திங்கள், 27 செப்டம்பர், 2021

28.09.2014 காசி பாதயாத்திரை - 126 ஆம் நாள், புரட்டாசி 12


7 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் .......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.   இன்று  126 ஆம் நாள் - புரட்டாசி 12 (28.09.2014)  ஞாயிற்றுக் கிழமை

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று வழிபட்டோம்.   புரட்டாசி 5 (21.09.2014) அன்று காசியிலிருந்து புறப்பட்டோம்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.   06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அதுநாள் வரை காசி தொடர்பான கதைகளைப் படிப்போம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

27.09.2014 காசி பாதயாத்திரை - 125 ஆம் நாள், புரட்டாசி 11

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.   இன்று  125 ஆம் நாள் - புரட்டாசி 11 (27.09.2014)  சனிக்கிழமை


இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று வழிபட்டோம்.   புரட்டாசி 5 (21.09.2014) அன்று காசியிலிருந்து புறப்பட்டோம்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.   06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அதுநாள் வரை காசி தொடர்பான கதைகளைப் படிப்போம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

சனி, 25 செப்டம்பர், 2021

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை

காளையார்கோயில்

அருள்மிகு காளீசுவரர் திருவருளால் 

தேவராதன் காசிக்குச் சென்று வந்த கதை


காசிக்குச் செல்வோர் காளையார்கோயில் சென்று அருள்மிகு காளீசுவரரை வணங்கிவிட்டுக் காசிக்குச் செல்லுதல் சிறப்புடையது.  இதைப் பற்றி இந்தக் கதை கூறுகிறது. 

காளையார்கோயில் தேவராதப் படலம் (30) 
சுந்தரமூர்த்தி காளீசரைக் கண்டு வணங்கி பாடிப் பரவியதைத் தொடர்ந்து, காளீசரால் ‘தேவராதன்‘ என்பவன் பெற்ற நன்மையை எனக்குத் தெரிந்தவரை சொல்லுகிறேன் என்கிறார் ஆசிரியர்.

திருவாடானைக்கு வடகிழக்கில், திருப்புனவாயில் அருகில் ‘இந்திரபுரம்‘ என்று ஓர் ஊர் உள்ளது.  அந்நகரில் ஒழுக்க சீலனும், மறையில் வல்லோனும், சோமயாகம் செய்தவனுமாகிய ‘தேவராதன்‘ என்ற மறையவன் வசித்து வந்தான்.  அவனுக்கு இரண்டு மகன்கள். மூத்தவனாகிய வினதனுக்கு உபநயனம் செய்வித்து, நூல்கள் பல கற்பித்து வளர்த்தான்.  பின் தேவராதன், கங்கைக்குச் சென்று நீராட வேண்டும் என்ற விருப்பம் கொண்டான்.  மூத்தமகனைக் காளீசர் உறையும் காளிபுரத்திலுள்ள மாமன் இல்லத்தில் தங்க ஏற்பாடு செய்து, இளைய மகனோடும் மனைவியோடும் வாரணாசிக்குச் சென்றான்.

தேவராதன் சென்றவுடன், இந்திரபுரத்திலுள்ள அவனுடைய பொருள்களை எல்லாம் அங்குள்ள சிலர் அபகரித்துக் கொண்டனர். ‘காந்தன்‘ என்ற பெயருடைய மாமன் இல்லத்திலே வளர்ந்து வந்த வினதனுக்குத் திருமண வயது வந்தது.  மாமனும் வினதனுக்குத் திருமணம் செய்ய எண்ணி அதற்கு வேண்டிய பொருளுக்காக மருமகனை அழைத்துக் கொண்டு, இந்திரபுரம் சென்றனன்.  அவ்வூரில் உள்ளவர்களிடம் வாரணாசிக்குச் சென்ற தேவராதன் இன்னும் வரவில்லை, அதனால் தேவராதன் மகனுக்குத் திருமணம் முடிக்க எண்ணி, அதற்கு வேண்டிய பொருளுக்காக இங்கு வந்துள்ளேன்.  தேவராதனுடைய நிலத்தை அனுபவிப்பவர்கள் அதற்குரிய ஊதியத்தைத் தாருங்கள் எனக் கேட்டான்.  இந்திரபுரத்தில் உள்ளோர் அனைவரும் தேவராதன் சென்றபின், அவன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய வரிப்பணத்திற்காக நிலத்தை விற்றுக் கொடுத்து விட்டோம். “ஒன்றும் மீதமில்லை“ என்றனர்.  மாமனையும் மருமகனையும் ஊரை விட்டே துரத்தவும் செய்தனர்.  மாமனும் உள்ளம் வருந்தி இவ்வூரில் நன்னெறி இல்லையோ, கேட்க நாட்டார் இல்லையோ, மன்னர் தாம் இல்லையோ என்று புலம்பிய வண்ணம் மருமகனோடு காளிபுரம் வந்து சேர்ந்தார்.

சிறிது காலத்தில் மாமனும் இறந்து போனான்.  ஆதரவற்று வருந்திய வினதன் பிரம்மச்சரிய விரதத்தில் தவறாதவனாகி இல்லம் தோறும் பிச்சை ஏற்று உண்டு வாழ்ந்து வந்தான்.  காளீசரே தஞ்சம் என வணங்கி நின்றான்.  அவன் நிலைகண்ட காளீசரும், உமையவளோடும் இளையகுமரனோடும், ‘வினதனின் தந்தை தாய் இளையசகோதரன்‘ போலக் காசியிலிருந்து கங்கை நீரைக் காவடிபோலக் கட்டிக் கொண்டு வருபவர்போல வந்தார்.  மகன் வினதனைக் கண்டு தழுவி மகிழ்ந்து சில நாட்கள் காளிபுரத்தில் இருந்தார். பிறகு வினதனை அழைத்துக் கொண்டு தேவராதன் வடிவில் வந்த காளீசர் இந்திரபுரத்திற்குச் சென்றார். 

இந்திரபுரத்தில் உள்ளவர்கள் தேவராதனைக் கண்டு கலங்கினர், ஆனாலும் உவகை கொண்டவர்கள் போல உபசரித்தனர்.  தேவராதனும் ஊரிலுள்ளோரை நோக்கி “நான் காசி சென்று பலநாட்கள் ஆகி விட்டன. இதுவரை எனது பங்கிலுள்ள ஊதியத்தை வரிச்செலவு போகக் கணக்குப் பார்த்துத் தாருங்கள்“ என் மூத்த மைந்தனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்றான்.

ஊராரோ, நீ காசிக்குச் செல்லும் போது உன்னுடைய நிலத்தை யெல்லாம் பிறரிடம் விற்று விட்டாயே, இப்போது வந்து ஊதியம் கேட்டால் யார் கொடுப்பார்?  “பித்தனோ நீவிர்“ என்றனர்.  அதற்கு தேவராதனாகிய காளீசர், “நான் பித்தன்தான், அது இருக்கட்டும், நான் ஊராருக்கு நிலங்களை விற்றதற்கான ஆவணத்தில் என் கையொப்பத்தைக் காட்டுங்கள்“ என்றார்.

ஊரார், பொய்யான ஆவணங்களை எல்லாம் காட்ட, உண்மையறிய அரசனிடம் செல்வோம், என்று கூறித் தேவிகோட்டையில் சிறந்து வாழும், செங்கோலனாகிய பாண்டியகுல மன்னனான ‘பூடணன் ‘ என்ற பெயருடைய மன்னனைச் சார்ந்தார். அரசனும் இரு பக்கத்தார் வாதங்களையும் கேட்டு உண்மையை ஆராய்ந்து, இந்திரபுரத்து ஊரார் காட்டிய சான்றும் ஆவணமும் பொய் என்று உணர்ந்து, இந்திரபுரத்திலுள்ள தேவராதன் நிலங்களை முன்போல் அவனுக்கு உரிமையாக்கினான்.  தேவராதனும் சில நாட்களில் தங்கள் குலத்திற்கு ஏற்ற பெண்ணை வினதனுக்கு மணஞ் செய்வித்தான்.  அப்போது காசிக்குச் சென்ற தேவராதனும் அவன் மனைவியும் இளையமகனும் வந்து சேர்ந்தனர்.  இதைக் கண்டு அங்குள்ளோர் அதிசயித்தார்.  காளீசரும் சொர்ணவல்லி அம்மையும் இளையமகனும் மறைந்தனர். தேவராதன் மகன் வினதனுக்கு ஆதரவாகக் காளீசரே உமையோடும் இளைய மகனோடும் வந்ததை அறிந்த தேவராதன், காளீசன் தாளைப் புகழ்ந்து பெரு வாழ்வு வாழ்ந்து வந்தான்.

காளீசரும் சொர்ணவல்லித் தாயாரும் வீற்றிருக்கும் காளீபுரத்திற்கு அன்றுமுதல் அழகிய மங்களம் என்ற பெயர் ஏற்பட்டது.

சுபம் 
மங்களம்.


வெள்ளி, 24 செப்டம்பர், 2021

தேவதாசன் காசி சென்று திரும்பி வந்த கதை

காளையார்கோயில் புராணம்

(12) தேவதாசப் படலம்


தேவர்கள் எல்லாம் சோதிவனத்தில் திகழ்கின்ற தேவதேவனாகிய காளீசரைப் பூசித்த கதையைச் சொன்னோம்.  

இனி, தேவிசாலபுரம் என்ற ஊரை ஆண்டுவந்த செல்வந்தனாகிய தேவதாசன் என்பவன் காசி சென்று திரும்பி வந்த  சரித்திரத்தைக் கூறுவோம்.

நாடுகளுள் சிறந்தது பாண்டி நாடு.  பாண்டிய நாட்டின் வளம் அனைத்தையும் தன்னகத்தே கொண்டு, தெய்வங்களின் திருவருளையும் பெற்று, நாடி வருகின்ற எவர்க்கும் மிக்க அருளொடு வழங்குகின்ற செல்வர் வசிக்கும் மாடமாளிகை நிறைந்தது தேவிசாலபுரம் என்ற ஊர்.  அத் திருநகரில், வையத்தைக் காப்பவனும், சத்தியம் பொறை ஒழுக்கம் தயை புகழ் இவற்றில் நிகரில்லாதவனும், சைவபக்தியில் சிறந்து தருமம் தானம் செய்வனும், பூதிசாதன நெறியினில் நிற்போனும், திக்கு எல்லாம் சென்று மீளும் தேர்களை உடையவனும், மிகுந்த செல்வங்களை உடையவனும், சான்றோனும், சந்திரகுலத்தில் உதித்தவனும், மிகுந்த புகழுக்கு உரியவனுமாகிய தேவதாசன் என்ற மாறன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.  அத்தகு பெருமை வாய்ந்த இந்த வேந்தன், சோதிவனத்தில் (காளையார்கோயிலில்) உறைந்துள்ள காளீச்சுரனொடு சொர்ணவல்லி, சோமேசன் சவுந்தரவல்லி இவர்களிடம் நிறைந்த பக்தி மிகுந்தவன்.  ஆழ்ந்த உள் அன்பினோடு அவன் ஒருநாள், காளீசர் சந்நிதி முன் வந்து நின்று கீழே விழுந்து அடிபணிந்து வணங்கினான்.  

அப்போது அவன் உள்ளத்தில் உலகெல்லாம் புகழும் காசி நகருக்குச் சென்று கங்கையில் நீராடி, புனிதமான கங்கையின் தீர்த்தத்தைக் கொண்டுவந்து காளீசனுக்கு நீராட்ட வேண்டும் என்ற சிந்தனை எழுந்தது.  அவன் தனது தேவிசாலபுரத்தினில் தனது சிறுவயது மகனை அரசாள வைத்து விட்டு, நான்மறையோர்களிடம் அனுமதியும் ஆசியும் பெற்றுத் தனது பரிவாரங்கள் சூழக் காசிக்குப் புறப்பட்டான்.

காசியை நோக்கி நெடுந்தொலைவு நடந்து, தான் காணாத நல்ல பல தேசங்களையும், வளமை மிகுந்த பல நகரங்களையும், நன்னீர் ஓடும் பல நதிகளையும், விரிந்து பரந்த காடுகள் பலவற்றையும், நெடிதுயர்ந்த மலைகள் பலவற்றையும் கடந்தனன்.  நடப்பதினால் உண்டாகும் துன்பத்தை நோக்கான்.  நெடுந்தொலைவு நடந்தும் காசி நகரைக் காணோமே என்று தவித்து, முற்றும் இளைத்து மேனி தளர்ந்து கண் துயின்றான். 

அப்போது, அவனது அன்பின்பால்பட்ட அருள் காளீசன் ஒரு மறையோன் வடிவில் கனவில் தோன்றினான்.  கங்கை நீராட்ட, நீ உன் உள்ளத்தில் கருதிய கடவுளுக்கு அக்னித் திசையில் அவராலே பாதாள கங்கை என்ற தீர்த்தம் உருவாக்கப் பட்டுள்ளது.   அகத்தியமுனிவர் அப்பெரும் புனித நீர் கொண்டு, கடவுளுக்கு ஆட்டிச் சித்தி பற்பல பெற்றுள்ளார்.  நீயும், அந்தத் தீர்த்தத்தில் நீராடி, உனது கடவுளையும் நீராட்டலாம்.  ஏமாற்றம் இல்லாமல் உள்ளம் தேறுக என்றனன். அதற்கு மன்னனும், நெடுந்தொலைவு கடந்தும், பாவங்கள் அனைத்தும் போக்க வல்ல, காசியினைக் கண்டு மகிழ்ந்தனன் இல்லை, நொந்தேன், சொல்லிய வண்ணம் எவ்வாறு தொடர்ந்து அங்குச் செல்வேன் என்று கூறினான். அந்த மறையோனும் அங்கு ஒரு குளத்தைக் காட்டி  இதில் மூழ்கினால் எளிதில் சென்றிடலாம் என்று கூறி மறைந்தான்.

தேவதாசனும் கனவில் இருந்து விழித்து எழுந்தான். காளீசன் தாள் நினைந்து வணங்கினான். வைகறைப் பொழுதில், தான் கனவில் கண்ட குளத்தை நோக்கிச் சென்று அடைந்தனன். அப்போது, அங்கே, இரவு கனவில் தோன்றி மறையோன் நேரில் தோன்றி, மன்னவ, இங்கு இதில் மூழ்குக என்று மன்னனின் கரத்தைப் பற்றி இழுத்துச் சென்று அந்தத் தீர்த்தத்தில் ஆழ்த்திவிட்டுச் சென்றுவிட்டான். கணநேரத்தில் அங்கே சோதிவனத்தில் சிவகங்கைத் தீர்த்தத்தில் தீர்த்தமாடி எழுந்து காளீசன் ஆலயத்தைக் கண்டு களிப்புற்றான் மன்னன்.  அங்கு வந்தோரிடம் மன்னன் இந்த மகிமையைக் கூறினான்.

சிவகங்கைத் தீர்த்தத்தில் மூழ்கி நீராடி, பூதிகண்டிகை நன்கு அணிந்து, செம் பொன்னால் ஆகலயத்தில் அத்தீர்த்தத்தை எடுத்து, அன்பினால் காளீசனுக்கு நீராட்டினான்.  நறுமலர்களைக் கொண்டு அருச்சனை செய்து, தூப தீபம் காட்டி,  நிவேதனங்கள், பதினாறு உபசாரங்களும் செய்து உள மகிழ்ச்சியோடு, ஐந்தெழுத்து மந்திரத்தை நினைத்து, வலம் வந்து காளீசரைப் போற்றி நின்றான் மன்னவன். காளீசனும் முன்போல் மறையோன் வடிவில் வந்து தோன்றினான். தேவதாசனும் அவரை நோக்கி ஆனந்தக் கண்ணீர் மல்க, நிலம் கொள்ளத் தாழ்ந்து எழுந்து நின்று, மெய்சிலிர்த்து, “எங்கள் நாயகன் காளீசனது ஆலயத்தின் பாதங்களையும் உங்களது பாதங்களையும் இடையறாது நினைத்து வணங்கும் பக்தியைத் தந்து அருள்க“ என வேண்டினான்.  “அது தந்தோம் மற்றும் அன்பினால் நது பேர் நினைந்து கங்கையில் நீராடுவோர்க்கும் அவர்கள் கருதிய அனைத்தும் ஈவோம்“ என்று அருளிச் செய்து சூக்கும இலிங்கத்துள் மறைந்தான். அன்று தொட்டு இடைவிடாமல் அவன் அடிக்கு அன்பு பூண்டு, தனது தேவிசாலபுர நகரை அடைந்து தனியரசு உரிமை ஏற்று மக்களது உள்ளம் மகிழும்படியாகப் பாண்டியன் வழுதி அரசு வீற்றிருந்தான்.

                ஆதலினால் கங்கைக்கு நிகரான இச்சிவகங்கைத் தீர்த்தமாடி, அகத்தியன் உண்டாக்கிய தீர்த்தத்திலும் மூழ்கினால் பாவங்கள் எல்லாம் அகன்று முத்தி கிடைக்கும். மேலும் சிவகங்கைத் தீர்த்தத்திற்குத் தெற்கே உமையினால் உண்டாக்கப்பட்ட அயர்வறு தீர்த்தம் ஒன்று உள்ளது.  அதில் மூழ்கினால் அயர்ச்சி நீங்கி முன்செய்த தவப்பலன்கள் கிடைக்கும்.  சிவகங்கைத் தீர்த்தத்திற்கு நிருதி திக்கில் காளிதீர்த்தம் உள்ளது.  அதில் தீர்த்தமாடினால், இன்னல் போக்கும்.  அத் தீர்த்தத்திற்குத் தெற்கே பாரதி தீர்த்தம் உள்ளது.  அதில் தீர்த்தமாடினால், மனதிற்கு மகிழ்ச்சி கல்வி முதலான அனைத்தும் அளிக்கும்.  அதற்குக் கிழக்கே பிரம்மதீர்த்தம் உள்ளது. அதில் மூழ்கினால் பிரமஞானம் பெற்று நீண்டகாலம் வாழ்வர். சிவகங்கைத் தீர்த்தத்திற்கு மேற்கே விட்ணு தீர்த்தம் உள்ளது. அதில் மகாவிட்ணு தீர்த்தமாடி,  இத்தீர்த்தத்தினால் காளீசனுக்கும் நீராட்டிப் பூசைகள் செய்து மகாலெட்சுமியை அடைந்தான்.  இதில் தீர்த்தமாடினால் மிகுந்த செல்வம் கிடைக்கும். காளீசனுக்கு வாம திசையில் கவுரி உண்டாக்கிய ஒரு தூய தீர்த்தம் உள்ளது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் மனத்தில் நினைத்த எல்லாம் நடக்கும். அத் தீர்த்தத்திற்குக் குணதிசையில் சொர்ணவல்லியம்மை உண்டாக்கிய தீர்த்தம் உள்ளது.  இத்தகு தீர்த்த மேன்மை எடுத்து உரைப்பது அரிதாகும். பக்தியினால் இத் தீர்த்தங்களில் மூழ்கினோரும், அந்தத் தீர்த்தத்தை உடம்பில் தெளித்துக் கொண்டோரும், அவர்கள் நினைத்தன எல்லாம் பெற்று நலமுடன் வாழ்ந்து முத்தி அடைவர் என்று முனிவர் அருளிச் செய்தார்.



25.09.2014 காசி பாதயாத்திரை - 123 ஆம் நாள், புரட்டாசி 9




வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  இன்று  123 ஆம் நாள் - புரட்டாசி9 (25.09.2014) வியாழக் கிழமை.

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம். 

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமையன்று குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் அழைத்துச் சென்ற மற்றபிற யாத்திரிகர் அனைவரும் புரட்டாசி 5 (21.09.2014) தொடரியில் (Train) காசியிலிருந்து புறப்பட்டு நேற்று (24.09.2021) இராமேசுவரம் வந்து சேர்ந்து, வழிபாடு செய்துகொண்டு அவரவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தோம்.

அன்னதான வண்டியில் திரும்பி வந்து கொண்டிருக்கும் குருசாமி பச்சைக்காவடி அவர்களும், காசிஸ்ரீ  சரவணன் அவர்களும் 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

திங்கள், 13 செப்டம்பர், 2021

14.09.2014 திரு. சினா. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி

காசிஸ்ரீ சின்னக்கருப்பன் அவர்களின் இளையமகன் திரு.பழனியப்பன்  அவர்கள்  <palaniappanc@hotmail.com> இந்த புனித யாத்திரிரை பற்றிய எனது பதிவுகள் அனைத்தையும் சேகரித்திருந்தார்.  அந்தச் சேகரிப்பை 14 செப்டம்பர் 2014, 23:23 அன்று மின்னஞ்சல் மூலம் அனைத்து இணைப்புகளுடன் ஒரு கோப்பாக  எனக்கு அனுப்பி வைத்தார்.

அது ஒரு புத்தகத்தை வெளியிடுவதற்கான எனது முயற்சிக்கு உதவியாக உள்ளது.

திரு. சி. பழனியப்பன் அவர்களுக்கு நன்றி.

அன்புடன்,

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

14.09.2014

--------------


Mr. Palaniappan <palaniappanc@hotmail.com> son of Kasisree Chinnakaruppan had collected all my posts about these pilgrims.

He emailed the collection to me on 23 September 2014, 23:23 in a file with all the links.

It has been helpful to my endeavor to publish a book.

I thank Mr. Palaniappan.

Sincerely,

Kasisree, Ph.D., N.R.K. காளைராசன்

14.09.2014

-------------------------


श्री पलानीअप्पन <palaniappnc@hotmail.com> कसीश्री के पुत्र चिन्नाकरुप्पन ने इन तीर्थयात्रियों के बारे में मेरे सभी पोस्ट एकत्र किए थे।

उन्होंने सभी लिंक वाली एक फाइल में 23 सितंबर 2014, 23:23 को संग्रह मुझे ईमेल किया।

पुस्तक प्रकाशित करने के मेरे प्रयास में यह सहायक रहा है।

मैं श्री पलानीअप्पन को धन्यवाद देता हूं।

भवदीय,

कसीश्री, पीएच.डी., एन.आर.के. ்

14.09.2014


---------------------

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

07.09.2021 மௌகஞ் டாக்டர் ராஜேந்திரன் அவர்களின் வாழ்த்து

Dr. Rajendran and his friends in Mauganj

मैं डॉ. राजेंद्रन, मोहंज हूं। गुरुमगराज की यात्रा अविस्मरणीय, अद्भुत, अकल्पनीय है। कश्मीर से कन्याकुमारी भारत है। गुरुमगराज ने श्री रामेश्वरम द्वीप से काशी की यात्रा की। हमने अपने लोगों के साथ दर्शन किए, जिसने मुझे भारत में आपकी यात्रा में धन्य बना दिया, मैं आज भी आपको याद करके खुद को धन्य मानता हूं।

बार-बार मुझे जीवन की प्रेरणा मिल रही है, गुरु महाराज जी को मेरा बारंबार प्रणाम। सभी तीर्थयात्रियों को नमस्कार। सोशल मीडिया के माध्यम से हमने इतना प्रचार प्रसार किया। जुड़े रहें, आज के युग में गुरुमगराज में विशेष योग्यता है, वे कितने प्रतिभाशाली हैं। मैं आप सभी को इसी आशा के साथ नमन करता हूं कि महाराज जी हमें अपने चरणों में रख रहे हैं। मैं उन्हें प्रणाम करता हूं, भगवान विश्वनाथ के दर्शन पर, श्री रामेश्वरम के दर्शन के बाद मुझे उनकी बहुत याद आती है। मैं उसे जीवन में एक बार फिर से देखना चाहता हूं। मैं उनका आशीर्वाद लेना चाहता हूं, और यह आप संत हैं जो हमें उनसे जोड़ सकते हैं। साष्टांग प्रणाम।

07 sep 2021

__________________

நான் டாக்டர் ராஜேந்திரன், மோகன்ஜ். குருமகிராஜுக்கான பயணம் மறக்க முடியாதது, அற்புதமானது, கற்பனை செய்ய முடியாதது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா. குருமகராஜ் ஸ்ரீ ராமேஸ்வரம் தீவில் இருந்து காசிக்கு பயணம் செய்தார். எங்கள் மக்களுடன் நாங்கள் தரிசனம் செய்தோம், இது இந்தியாவில் உங்கள் பயணத்தில் என்னை ஆசீர்வதிக்க வைத்தது, இன்றும் உங்களை நினைவில் கொள்வதில் நான் பாக்கியவானாக கருதுகிறேன்.

நான் மீண்டும் மீண்டும் வாழ்க்கையின் உத்வேகத்தைப் பெறுகிறேன், குரு மகாராஜ் ஜிக்கு எனது வணக்கங்கள். அனைத்து யாத்திரிகர்களுக்கும் வாழ்த்துக்கள். நாங்கள் சமூக ஊடகங்கள் மூலம் நிறைய விளம்பரங்களை பரப்பினோம். இணைந்திருங்கள், இன்றைய காலகட்டத்தில் குருமகிராஜுக்கு சிறப்பு திறன்கள் உள்ளன, அவர்கள் எவ்வளவு திறமையானவர்கள். மகாராஜ் ஜி எங்களை அவரது காலடியில் வைத்திருப்பார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன். நான் அவரை வணங்குகிறேன், விஸ்வநாதரின் தரிசனத்தில், ஸ்ரீ ராமேஸ்வரத்தின் தரிசனத்திற்குப் பிறகு நான் அவரை மிகவும் இழக்கிறேன். என் வாழ்க்கையில் அவரை மீண்டும் பார்க்க விரும்புகிறேன். அவருடைய ஆசீர்வாதங்களை நான் பெற விரும்புகிறேன், அவர்களே எங்களை அவர்களுடன் இணைக்க முடியும். பாதம் பணிந்து வணங்குகிறேன்.

07/09/2021


ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

12.09.2021 குருசாமியைக் கொண்டாடுவோம்

குருவருளைப் போற்றுவோம்

நாம் ஆயிரத்தில் ஒருவரல்ல,  கோடியிலும் ஒருவரல்ல,  கோடனுகோடியில் ஒருவர் என்பதை உணர்வோம்.  நமக்கு இந்தப் பேற்றினை நல்கிய குருவருளைப் போற்றுதல் செய்வோம்.  வரும் ஆவணி 27 (12.09.021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடி,  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.

அண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் இருப்பதாக இதுநாள்வரை அறியப்பெற வில்லை.

இந்தப் பூமியில் மட்டுமே உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன.  உலகில் தோன்றியுள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும் அறிவினால் உயர்ந்துள்ளான்.

இவ்வாறு உயர்ந்துள்ள மனிதருள்ளும் கடவுளை அறிந்து வணங்கி வாழுவோராகப் புன்னிய பாரதநாட்டின் மக்கள் உள்ளனர்.

பாரத நாட்டிலுள்ள மக்கள் பலகாலமாக இராமேசுவரத்திற்கும் காசிக்கும் பாதயாத்திரையாகச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்றுள்ளார் காஞ்சி மகாப் பெரியவர்.

மகாப் பெரியவர் பாதயாத்திரை சென்ற வழித்தடத்தில் வலையபட்டிச் சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களும் 12 முறை பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளார்.

இவர் பாதயாத்திரையாகச் செல்லும் போது, ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 அடியார்களை எவ்விதமான கட்டணமும் இல்லாமல்,  உணவு உடை மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் நற்கருணையினால், நாமும் அவருடன் இராமேசுவரம் - காசி புனித பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கும் பேறு பெற்றுள்ளோம்.  காசிஸ்ரீ என்ற பட்டமும் பெற்றுள்ளோம்.

மேலும் அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்கள் பாதயாத்திரையாகச் சென்று எம்பெருமான் முருகப்பெருமானிள் திருவருளையும் பெற்றுள்ளோம்.

உலகில் வாழும் கோடானகோடி மனிதர்களில் இப்பேற்றினைப் பெற்றவர்கள் நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

பெறற்கரிய இந்தப் பேற்றினைப் பெற்றுள்ள நாம், அதைப் போற்றும் வகையில் வரும் ஆவணி 27 (12.09.2021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடிக், கோயிலில் வழிபாடு செய்து, சித்தர் ஐயா அவர்களின் அருளாசியைப் பெறுவோம்.  

முதல்நாள் சனிக்கிழமை இரவே வலையபட்டிக்கு வந்து சேர்பவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் செய்துள்ளார்கள்.

பாதயாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று கூடித் திருவருளும் குருவருளும் பெறுவோம்.  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.


அடியேன்

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

02.09.2015 இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.


02.09.2015 அன்று இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு.

இராமேச்சுரம் காசி யாத்திரையின் நிறைவாக நேற்று காலை மணி 7.00க்கு திரிவேணி சங்கம தீர்த்தத்தால் அருள்மிகு பர்வதவர்தினி உடனாய இராமநாதசாமியை நீராட்டி வழிபாடு செய்தோம்.

பெரியோர்களின் நல்லாசியாலும், வழிபடு தெய்வங்களின் திருவருளாளும், குருசாமி பச்சைக்காவடி அவர்களது அன்பினாலும் யாத்திரை இனிதே நிறைவுற்றது.
தெய்வங்களின் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்