காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி 12.09.2014 அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.
காசி புனித பாத யாத்திரை நிறைவு நாள்
இன்று 118 ஆம் நாள் - புரட்டாசி 4 (20.09.2014) சனிக் கிழமை.
யாத்திரிகர்களும் உறவினர்களும் காசிமாநகரில் உள்ள சிறப்பான இடங்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பல கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வந்தனர் .
காசி இந்துப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிர்லா விஸ்வநாதர் கோயில் (பிர்லா மந்திர்). சங்கட் மோட்சன் - ஆஞ்சநேயர் கோயில். இங்கு சுத்தமான நெய்யில் சுவையான லட்டு விற்பனை செய்கின்றனர். துளசிதாசரின் ‘மானஸ் மந்திர்’. துர்க்கா குண்ட் (துர்க்கை கோயில்). ஹனுமான் காட்டிலுள்ள சிவன் கோயில் முதலான இடங்களுக்குச் சென்ற வந்தனர்.
காசியில் காலபைரவர் வழிபாடு - மாலை 3.20 மணிக்கு யாத்திரிகர் அனைவரும் காசி நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் இருந்து புறப்பட்டு பாத யாத்திரையாக 2 கி. மீ. தூரத்தில் உள்ள கால பைரவர் கோயில் சென்று வழிபாடு செய்து, அருள்மிகு காலபைரவரின் திருவருளைப் பெற்றோம்.
இத்துடன் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை இனிதே நிறைவு பெற்றது.
இத்துடன் இராமேசுவரம் - காசி பாதயாத்திரை இனிதே நிறைவு பெற்றது.
நாளை இரவு தொடர்வண்டியில் இராமேஸ்வரம் பயணம் .
24.09.2014 அன்று இராமேஸ்வரம் கோயிலில் புனித கங்கை அபிஷேகம் வழிபாடு.
இந்த யாத்திரையில் மானசீகமாக என்னுடன் பயணித்த அன்பர் அனைவருக்கும் திருவருள் சித்திப்பதாக .
அருள்மிகு திருப்பூவணநாதர் மின்னாள் திருவருளைச் சிந்தித்து, குருஜி பச்சைக்காவடி அவர்களின் பாதம் பணிந்து ,
அருள்மிகு காசி விசுவேசுவர், காசி விசாலாட்சி, காசி அன்னபூரணி, காசி காலபைரவர் மற்றும் காசி உறை தெய்வங்களின் திருவருள்
சித்திப்பதாக .....
அன்பன்
காசிஶ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக