செவ்வாய், 1 செப்டம்பர், 2020

02.09.2014 காசி பாதயாத்திரை - 100 ஆம் நாள், ஆவணி 17

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று முன்தினம் 31.08.2014  கட்னி என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.  நேற்று 01.09.2014 முழு ஓய்வு.

இன்று 100 ஆம் நாள் - 02.09.2014 ஆவணி 17  செவ்வாய்கிழமை. 

தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 2.15 க்கு கட்னி என்ற ஊரில்   இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.

காலை 4.00 மணிக்கு தூறல் ஆரம்பித்து 6.00 மணிக்கு நல்ல மழை பெய்தது. அனைவரும் குடை பிடித்துக்கொண்டு நடந்தோம்.

சமவெளி. வளமான பூமி.

இதில் पाटाल का सन्यासी (Paidhal பைடல் கா சன்னிசி) என்று எழுதப்பெற்றுள்ளது.  पाटाल (Paidhal பைடல்) என்ற சொல் பாதசாரி (pedestrian) என்று பொருள்.  पाटाल का सन्यसे என்றால் “பாதசாரியாகச் செல்லும் சந்நியாசி” என்று பொருள் கொள்ளலாம்.

“பாதாளத்தின் சன்யாசி” என்று எழுதியுள்ளது என்று இந்தி அறிந்த அன்பர்கள் இதை வாசித்து அளித்துள்ளனர்.  அவர்களுக்கு நன்றி.

6.30 am

N.H.7 தேசிய நெடுஞ்சாலை இன்னும் முழுமையாக விரிவுபடுத்தப்படவில்லை. சாலைஆங்காங்கே குண்டுங்குழியுமாக இருந்தது.

நடந்து செல்லும்போது சாலையின் ஓரங்களில் களிமண் வழுக்கியது. நூற்றுக்கணக்கான பசு மாடுகள் ஆங்காங்கே சாலையில் படுத்துக் கிடந்தன.

சாலை வளைவு நெளிவு இன்றி நேர் கோட்டில் இருந்தது.

இருமருங்கிலும் நீண்ட நெடிய மலைத்தொடர்கள் உள்ளன.

சாலையின் ஓரங்களில் மிகவும் பழையான முது மரங்கள் நிறைந்துள்ளதைக் காண்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

7.13 am
"எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்தோம், எல்லோரும் ஒருதாய்ப் பிள்ளைகள்". 

கெம்தலை (Kemtalai) என்ற ஊரின் வழியாக காலை மணி 7.00 அளவில் சென்றோம்.    இந்த ஊரில்  சமையல் எரிபொருள் "லீக்கோ"கரி தயாரிக்கும் சிறு தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன.   நிலக்கரி போன்றதொரு அடுப்புக்கரி (லீகோ) உற்பத்தி செய்கின்றனர். இந்த லீகோ அடுப்புக்கரி 1964-68 ஆண்டுகளில் எங்களது வீட்டில் பயன்படுத்தியதைப் பார்த்துள்ளேன். 

லீகோ அடுப்புக்கரி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த இருவர் அதிகாலை நேரத்தில் எங்களைப் பார்த்தனர். 

 அதில் ஒருவர்  வேகவேகமா ஓடிச் சென்று ரொட்டியும் மிக்சரும் வாங்கிக் கொண்டு வேகவேகமாக ஓடி வந்து யாத்திரிகர்களிடம் கொடுத்தார்.  இருவரும் யாத்திரிகர்களின் பாதங்களை வணங்கி மகிழ்ந்தனர். 

யாத்திரிகர்கள் நடந்து செல்லும் போது தலைக்குமேலே இரண்டு கைகளையும் கூப்பிக் கும்பிட்டனர்.      அவர்கள் இருவரும் மனம் கசிந்து உருகி யாத்திரிகர்களை வணங்கியதை  மற்றபிற யாத்திரிகர்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை.  படம் எடுப்பதற்காக நான் பார்த்த போது, அவர்கள் தலைக்குமேலே குப்பிய கையுடன் நிற்பதைக் கண்டதும் மனம் மிகவும் நெகிழ்ந்து போனேன்.




7.39 am

வழியில் ரொட்டியும் தேநீரும்.


7.42 am

8.19 am

8.46 am

8.56 am
வழியில் சாலையோரம் இருந்த கிராம தெய்வக் கோயில் வளாகத்தில் காலை உணவு.
9.25 am

9.46 am

9.46 am

10.07 am

10.17 am

10.29 am

10.37 am
மத்தியப்பிரதேசத்தில், பதரகதா (पथरहटा,  Patharahata ) என்ற ஊரில்  நவராத்திரி விழாவின் போது வழிபாட்டிற்காகத் துர்கையின் வடிவங்களை ஓர் இளைஞர் செய்து கொண்டிருந்தார்.  தமிழ்நாட்டில்  பெரியபெரிய பிள்ளையார்சிலைகளைச் செய்தவற்காகப் “பிளாஸ்டர் ஆப் பாரிஸ்” பயன்படுத்துகின்றனர்.   ஆனால் இங்கே  கம்பு வைக்கோல்  களிமண் என்ற மூன்றையும் பயன்படுத்தி இயற்கையான முறையில் சுற்றுச்சுழலுக்குச் சிறிதும் பாதிப்பு இல்லாத வகையில் பெரிய பெரிய துர்கை பொம்மைகளைச் செய்கின்றனர்.

10.37 am

11.20 am

எக்கரவாரா என்ற ஊர்கள் வழியாக, பகாரியா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.

11.25 am

பகரியா கிராமத்தில் உள்ள அடியார் ஒருவர் சாலையோரம் நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும், யாத்திரிகர்களையும் வரவேற்று அழைத்துச் சென்றார்.

11.30 am

02.33 pm

02.33 pm

பகரியா கோயில் வளாகத்தில் ஓய்வு.  கோயில் இடத்தில் பள்ளிக்கூடம் உள்ளது.  கோயில் வளாகமே பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்திடலாகப் பயன்படுத்தப்படுகிறது.

மதிய உணவு.
உணவிற்குப் பிறகு,  2.30  மணிக்கு அங்கிருந்து யாத்திரையைத் தொடர்ந்தோம்.


5.10 pm
மாலை 5.10 க்கு அம்தரா என்ற ஊர்  வந்து சேர்ந்தோம்.

மாலையிலும் மழை பெய்தது.

அம்தராவில் உள்ள அன்பர் ஒருவர்  யாத்திரிகர்களை வரவேற்று தங்குவதற்கு இடம் கொடுத்தார்.

இரவு உணவு.  ஓய்வு.

இல்லையென மாட்டார் இசைந்து -  கனமழை பெய்தது.  சாலையில் ஓடிய மழைநீர் யாத்திரிகர்கள் தங்கியிருந்த இடத்திற்குள் வந்துவிட்டது.    சணல் சாக்குகளைக் கொண்டு வந்து மழைநீர் தேங்கி நின்ற இடங்களில் போட்டார்கள்.  அதனால் அந்த அறையில் படுத்திருந்த யாத்திரிகர்கள் அடுத்துள்ள அறையில் படுத்திருந்த யாத்திரிகர்களுடன் ஒண்டி முண்டிப் படுத்துக் கொண்டனர்.
        நானும் காசிஸ்ரீ சிவப்பாவும் சாலையோரம் இருந்த ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தங்கமுடியுமா? எனச் சென்று பார்த்தோம். ஆனால் கோயில் பூட்டப்பட்டிருந்து.  கோயில் அருகே இருந்த வீட்டின் வெளித் திண்ணையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்டோம்.  அவர்கள் வீட்டின் கதவைத் திறந்துவிட்டு, வீட்டிற்குள் உள்ள முன் அறையில் படுத்துக் கொள்ளச் சொல்லி மேஜைமின்விசிறி ஒன்றை வைத்து வசதி செய்து கொடுத்தனர். நாங்கள் இருவரும் அந்த வீட்டிலேயே படுத்துத் தூங்கிக் காலையில் 2.00 மணிக்கு எழுந்து அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மற்ற யாத்திரிகர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.   மழை தூறிக்கொண்டே இருந்தது.


https://goo.gl/maps/JTGhYn2mYKFJXVHF8

பயண தூரம் 44 கி.மீ.

இங்கிருந்து காசி 328 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக