காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 05.09.2014 ரீவா நகரில் உள்ள சல்பத்திரி ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.
இன்று 104 ஆம் நாள் - 06.09.2014 ஆவணி 21 சனிக் கிழமை.
யாத்திரிகர் அனைவரும் அதிகாலை 3.00 மணிக்குத் தினவழிபாட்டை முடித்துக் கொண்டு சல்பத்திரி ஆசிரமத்தில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட மைல்கல் ஒன்று சாலையோரம் இருந்தது. இதில் ரீவா 9 கி.மீ. என எழுதப் பெற்றிருந்தது.
முதுமையான வேப்பமரத்தின் கீழே, சிதிலமடைந்த சிற்பத்தூணின் ஒரு பகுதியை வைத்து வழிபாடு செய்கின்றனர். மாடுகள் கட்டப்பட்டிருந்தன.
இந்த இடத்தைப் பார்க்கும் போது, எங்களது கிராமத்து வீடும், அகநானூற்றுப் பாடலும் நினைவிற்கு வந்தன.
"வய வாள் எறிந்து வில்லின்நீக்கிப்
சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
மத்தியப்பிரதேசம் ரீவா நகரத்திலிருந்து காசி செல்லும் வழியில் உள்ள “கற்சுழியன்” என்ற ஊர் உள்ளது. இந்த ஊரின் பெயர் தமிழ்ப் பெயர்போன்று உள்ளது.
இந்த ஊரில் உள்ள குழந்தைகள் “சொட்டாங்காய்” விளையாடு கின்றனர். தமிழகத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த விளையாட்டை விளையாடுவார்கள். குழந்தைகளின் விளையாட்டைப் பார்த்ததும், பண்டைத் தமிழர் வாழும் ஊராக இந்தவூர் இருக்குமோ என்ற எண்ணம் எனக்கு.
இங்கிருந்து காசி 200 கி.மீ.
https://goo.gl/maps/M5xq4C3G7Cz5gTvL8
இரகுநாதத்கஞ்ச் வந்து சேர்ந்து தங்கினோம்.
இன்றைய பயண தூரம் சுமார் 40 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக