10.01 
காலை 10.00 மணிக்கு கயாவில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம்.  

பகல் 10.02

சத்திர நிர்வாகி எங்களை வரவேற்றார்.  எங்களுக்கான காலை உணவை எடுத்து வைத்திருந்தினர்.  சிலர் தர்பணம் கொடுத்தபின்னர் சாப்பிட்டுக் கொள்ளலாம் எனக் காலை உணவு சாப்பிட வில்லை.

பகல் 10.09
சத்திரத்தில் தங்குவதற்கும் குளிப்பதற்கும் துவைப்பதற்கும் வசதிகள் இருந்தன.

பகல் 10.37 

10.30 மணிக்கு பல்குனி ஆற்றிற்குத் தர்பணம் கொடுப்பதற்காகச் சென்றோம்.   சத்திரத்தில் இருந்து பாண்டாக்களுக்கு அலைபேசியில் பேசித் தகவல் சொல்லிவிடுகின்றனர்.  எனவே தர்பணம் கொடுப்பதற்குப் பாண்டாக்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.

மணி 11.41 

தர்பண காரியங்கள் செய்வதற்காக தென்னிந்தியருக்கு தனியாக இடவசதி உள்ளது. உடிப்பி பட்கள் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியருக்கு ஏற்பாடு செய்யும் பண்டாக்கள் அருமையாகத் தமிழ் பேசுகிறார்கள்.   

தர்பணம் செய்யும் இடத்தில் தமிழர் கூட்டம் அதிகம் இருந்தது.

கயாவில் தர்ப்பணம் செய்யும்போது அம்மாவுக்காகத் தனியாக 12 பிண்டங்கள் வைக்கின்றனர்.  அப்பொழுது தாயானவள் அவளது குழந்தைகளுக்காக என்னென்ன வேதனைகளை அனுவித்திருப்பாள் என்று விவரித்து,  தனக்காகப் பட்ட ஒவ்வொரு வேதனைக்கும் ஒவ்வொரு பிண்டம் வைக்கும்போதும் நம் விழிகளில் தானாகவே நீர் பெருக்கெடுக்கும்.  

கயாவிலும் பத்ரியிலும் ஸ்ராத்தம் செய்தபோதும்,  வருடாவருடம் செய்யும்  “வர்ஷச்ராத்தம்” விடுபடக்கூடாதென்றும், அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் பாண்டா விளக்கம் கூறினார்.

மணி 12.36 
பல்குனி ஆறு தெற்கிலிருந்து வடக்காகப் (உத்தரவாகிணியாகப்) பாய்ந்து செல்கிறது.  ஏராளமானோர் அவரவர் முன்னோர் பொருட்டுத் தர்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.   தர்பணம் கொடுத்தபின்னர் இங்குள்ள விஷ்ணு கோயிலில் அட்சயவடத்தில் வழிபாடு செய்துகொண்டோம்.

இங்கிருந்து புறப்பட்டு ஹரித்வார் வழியாக பத்ரி சென்று, அங்கும் அலக்னந்தா கரையில் ஸ்ராத்தம் செய்கின்றனர். பிரம்ம கபாலத்தில் பிண்டம் கொடுக்கலாம் என்றனர்.   ஆனால் நாங்கள் அதற்கான ஏற்பாடுகளுடன் வரவில்லை.  இன்றே காசிக்குத் திரும்பிச் செல்ல வேண்டி இருந்த காரணத்தினால் நாங்க்ள் அலக்னந்தா செல்லவில்லை.

நகரத்தார் சத்திரத்தில் மதிய உணவு.  
அதன்பின்னர் புத்தகயா சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
அங்கிருந்து பயணமாகி காசிக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


புதன், 16 செப்டம்பர், 2020

சுனார் ஊரும் பேரும் - சுனார், चुनार, Chunar

சுனார் ஊரும் பேரும் - சுனார் ( चुनार, Chunar ) 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காசிக்குத் தெற்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள மிகவும் தொன்மையான நகரம் “சுனார்”.  

“சுனார்” என்றால் என்ன பொருள்?

சுனார் ஊரும் பேரும் - சுனார் ( चुनार, Chunar ) என்ற பெயர்ச் சொல்லிற்கு இந்தியில் பொருள் இல்லை.   ‘னா’ என்ற நெடில் எழுத்திற்குப் பதிலாக ‘ன’ குறில் எழுத்து  எழுதிச் “சுனர் ( चुनर )” என்று உச்சரித்தால் இந்தியில் கழுதில் அணியும் தாவணி (scarf) என்று பொருளாம்.   சுனர் என்ற உருதுச் சொல்லுக்கு (چَنار )  மாப்பில் மரம் (maple tree) என்று பொருள் என்றும் கூறுகின்றனர்.   

விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரம் என்று பெயரிடப்பட்டது. குடியரசை ஸ்தாபிப்பதற்கான முதல் கட்டத்தின் (ஆதி கட்டம்) இந்த சுனார் பகுதி என்பதால், அதற்கு சரணாத்ரி என்று பெயரிடப்பட்டது, இது சரியான நேரத்தில் சுனார் ஆனது.

நகரின் மேற்கே சுனார் மலைக்கோட்டையும் அதையடுத்து கங்கைநதியும் உள்ளன.   கங்கையின் கிழக்குக் கரையில் உள்ளதுசுனார் நகரம். மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்ந்து வரும் கங்கைநதி சுனார் வந்தவுடன் திசைமாறி வடக்கு நோக்கி ஓடிப் புனித காசிக்குச் செல்கிறது.   


இங்குள்ள மலைக்கோட்டை கி.மு. 56ஆம் ஆண்டு உஜ்ஜைனியை ஆண்ட புகழ்பெற்ற மாமன்னன் விக்ரமாதித்தனால் கட்டப்பட்டது. இது இந்தியாவில் உள்ள மிகவும் தொன்மையான கோட்டைகளுள் ஒன்றாகும்.  முனிவர்கள், மகரிஷிகள், துறவிகள், மகாத்மாக்கள், யோகிகள், சந்நியாசிகள், எழுத்தாளர்கள் போன்றவர்களை ஈர்க்கும் ஒரு தொன்மையான நகரமாகச் சுனார் விளங்கி வருகிறது.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் “சுனார்” என்ற ஊரின் பெயரானது மேற்கண்ட எந்தவொரு சிறப்புடனும் பொருந்திடாமல், பொருளற்ற சொல்லாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தொழில்  அடிப்படையில் இந்த ஊருக்கு மற்றொரு சிறப்பும் உள்ளது.  இங்கு
சீனாக்களிமண்ணால் செய்யப்படும் பொருட்கள் மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.  



 இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்தப் பொருட்கள் கங்கை வழியாகக் கல்கத்தா கொண்டு செல்லப்பெற்று கடல்வழியாக அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.   

சுனார் என்ற சொல்லைத் தமிழில் “சுண்ணார்” என்று தமிழில் உச்சரித்தால் மிகவும் பொருள் பொதிந்த சொல்லாகிறது.  சுண்ணார் என்ற தமிழ்ச் சொல்லிற்குச் “சுண்ணம் ஆர்த்த, சுண்ணம் நிறைந்த” என்று பொருளாகிறது.  சுண்ணார் என்றால் வெள்ளைநிறத்தில் சுண்ணாம்பு போன்ற மண் நிறைந்த இடம் என்று பொருளாகிறது.  

(1) அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு - கலி 97/10,  (2) சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் - தேவா-சம்:3364/2, (3) சுண்ண பொன் நீற்றற்கே சென்று ஊதாய் கோத்தும்பீ - திருவா:10 4/4, எனத் தமிழ் இலங்கியங்களில்   சுண்ணம் என்ற சொல் மிகுதியப் பயன்படுத்தப் பெற்றுள்ளது.

இந்த ஊரில் மிகுதியாகக் கிடைக்கும் வெண்ணிற மண்பொடியுடன் தொடர்புடையதாக “சுண்ணார்” என்ற காரணப் பெயரைத் தமிழர் இந்த ஊருக்குப் பெயராகச் சூட்டியிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

மேலும் இந்த ஊரில் ஈஸ்வர்பட்டி தம்மன் பட்டி அரசி மிசிர்பூர் என்ற 


ஈஸ்வர்பட்டி  https://goo.gl/maps/x6iMZekgRcrbhccL9
https://villageinfo.in/uttar-pradesh/mirzapur/chunar/ishwarpatti.html

சுனார் கோட்டை https://goo.gl/maps/LUPd4yj4xy1yzgvo7

தம்மன் பட்டி https://goo.gl/maps/yFFp8RDouCbexjgLA

அரசி மிசிர்பூர் https://goo.gl/maps/XAoFaHNtAEXv1Ai8A

சக கரியரி https://goo.gl/maps/F12Z7cyYhfKyg5pt5
கழிய https://goo.gl/maps/ZrQkRGRoK3ANqQqG8


மின்கம்பங்களில் பயன்படுத்தப்படும் சீனாக்களிமண்ணால் செய்யப்பட்ட மின்தாங்கிகள் இங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.  இங்குள்ள தொழிற்சாலையில் உற்பத்தியாகும் இந்த குப்பிகளே தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.  இங்கிருந்து இந்தக் குப்பிகளை ஏற்றிச் செல்வதற்காகத் தமிழகத்தில் இருந்து லாரிகள் இங்கு வருகின்றன.

12.33 pm

12.35 pm


12.38 pm

முதல் குடியாட்சி நாடு -
  சுனார் நகருக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது.  உலககெங்கும் முடியாட்சி நடைபெற்ற காலகட்டத்தில், இந்தியாவில் சுனாரில்தான் குடியாட்சி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு சந்நியாசி குடியாட்சி முறையைத் தோற்றுவித்துச் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார்.  அவர் பாலி மன்னரிடம் நிலம் வழங்குமாறும் அதில் குடியரசு அமைத்துக் கொள்ளவும் அனுமதி கேட்டுள்ளார். சிறிதளவு நிலத்தில் ஒரு சமூக குடியரசை நிறுவுவது தனது ஆட்சியைப் பாதிக்காது என்று மன்னர்  உறுதியாக நம்பி இருக்கிறார்.  ஆகையால் ராஜா அந்தச் சந்நியாசிக்குச் சிறிதளவு நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். தானம் பெற்ற அந்த இடத்தில் அவர் ஒரு சுயாதீனமான, மகிழ்ச்சியான, ஸ்வராஜ் அடிப்படையிலான சமூக குடியரசை நிறுவினார் மற்றும் அவரது செல்வாக்கு படிப்படியாக அதிகரித்தது, மேலும் அவர் பாலி மன்னரின் ஆட்சியை ஒழித்தார், மேலும் சமூகம் அல்லது குடியரசு நிறுவப்பட்டது. இந்த மனிதன் குள்ளன், அந்தஸ்தில் குறுகியவனாகவும், இயற்கையிலும் அறிவிலும் பிராமண குணங்களுடனும் இருந்ததால், சரியான நேரத்தில் அதற்கு விஷ்ணுவின் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரம் என்று பெயரிடப்பட்டது. குடியரசை ஸ்தாபிப்பதற்கான முதல் கட்டத்தின் (ஆதி கட்டம்) இந்த சுனார் பகுதி என்பதால், அதற்கு சரணாத்ரி என்று பெயரிடப்பட்டது, இது சரியான நேரத்தில் சுனார் ஆனது. முதல் கட்டம் அமைந்துள்ள நிலம் ஒரு கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விந்தியாவின் அழகிய மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த மலை ஒரு மனித மேடை போல வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நமது பண்டைய புவியியலாளர்கள் தங்கள் ஆய்விலிருந்து கண்டுபிடித்துள்ளனர்.

விந்தியா மலைத்தொடரின் இந்த மலையில்தான் ஹரித்வாரில் இருந்து சமவெளிகளில் ஓடும் கங்கை மற்றும் சுனார் கோட்டை அமைந்துள்ள விந்தியா மலைத்தொடருடன் சங்கமிக்கிறது. ஸ்ரீ ராம் இங்கிருந்து கங்கையைத் தாண்டி வெளியேறிய நேரத்தில் சித்ரக்கூட்டுக்குச் சென்றதாக பல இடங்களில் விளக்கம் உள்ளது. தந்தை கமில் புல்கேவின் "ராம் கதா: தோற்றம் மற்றும் மேம்பாடு" என்ற ஆராய்ச்சி புத்தகத்தின்படி, கவிஞர் வால்மீகியின் தபஸ்தாலி மட்டுமே சுனார், எனவே சில சமயங்களில் இது சந்தல்கர் என்றும் அழைக்கப்படுகிறது. இது நைநகர் காரணமாக பார்த்ரிஹரி நகரம் என்றும், பட்டர்கரின் தபஸ்தாலி காரணமாக பாரத்ரிஹரி என்றும், கற்களால் நைனா யோகினி என்றும் அழைக்கப்படுகிறது.

1531 ஆம் ஆண்டில், பாபரின் மகன் ஹுமாயூன் ஷெர் ஷாவின் ஆக்கிரமிப்பை இணைக்க உத்தரபிரதேசத்தில் உள்ள சுனர்கர் கோட்டையை முயற்சித்தார். ஆனால் அவர் மோசமாக தோற்கடிக்கப்பட்டார். 1574 ஆம் ஆண்டில் ஷெர் ஷா சூரி இறந்தபோது பேரரசர் அக்பர் சுனர்கர் கோட்டையைக் கைப்பற்றினார். உத்தரபிரதேசத்தில் சுனர்கர் கோட்டை 1772 வரை முகலாய பேரரசர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது, ஆனால் பின்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி உத்தரபிரதேசத்தில் உள்ள சுனர்கர் கோட்டையை முகலாயர்களிடமிருந்து கைப்பற்றியது.

உத்தரபிரதேசத்தில் உள்ள சுனர்கர் கோட்டை கட்டடக்கலை பாணியின் சிறந்த கலவையை குறிக்கிறது. சுனர்கர் கோட்டை உத்தரபிரதேசத்திற்குள் ஈர்க்கக்கூடிய கட்டமைப்புகளுடன் வருகிறது. இறந்த சண்டியல் இன்று அங்கு கட்டப்பட்டுள்ளது, அநேகமாக மன்னர் விக்ரமாதித்யாவின் மேற்பார்வையில். சுங்கர்கர் கோட்டை கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.