செவ்வாய், 8 செப்டம்பர், 2020

09.09.2014 காசி பாதயாத்திரை - 107 ஆம் நாள், ஆவணி 24

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.   இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று 08.09.2014  அனுமானா வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.

இன்று 107 ஆம் நாள் - 09.09.2014 ஆவணி 24 செவ்வாய் கிழமை.

யாத்திரிகர் அனைவரும்  அதிகாலை 3.00 மணிக்குத்  தினவழிபாட்டை முடித்துக் கொண்டு  மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஹனுமானா என்ற ஊரில் இருந்து புறப்பட்டோம்.  இந்த  ஊரின் எல்லையின் உத்திரப்பிரதேசம்.  அதிகாலையில் விடியும் நேரம் உத்திரப்பிரதேச மாநில எல்லைக்குள் நுழைந்தோம்.



































https://goo.gl/maps/SFPN7dbJaCKKUTcu6




மலைத் தொடரின் அடிவாரத்தில் மோகோரை (Mahugari) என்ற ஊரில் ஆற்றின் தென்கரையில் உள்ள Dramandganj துர்கை, அனுமன் கோயிலில் தங்கி இளைப்பாறினோம்.  
https://goo.gl/maps/4x6NbzTPkrj6LpcJ9



மாலை நேரம் இங்கிருந்து புறப்பட்டோம்.





நவராத்திரி விழாவிற்காக  குச்சியில் வைக்கோல் சுற்றிக் களிமண்ணால் பூசித் துர்க்கை பொம்மைகள் செய்து கொண்டிருந்தனர்.







பரோதா (Belan Baraudha), என்ற ஊருக்குச் சென்று சேர்ந்தோம்.   அங்குள்ள பயணியர் விடுதியில் தங்கினோம்.  மின்சாரம் இல்லை.
இரவு உணவு தயார் செய்யும்போது குக்கர் வெடித்துவிட்டது.
குக்கர் அருகே இருந்த தூண் தடுத்துவிட்ட காரணத்தினால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட வில்லை.

வெறொரு குக்கரில் உணவு தயாரிக்கப்பட்டது.
இரவு உணவு.
ஓய்வு.

https://goo.gl/maps/SuThGkuUUmNuAoUP6

இன்றைய பயண தூரம் சுமார் 31 கி.மீ.

காசி  109 கி.மீ. தொலைவில் உள்ளது.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக