செவ்வாய், 10 ஜூலை, 2018

ஜோதி விருட்சம், பேய்மிரட்டி

ஜோதி விருட்சம், பேய்மிரட்டி


தீப ஒளி வழங்கும் அபூர்வமான மூலிகை

இராமேசுவரம் காசி பாதயாத்திரையின் போது 46 ஆவது நாளில் ஆவனி 26 (10 சூலை 2014) வியாழக்கிழமை அன்று, பாத யாத்திரையின் போது உடன் வரும் திரு.சரவணன் சுவாமிகள் சாலை ஓரம் இருந்த ஒரு செடியைக் காட்டி இதன் பெயர் ஜோதி விருட்சம் , இதன் இலையைத் திரி போன்று பயன் படுத்தி விளக்கு எரிக்கலாம் என்றார் .

உடன் வந்த திரு.அங்கமுத்து சுவாமிகளும் இதை உறுதி செய்தார் .
திரு. பஞ்சவர்ணம் சுவாமிகள் இந்த மூலிகை யின் பெயர் பேய்மிரட்டி  என்றார் .

இந்தச் செடியின் இலைகள் சிலவற்றைப் பறித்து எடுத்து வைத்துக் கொண்டேன்.   அன்று  பச்சுபள்ளி என்ற ஊரின் சாலை ஓரம் உள்ள சுங்காளம்மன் கோயிலில்  தங்கினோம். அருள்மிகுந்த அம்மன்.
சிவலிங்க வழிபாடும் உள்ளது. யாத்திரிகர் தங்குவதற்குத் தேவையான வசதிகள் உள்ளன.

ஒரு விளக்கில் எண்ணை ஊற்றி, ஜோதிவிருட்சத்தின் இலை ஒன்றை எடுத்துத் தீபத்திற்கான திரிபோன்று சுருட்டி வைத்து விளக்கு ஏற்றினோம். 
ஏற்றி வைத்த விளக்கு சுடர் விட்டு எரிந்து கொண்டுள்ளது .  ஜோதிவிருட்சத்தின் விளக்கு ஒளியில் வழிபாடு செய்தோம் .

இந்த இலையானது ஒரு நூல் திரி போன்று எண்ணெய் இருக்கும் வரை எரிந்து, பின்னர் அதுவும் எரிந்து விடுகிறது . எரியும்போது ஒரு இதமான நறுமணம் வீசுகிறது .


பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்


பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்

பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்

பேய்மிரட்டி, ஜோதி விருட்சம்


Sunkulamma Devalayam

సుంకులమ్మ దేవాలయం

https://goo.gl/maps/NPjFzLJo98y

சென்னையில், இந்த இலை கடைகளில் கிடைக்கும்.. பூஜை சாமான்கள், நாட்டு மருந்துகள் விற்கும் கடைகளில் தருவார்கள்..'மூலிகை திரி' என்று கேட்க வேண்டும்.. ஒரு இலையைச் சுருட்டி, நூலால் கட்டித் தருவார்கள்.. சாதாரண பஞ்சு திரி கட்டுகள் போல் இது கட்டுகளாகவும் கிடைக்கும்.. கொஞ்சம் விலை அதிகம்.. நான் சென்னையிலிருந்த போது பண்டிகை காலங்களிலும், வீட்டில் பூஜைகள் வைக்கும் போதும் வாங்குவேன்.. ஏற்றி வைத்தால் ரொம்ப நேரம் எரிவதோடு, வீடு முழுவதும் நறுமணம் கமழும்.. அதற்காகவே வாங்குவேன்.. குறிப்பாக, வடபழனி கோயில் வாசல் கடைகளில், வடபழனி மார்க்கெட்டில் வாங்கியிருக்கிறேன்.....
என்று நண்பர் ஒருவர் சொல்லியுள்ளார்.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக