திங்கள், 7 செப்டம்பர், 2020

08.09.2014 காசி பாதயாத்திரை - 106 ஆம் நாள், ஆவணி 23

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று 06.09.2014  மௌகஞ் வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.

இன்று 106 ஆம் நாள் - 08.09.2014 ஆவணி 23 திங்கள் கிழமை.

யாத்திரிகர் அனைவரும்  அதிகாலை 3.00 மணிக்குத்  தினவழிபாட்டை முடித்துக் கொண்டு மௌகஞ் ஊரில்  இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.  

6.20 am
சுமார் 10அடி விட்டம் கொண்ட அரசமரம்.  அதனடியில் ஒரு பிள்ளையார்கோயில்.  சாலை விரிவாக்கத்திற்காக இந்த விருட்சத்தை வெட்டிவிடாமல் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.

6.35 am

6.37 am

6.45 am
6.49 am
மரங்கள் நிறைந்த வயல்களில்  ஏராளமான பச்சைக்கிளிகள் பறந்து திரிந்தன.   பச்சைக்கிளிகளின் கூட்டத்தைக் கண்டதும் “மீனாட்சி மீனாட்சி” என்று குருசாமி அவர்கள் கும்பிட்டுக் கொண்டார்.

7.14 am
நீண்ட நேரம் ஆகியும் அன்னதான வண்டி வருவதற்குக் காலதாமதம் ஆனது.  ஓய்து இருந்த யாத்திரிகர் இருவர் படுத்துத் தூங்கி விட்டனர்.  மற்றவர்கள் மிகவும் களைத்து அயர்ந்து போய் அமர்ந்து இருந்தனர்.


7.15 am
7.51 am
காலை 7.45 மணிக்கு அன்னதான வண்டி வந்து சேர்ந்தது.  யாத்திரிகர்கள் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.

7.52 am

8.05 am

8.20 am
தமிழ்நாட்டில் கிராமங்களில் இருந்தது போன்று, மூங்கில் வேய்ந்து நாட்டுஓடு போடப்பட்ட வீடு ஒன்றைச் சாலையோரம் கண்டோம்.

9.02 am
கையால் எட்டி முகக்கும் அளவில் கிணற்றில் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது.   யாத்திரிகர்கள் இதை ஆச்சரியமாகப் பார்த்துச் சென்றோம்.

9.03 am
இங்கிருந்து காசி 150 கி.மீ.

9.34 am
காலை 9.15 மணிக்குச் சாலையோரம் அமர்ந்து காலைஉணவு.

9.41 am


10.29 am



காலை 10.30 மணிக்கு அனுமானா வந்து சேர்ந்தோம். பாதயாத்திரையாக வருகிறார்கள் என்ற செய்தியை அறிந்த ஒரு பெரியவர்  அனுமானா ஊர் எல்லையில் நின்று யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் வழங்கி வரவேற்றார்.  

ஊரார் அனுமன் கோயிலில் வரவேற்பு வழங்கினர்.

10.32 am

10.48 am
அனுமான் கோயில் பட்டாச்சாரியார் தேசியநெடுஞ்சாலைக்கு வந்து நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.



பாதை காட்டிய பாட்டி - அனுமன் கோயிலுக்கு யாத்திரிகர்கள் வரிசையாகச் சென்று கொண்டிருந்தோம்.  சாலையின் ஓரத்தில் பலகாரம் விற்றுக் கொண்டிருந்து ஒரு பாட்டி என்னிடம் நீங்கள் எல்லாம் எங்கு செல்கின்றீர்கள்? என்று கேட்டார். இராமேசுவரத்திலிருந்து பாதயாத்திரையாகக் காசிக்குச் செல்கிறோம் என்று சொன்னேன்.  அவ்வளவுதான், அந்தப் பாட்டி எழுந்து ஓடோடி வந்து, ஏதேதோ இந்தியில் சொல்லி, நடந்து செல்லும் யாத்திரிகர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தி,  வந்தவழியே திரும்பிச் செல்லுமாறு கையைக் காட்டினார்.  அவர் என்ன சொல்ல வருகிறார் எனச் சரியாக எங்களுக்கு விளங்கவில்லை.  ஆனால் திரும்பிப் போகுமாறு கூறுகிறார் என்பது மட்டும் விளங்கியது.     நான் பேசுவது அவருக்குச் சரியாகப் புரியவில்லை, அவர் சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை. 

    அப்போது அந்த ஊரில் அன்பர் ஒருவர் வந்து அந்தப் பாட்டியிடம் விளக்கம் சொன்னார்.  இந்தப் பாதையானது காசிக்குப் போகும் பாதையில்லை,  காசிக்குப் போக வேண்டுமென்றால், நீங்கள் வந்தவழியே திரும்பிச் சென்றால், மெயின்ரோடு வரும், அதில் வலதுபுறமாகத் திரும்பிச் செல்லவேண்டும்.   அதுதான் காசிக்குச் செல்லும் பாதை,  எனவே திரும்பிச் செல்லுங்கள் என்று பாட்டி கூறுகிறார் என்ற விளக்கினார்.

அந்தப் பாட்டியிடம் நாங்கள் காசிக்குத்தான் சென்று கொண்டிருக்கிறோம்.  ஆனால் இன்று இங்குள்ள அனுமான் கோயிலுக்குச் சென்று அங்கே தங்கி ஓய்வு எடுப்போம்.   நாளை காலை நேரத்தில் புறப்பட்டுக் காசிக்குப் பயணத்தைத் தொடர்வோம் என்று விளக்கமாகச் சொன்னோம்.  இந்த விளக்கத்தைக் கேட்ட அந்தப் பாட்டியின் பதட்டம் தணிந்து, அசட்டுச் சிரிப்புச் சிரித்தார்.  யாத்திரிகர்களை வணங்கிக் கொண்டு, அவரது கடைக்குச் சென்று வியாபாரத்தைக் கவனிக்கச் சென்று விட்டார். 

பாதை காட்டிய பாட்டிக்கு நன்றி சொல்லிக் கொண்டு அனுமன் கோயிலுக்குச் சென்று சேர்ந்தோம்.


10.59 am


11.00 am




யாத்திரிகர்கள் அனுமான் கோயிலில் தங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தனர்.   https://goo.gl/maps/AWoj2vS2cv6TV13T8

05.37 pm

ஊரார் பலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களைச் சந்தித்து ஆசி பெற்றுச் சென்றனர்,

06.05 pm


https://goo.gl/maps/ouLeYTSjp6pVA9ba9
இன்றைய பயண தூரம் சுமார் 26 கி.மீ.
நாளை காலை உத்தரப்பிரதேசத்தில் நுழைகிறோம்.

காசி 142 கி.மீ. தொலைவில் உள்ளது.

கூடுதலான படங்கள் இணைப்பில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக