வெள்ளி, 24 செப்டம்பர், 2021

25.09.2014 காசி பாதயாத்திரை - 123 ஆம் நாள், புரட்டாசி 9




வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் - காசி பாதயாத்திரை.  இன்று  123 ஆம் நாள் - புரட்டாசி9 (25.09.2014) வியாழக் கிழமை.

இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 7 மாநிலங்கள் வழியே, 110 நாட்களில் சுமார் 2510 கி.மீ. நடந்து, 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் சென்று சேர்ந்தோம்.  காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் 10 நாட்களாகத் தங்கியிருந்து வழிபாடுகள் செய்து வந்தோம். 

புரட்டாசி 5 (21.09.2014) ஞாயிற்றுக்கிழமையன்று குருசாமி பச்சைக்காவடி ஐயா  அவர்களும், காசிஸ்ரீ சரவணன் அவர்களும் அன்னதான வண்டியில் காசியில் இருந்து புறப்பட்டு  சாலைவழியாக வந்து கொண்டிருந்தனர்.  வரும் வழி நெடுகிலும் பாதயாத்திரையின் போது யாத்திரிகர்களை வரவேற்று உபசரித்த அன்பர்கள் அனைவருக்கும் காசித் தீர்த்தமும் விபூதி பிரசாதமும் வழங்கி வந்து கொண்டிருந்தார்.  

குருசாமி பச்சைக்காவடி ஐயா அவர்கள் அழைத்துச் சென்ற மற்றபிற யாத்திரிகர் அனைவரும் புரட்டாசி 5 (21.09.2014) தொடரியில் (Train) காசியிலிருந்து புறப்பட்டு நேற்று (24.09.2021) இராமேசுவரம் வந்து சேர்ந்து, வழிபாடு செய்துகொண்டு அவரவர் வீட்டிற்குத் திரும்பியிருந்தோம்.

அன்னதான வண்டியில் திரும்பி வந்து கொண்டிருக்கும் குருசாமி பச்சைக்காவடி அவர்களும், காசிஸ்ரீ  சரவணன் அவர்களும் 06.10.2014 அன்று காரைக்குடி வந்து சேர்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருளும், இராமேசுவரம் அருள்மிகு மலைவளர்காதலி உடனாய இராமநாதசுவாமியின் திருவருளும் சித்திப்பதாக.....


அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக