ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

12.09.2021 குருசாமியைக் கொண்டாடுவோம்

குருவருளைப் போற்றுவோம்

நாம் ஆயிரத்தில் ஒருவரல்ல,  கோடியிலும் ஒருவரல்ல,  கோடனுகோடியில் ஒருவர் என்பதை உணர்வோம்.  நமக்கு இந்தப் பேற்றினை நல்கிய குருவருளைப் போற்றுதல் செய்வோம்.  வரும் ஆவணி 27 (12.09.021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடி,  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.

அண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் இருப்பதாக இதுநாள்வரை அறியப்பெற வில்லை.

இந்தப் பூமியில் மட்டுமே உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன.  உலகில் தோன்றியுள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும் அறிவினால் உயர்ந்துள்ளான்.

இவ்வாறு உயர்ந்துள்ள மனிதருள்ளும் கடவுளை அறிந்து வணங்கி வாழுவோராகப் புன்னிய பாரதநாட்டின் மக்கள் உள்ளனர்.

பாரத நாட்டிலுள்ள மக்கள் பலகாலமாக இராமேசுவரத்திற்கும் காசிக்கும் பாதயாத்திரையாகச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்றுள்ளார் காஞ்சி மகாப் பெரியவர்.

மகாப் பெரியவர் பாதயாத்திரை சென்ற வழித்தடத்தில் வலையபட்டிச் சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களும் 12 முறை பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளார்.

இவர் பாதயாத்திரையாகச் செல்லும் போது, ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 அடியார்களை எவ்விதமான கட்டணமும் இல்லாமல்,  உணவு உடை மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் நற்கருணையினால், நாமும் அவருடன் இராமேசுவரம் - காசி புனித பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கும் பேறு பெற்றுள்ளோம்.  காசிஸ்ரீ என்ற பட்டமும் பெற்றுள்ளோம்.

மேலும் அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்கள் பாதயாத்திரையாகச் சென்று எம்பெருமான் முருகப்பெருமானிள் திருவருளையும் பெற்றுள்ளோம்.

உலகில் வாழும் கோடானகோடி மனிதர்களில் இப்பேற்றினைப் பெற்றவர்கள் நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

பெறற்கரிய இந்தப் பேற்றினைப் பெற்றுள்ள நாம், அதைப் போற்றும் வகையில் வரும் ஆவணி 27 (12.09.2021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடிக், கோயிலில் வழிபாடு செய்து, சித்தர் ஐயா அவர்களின் அருளாசியைப் பெறுவோம்.  

முதல்நாள் சனிக்கிழமை இரவே வலையபட்டிக்கு வந்து சேர்பவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் செய்துள்ளார்கள்.

பாதயாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று கூடித் திருவருளும் குருவருளும் பெறுவோம்.  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.


அடியேன்

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக