சனி, 28 ஜூலை, 2018

28.07.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - கடலூர்

குருஜி பச்சைக்காவடி அவர்களது இரண்டாம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையின் 51 ஆவது நாள். இன்று ஆடி 12 ( 28.07.2017) வெள்ளிக் கிழமை, கடலூர் திரு. முத்தையா அவர்கள் இல்லத்தில் இருந்து 2:20 க்குப் புறப்பட்டு காலை மணி 8:10 க்கு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் அருகே உள்ள ஐயப்பன் கோயில் மண்டபம் வந்து சேர்த்தோம்.
பயணதூரம் 24 கி.மீ.
வழியில் இளநீர், போண்டா, தேநீர்.
மண்டபத்தில் காலை உணவு.
ஓய்வு.
தங்கல்.
மாலை 4:30க்கு மணக்குள விநாயகர் வழிபாடு.

திங்கள், 16 ஜூலை, 2018

15.07.2014, 51ஆவது நாள். பீச்பள்ளி

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
...
15.07.2014, 51ஆவது நாள்  .
யாத்திரையில் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டிய நாள் .
எனவே குருஜி முதல் நாள் இரவு யாத்திரிகர்களை 8.00 மணிக்கே தூங்கச் சொல்லி விட்டார் .

காலை2.25 மணிக்கு கர்னூல் என்ற ஊரில்இருந்து புறப்பட்டோம் .

6.50 க்கு ஜலபுரம் என்ற ஊர் அருகே காலைதேநீர்  .

10.40 க்குகோதண்டபுரம் என்ற ஊர் வந்து சேர்ந்தோம் .
அனைவருக்கும் பீன்ஸ் ரசம் (சூப்) வழங்கப்பட்டது . யாத்திரிகர் அனைவரும் விரும்பி கூடுதலாக கேட்டு வாங்கிச் சாப்பிட்டனர் .

32 கி.மீ. பயணம் .
    தேசிய நெடுஞ்சாலை யில்
நீண்ட தூரத்திற்கு சாலையின் ஓரங்களில் ஊர்கள் எதையும் காணமுடிய வில்லை , வியப்பாக இருந்தது .
சிவப்பா (29)என்ற யாத்திரிகர் கால் சுளுக்கு ஏற்பட்டு மருந்து தடவிக் கொண்டு யாத்திரையை தொடர்ந்தார் .

ஒரு பெண் 4 வயது மகனுடன்
அங்கே இருந்தார் .
தமிழ் நன்றாகப் பேசினார் .
தான் வேடசந்தூர் என்றும் ,  தனது கணவன் இந்த ஊரில் வேலை பார்ப்பதற்கு வந்த தாகவும் , அவரைத் தேடிவந்ததாகவும் , ஆனால் அவர் இங்கு வேலை இல்லாத காரணத்தால் அவர் ஈரோடு சென்று விட்டதாக கூறுகின்றனர் , தான் திரும்பிச் செல்ல பணம் இல்லை என்று கூறிக் கண்ணீர் வடித்தார் .
குருஜி அவர்களுக்கு ரொட்டி யும் பீன்ஸ் சூப் கொடுக்கச் செய்தார் .
யாத்திரிகர் தங்களால் இயன்ற பணத்தை வழங்கினார்கள் .
மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது .

ஓய்வு .
மதிய உணவு .
மதியம் 2.30க்கு குருஜி யாத்திரை வழிபாட்டைத் துவக்கினார் .

மாலை 4.50 க்கு பீச்பள்ளி  என்ற ஊரில் உள்ள ஶ்ரீராமர் கோயில் வந்து சேர்ந்தோம் .

பயணம் 43 கி .மீ .

கிருஷ்ணா நதியின் தென்கரையில் கோயில் உள்ளது . பக்தர்கள், யாத்திரிகர் தங்கி வழிபாடு செய்ய அனைத்து வசதிகளும் அருமையாக உள்ளன .

ஓய்வு .

தங்கல் .

செவ்வாய், 10 ஜூலை, 2018

ஜோதி விருட்சம், பேய்மிரட்டி

ஜோதி விருட்சம், பேய்மிரட்டி


தீப ஒளி வழங்கும் அபூர்வமான மூலிகை

இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது 46 ஆவது நாளில் ஆவனி 26 (10 சூலை 2014) வியாழக்கிழமை அன்று, பாத யாத்திரையின் போது உடன் வரும் திரு.சரவணன் சுவாமிகள் சாலை ஓரம் இருந்த ஒரு செடியைக் காட்டி இதன் பெயர் ஜோதி விருட்சம் , இதன் இலையைத் திரி போன்று பயன் படுத்தி விளக்கு எரிக்கலாம் என்றார் .

உடன் வந்த திரு.அங்கமுத்து சுவாமிகளும் இதை உறுதி செய்தார் .
திரு. பஞ்சவர்ணம் சுவாமிகள் இந்த மூலிகை யின் பெயர் பேய்மிரட்டி  என்றார் .

இந்தச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து எடுத்து வைத்துக் கொண்டேன்.   அன்று  பச்சுபள்ளி என்ற ஊரின் சாலை ஓரம் உள்ள சுங்காளம்மன் கோயிலில்  தங்கினோம். அருள்மிகுந்த அம்மன்.
சிவலிங்க வழிபாடும் உள்ளது. யாத்திரிகர் தங்குவதற்குத் தேவையான வசதிகள் உள்ளன.

ஒரு விளக்கில் எண்ணை ஊற்றி, ஜோதிவிருட்சத்தின் இலை ஒன்றை எடுத்துத் தீபத்திற்கான திரிபோன்று சுருட்டி வைத்து விளக்கு ஏற்றினோம். 
ஏற்றி வைத்த விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டுள்ளது .  ஜோதிவிருட்சத்தின் விளக்கு ஒளியில் வழிபாடு செய்தோம் .

இந்த இலையானது ஒரு நூல் திரி போன்று எண்ணெய் இருக்கும் வரை எரிந்து, பின்னர் அதுவும் எரிந்து விடுகிறது . எரியும்போது ஒரு இதமான நறுமணம் வீசுகிறது .


பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்


பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்

பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்

பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்


Sunkulamma Devalayam

సుంకులమ్మ దేవాలయం

https://goo.gl/maps/NPjFzLJo98y

சென்னையில், இந்த இலை கடைகளில் கிடைக்கும்.. பூஜை சாமான்கள், நாட்டு மருந்துகள் விற்கும் கடைகளில் தருவார்கள்..'மூலிகை திரி' என்று கேட்க வேண்டும்.. ஒரு இலையைச் சுருட்டி, நூலால் கட்டித் தருவார்கள்.. சாதாரண பஞ்சு திரி கட்டுகள் போல் இது கட்டுகளாகவும் கிடைக்கும்.. கொஞ்சம் விலை அதிகம்.. நான் சென்னையிலிருந்த போது பண்டிகை காலங்களிலும், வீட்டில் பூஜைகள் வைக்கும் போதும் வாங்குவேன்.. ஏற்றி வைத்தால் ரொம்ப நேரம் எரிவதோடு, வீடு முழுவதும் நறுமணம் கமழும்.. அதற்காகவே வாங்குவேன்.. குறிப்பாக, வடபழனி கோயில் வாசல் கடைகளில், வடபழனி மார்க்கெட்டில் வாங்கியிருக்கிறேன்.....
என்று நண்பர் ஒருவர் சொல்லியுள்ளார்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்




செவ்வாய், 3 ஜூலை, 2018

இராமேச்சுரம் - காசி பாதயாத்திரை 39 ஆவது நாள் (03.07.2014)

குருஜி பச்சைக்காவடி அவர்களது இராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை குழுவினர் 26.05.2014 அன்று இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டோம்.
39 ஆவது நாள் பயணமாக
இன்று 03.07.2014 காலை 2.45 மணிக்கு பெரச்சந்திரா விலிருந்து புறப்பட்டு பரகோடு வழியாக பாகேபள்ளி 10.15 க்கு வந்து சேர்ந்தோம் .
பயணம் 24 கீ.மீ .
இன்றுடன் கர்நாடக எல்லை முடிகிறது .
நாளையிலிருந்து ஆந்திரா மாநிலம் வழியாகப் பயணம் .
வரும் வழியில் பரகோடு பேருந்து நிறுத்தத்தில் காலை உணவு .
அருகில் சில தொழிலாளர் தொலைத்தொடர்பு இணைப்பு பணிகள் செய்து கொண்டிருந்தனர் , ஒரு முதியவரும் இருந்தார் .
அவர்களில் சிலர் திண்டுக்கல் என்றனர் .
குருஜி பச்சைக்காவடிஅவர்களையும் அழைத்து காலை உணவு வழங்கினார்.
பாகேபள்ளி கீதாமந்திரில் மதிய உணவு .
ஓய்வு.
தங்கல் .











































அன்பன் 
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்