வியாழன், 3 செப்டம்பர், 2020

04.09.2014 காசி பாதயாத்திரை - 102 ஆம் நாள், ஆவணி 19

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,    நேற்று 03.09.2014  மைஹாரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.

இன்று 102 ஆம் நாள் - 04.09.2014 ஆவணி 19 வியாழக் கிழமை.

யாத்திரிகர் அனைவரும்  இரவு 1.00 மணிக்கு முன்பே எழுந்து 2.00 மணிக்கு தினவழிபாட்டிற்கு கூடி விட்டனர்.   தினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 2.10 மணிக்கு மைஹாரில்  இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.  மொகாரிகட்ரா என்ற ஊருக்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.    

6.51 am
காலை மணி 6.50 க்குச் சாலையோரம் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.   


7.17 am
காலை 7.15 மணி ஆகிவிட்டது.  அன்னதான வண்டி வருவதற்குக் காலதாமதம் ஆனது.   

8.16 am

8.32 am
சாலையில் மாடுகள் நிறைந்து காணப்பட்டன.   கனமழை பெய்து இருந்த காரணத்தினால் சாலையின் ஓரங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது.   இரண்டு பக்கமும் வாகனங்கள் வந்தால்,  சாலையில் நடந்து செல்வது பாதுகாப்பு இல்லாமல் இருந்தது.   சாலையில் இருந்து ஒதுங்கி நடந்தால் வழுக்கிவிடும் அபாயம் இருந்தது.   

8.41 am

8.43 am
யாத்திரிகர் சிலர் பாதுகாப்புக் கருதிக் கையில் பிரம்பை ஊன்றிக் கொண்டு நடந்து வந்தனர்.

8.45 am
காலை 8.45 மணிக்கு அமரபாட்டன் (अमरपाटन Amarpatan)  என்ற ஊரின் எல்லையில் உள்ள கோயில் வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டோம்.

8.45 am


9.15 am
காலை உணவு சாப்பிட்டு முடிந்துவுடன் பாதயாத்திரையைத் தொடர்ந்தோம்.

9.28 am

9.31 am

9.32 am

9.39 am

9.46 am

9.54 am

10.04 am


10.06 am

10.45 am

10.45 am

11.40  am
11.00 மணிக்கு மேல் மழை தூர ஆரம்பித்தது.  11.40 மணிக்குக் கக்ரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம்.   அங்குள்ள பள்ளிக்கூடத்தில் அமர்ந்து ஓய்வு.  


12.10 am
பள்ளியில் இரண்டு ஆசிரியைகள் மட்டுமே இருந்தனர்.  இரவு இந்தப் பள்ளிக்கூடத்தில் தங்கிச் செல்ல கேட்டோம்.    அவர்கள் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.    குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்,  நாங்கள் பெண்கள்,  எங்களுக்கு இதெல்லாம் தெரியாது.  நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்றால் எங்களுக்கு மேலேயுள்ள அதிகாரிகளின் அனுமதி வேண்டும் என்று கூறிவிட்டனர்.

மழை தூறிக் கொண்டே இருந்தது.
கனமழை பெய்யப் போவது போன்று அருகில் உள்ள ஒரு சிறு குன்றின் உச்சியில் மேகங்கள் கூடி இருந்தன.


12.53 am
காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களும்,  காசிஸ்ரீ தனசேகரன் அவர்களும் கக்ரா கிராமத்திற்குச் சென்று இங்கு தங்குவதற்கு ஏதேனும் இடங்கள் உள்ளனவா?  என விசாரித்தனர்.   நாங்கள் தங்கியிருந்து இடத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள வீட்டிற்குச் சென்று இவர்கள் இருவரும் யாத்திரிகர்கள் தங்குவதற்கு அனுமதி கேட்டுள்ளனர். இராமேசுவரம் காசி பாதயாத்திரை என்பதை அறிந்த அந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் மகிழ்ந்து  அனுமதி கொடுத்துள்ளார்.   

யாத்திரிகர் அனைவரும் அந்த அன்பரின் வீட்டிற்குச் சென்று சேர்ந்தோம்.    நாங்கள் அனைவரும் அந்த வீட்டிற்குச் சென்று சேர்ந்து, வீட்டின் முகப்பில் உள்ள சிறு கோயிலில் கும்பிட்டு முடித்ததுதான் தாமதம்,  கனமழை பெய்யத் தொடங்கியது.  ஒரு சில நிமிட நேரம் காலதாமதம் ஆகியிருந்தாலும் கனமழையில் மாட்டிக் கொண்டிருப்போம்.

2.10 pm
அந்த வீட்டின் உரிமையாளர் யாத்திரிகர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்.

மாலை 4.00 மணிக்கு ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு,  அங்கிருந்து யாத்திரையைத் தொடர்ந்தோம்.

4.54 pm
சாலையில் சகதி அதிகமாக இருந்த காரணத்தினால்,  யாத்திரிகர்களின் வேட்டி யெல்லாம் சகதியாகிப் போனது.  மாலை மணி 6.30க்கு மொகாரிகட்ரா என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். இங்குள்ள குருசாமியின் அடியார் ஒருவர் யாத்திரிகர்களை வரவேற்று அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.

இரவு உணவு.
ஓய்வு.


https://goo.gl/maps/4dXXw82NsL5jQene6

இன்றைய பயண தூரம் சுமார் 49 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக