பச்சைக்காவடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சைக்காவடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

12.09.2021 குருசாமியைக் கொண்டாடுவோம்

குருவருளைப் போற்றுவோம்

நாம் ஆயிரத்தில் ஒருவரல்ல,  கோடியிலும் ஒருவரல்ல,  கோடனுகோடியில் ஒருவர் என்பதை உணர்வோம்.  நமக்கு இந்தப் பேற்றினை நல்கிய குருவருளைப் போற்றுதல் செய்வோம்.  வரும் ஆவணி 27 (12.09.021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடி,  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.

அண்டத்தில் வேறெங்கும் உயிர்கள் இருப்பதாக இதுநாள்வரை அறியப்பெற வில்லை.

இந்தப் பூமியில் மட்டுமே உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகின்றன.  உலகில் தோன்றியுள்ள உயிரினங்களில் மனிதன் மட்டும் அறிவினால் உயர்ந்துள்ளான்.

இவ்வாறு உயர்ந்துள்ள மனிதருள்ளும் கடவுளை அறிந்து வணங்கி வாழுவோராகப் புன்னிய பாரதநாட்டின் மக்கள் உள்ளனர்.

பாரத நாட்டிலுள்ள மக்கள் பலகாலமாக இராமேசுவரத்திற்கும் காசிக்கும் பாதயாத்திரையாகச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

அவ்வகையில் இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரையாகச் சென்றுள்ளார் காஞ்சி மகாப் பெரியவர்.

மகாப் பெரியவர் பாதயாத்திரை சென்ற வழித்தடத்தில் வலையபட்டிச் சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களும் 12 முறை பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கி அருள்பெற்றுள்ளார்.

இவர் பாதயாத்திரையாகச் செல்லும் போது, ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20 அடியார்களை எவ்விதமான கட்டணமும் இல்லாமல்,  உணவு உடை மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துத் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் நற்கருணையினால், நாமும் அவருடன் இராமேசுவரம் - காசி புனித பாதயாத்திரை சென்று அருள்மிகு காசிவிசுவநாதரை வணங்கும் பேறு பெற்றுள்ளோம்.  காசிஸ்ரீ என்ற பட்டமும் பெற்றுள்ளோம்.

மேலும் அறுபடைவீடுகளுக்கும் 60 நாட்கள் பாதயாத்திரையாகச் சென்று எம்பெருமான் முருகப்பெருமானிள் திருவருளையும் பெற்றுள்ளோம்.

உலகில் வாழும் கோடானகோடி மனிதர்களில் இப்பேற்றினைப் பெற்றவர்கள் நம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

பெறற்கரிய இந்தப் பேற்றினைப் பெற்றுள்ள நாம், அதைப் போற்றும் வகையில் வரும் ஆவணி 27 (12.09.2021) ஞாயிற்றுக் கிழமையன்று வலையபட்டியில் ஒன்றுகூடிக், கோயிலில் வழிபாடு செய்து, சித்தர் ஐயா அவர்களின் அருளாசியைப் பெறுவோம்.  

முதல்நாள் சனிக்கிழமை இரவே வலையபட்டிக்கு வந்து சேர்பவர்கள் தங்குவதற்கான வசதிகளையும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் செய்துள்ளார்கள்.

பாதயாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் ஒன்று கூடித் திருவருளும் குருவருளும் பெறுவோம்.  யாத்திரை மீண்டும் தொடர குருவிடமும் தெய்வங்களிடமும் வேண்டுதல் செய்வோம்.


அடியேன்

காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 3 செப்டம்பர், 2021

02.09.2015 இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.


02.09.2015 அன்று இராமேசுவரத்தில் பாதயாத்திரை நிறைவு வழிபாடு.

இராமேச்சுரம் காசி யாத்திரையின் நிறைவாக நேற்று காலை மணி 7.00க்கு திரிவேணி சங்கம தீர்த்தத்தால் அருள்மிகு பர்வதவர்தினி உடனாய இராமநாதசாமியை நீராட்டி வழிபாடு செய்தோம்.

பெரியோர்களின் நல்லாசியாலும், வழிபடு தெய்வங்களின் திருவருளாளும், குருசாமி பச்சைக்காவடி அவர்களது அன்பினாலும் யாத்திரை இனிதே நிறைவுற்றது.
தெய்வங்களின் திருவருள் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி.காளைராசன்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

21.08.2015 காசி பாதயாத்திரை

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின் 12ஆவது வருட இராமேசுவரம் காசி பாதயாத்திரை.

இன்று 21.08.2015 

யாத்திரிகர்கள் சமோகரா என்ற ஊரில் உள்ள அருள்மிகு கிருஷ்ணர் கோயிலில் தங்கி இருந்தோம். 

அங்கிருந்த நதியில் யாத்திரிகர் அனைவரும் நீராடி மகிழ்ந்தனர். 

கிராமத்தினர் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

கிருஷ்ணர் கோயிலுக்கு அருகே, வயலில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர்.  அங்கே ஒரு கிணறும் அதன் அருகே ஒரு மரத்தடியில் பீடத்தில் வழிபாடும் செய்து வருகின்றனர்.

அந்தப் பீடத்தில், பார்வதி பரமேசுவரர் ஒன்றாக இருக்கும் சிற்பமும், அருகே நந்தி சிற்பமும் ஒன்றும் சிதைந்த நிலையில் உள்ளன.   இந்த இடத்தில் முன்பு ஒரு பழமையான சிவாலயம் இருந்திருக்க வேண்டும்.






வியாழன், 17 செப்டம்பர், 2020

18.09.2014 காசி யாத்திரை - 116 ஆம் நாள், புரட்டாசி 2

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.  இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி நேற்று முன்தினம் 12.09.2014  அதிகாலை கங்கையைக் கடந்து காசிமாநகர் வந்து சேர்ந்து காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கியிருந்தோம்.

இன்று 116 ஆம் நாள் - புரட்டாசி 2 (18.09.2014) வியாழக் கிழமை.

பல்குனி ஆற்றின் கரையில் உள்ள புனித விஷ்ணு கயாவில் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும் என  அதிகாலையில் எழுந்து யாத்திரிகர் பலரும்  இன்று கயாவிற்குப் பயணம் ஆனோம். குருசாமி பச்சைக்காவடி அவர்களும் மற்றும் சில யாத்திரிகர்களும் காசியிலேயே தங்கியிருந்தனர்.

காலை 7.31 
வண்டியில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டே பயணம் செய்தோம்.  காசி முதல் கயா வரையில் சுமார் 250 கி.மீ. தொலைவிற்கும் சிமிண்டில் நான்குவழிச் சாலை அருமையாகப் போட்டுள்ளனர்.  அலுப்பில்லாத பயணம்.  தீடிரென வண்டியின் வேகம் வெகுவாகக் குறைந்தது.  கண் விழித்துப் பார்த்தால் 7.30 (ஏழரை) மணி. ஏழரைபோல் லாரி ஒன்று எதிரே வந்து கொண்டிருந்தது.   நல்லவேளை ஓட்டுநர் திறமையால் தப்பித்தோம்.

அதிர்ச்சியிலிருந்து மீண்டு, சற்று நன்கு முழித்துப் பார்த்தால், எங்களது வண்டியின் ஓட்டுநர் வண்டியை வலதுபக்க (ஒருவழி)ச் சாலையில் ஓட்டி வருகிறார் என்பது புரிந்தது.  ஒருவாராக அவருக்குப் புரியும்படிப் பேசி, வண்டியை இடபுறம் உள்ள சாலையில் செலுத்தச் செய்து பயணத்தைத் தொடர்ந்தோம்.


258 km
https://goo.gl/maps/CP3CPehKM8uvqMWW8


பகல் 10.01 
காலை 10.00 மணிக்கு கயாவில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்திற்கு வந்து சேர்ந்தோம்.  

பகல் 10.02

சத்திர நிர்வாகி எங்களை வரவேற்றார்.  எங்களுக்கான காலை உணவை எடுத்து வைத்திருந்தினர்.  சிலர் தர்பணம் கொடுத்தபின்னர் சாப்பிட்டுக் கொள்ளலாம் எனக் காலை உணவு சாப்பிட வில்லை.

பகல் 10.09
சத்திரத்தில் தங்குவதற்கும் குளிப்பதற்கும் துவைப்பதற்கும் வசதிகள் இருந்தன.

பகல் 10.37 

10.30 மணிக்கு பல்குனி ஆற்றிற்குத் தர்பணம் கொடுப்பதற்காகச் சென்றோம்.   சத்திரத்தில் இருந்து பாண்டாக்களுக்கு அலைபேசியில் பேசித் தகவல் சொல்லிவிடுகின்றனர்.  எனவே தர்பணம் கொடுப்பதற்குப் பாண்டாக்களைத் தேட வேண்டிய அவசியமில்லை.

மணி 11.41 

தர்பண காரியங்கள் செய்வதற்காக தென்னிந்தியருக்கு தனியாக இடவசதி உள்ளது. உடிப்பி பட்கள் செய்து வைக்கிறார்கள். தென்னிந்தியருக்கு ஏற்பாடு செய்யும் பண்டாக்கள் அருமையாகத் தமிழ் பேசுகிறார்கள்.   

தர்பணம் செய்யும் இடத்தில் தமிழர் கூட்டம் அதிகம் இருந்தது.

கயாவில் தர்ப்பணம் செய்யும்போது அம்மாவுக்காகத் தனியாக 12 பிண்டங்கள் வைக்கின்றனர்.  அப்பொழுது தாயானவள் அவளது குழந்தைகளுக்காக என்னென்ன வேதனைகளை அனுவித்திருப்பாள் என்று விவரித்து,  தனக்காகப் பட்ட ஒவ்வொரு வேதனைக்கும் ஒவ்வொரு பிண்டம் வைக்கும்போதும் நம் விழிகளில் தானாகவே நீர் பெருக்கெடுக்கும்.  

கயாவிலும் பத்ரியிலும் ஸ்ராத்தம் செய்தபோதும்,  வருடாவருடம் செய்யும்  “வர்ஷச்ராத்தம்” விடுபடக்கூடாதென்றும், அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டுமென்றும் பாண்டா விளக்கம் கூறினார்.

மணி 12.36 
பல்குனி ஆறு தெற்கிலிருந்து வடக்காகப் (உத்தரவாகிணியாகப்) பாய்ந்து செல்கிறது.  ஏராளமானோர் அவரவர் முன்னோர் பொருட்டுத் தர்பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.   தர்பணம் கொடுத்தபின்னர் இங்குள்ள விஷ்ணு கோயிலில் அட்சயவடத்தில் வழிபாடு செய்துகொண்டோம்.

இங்கிருந்து புறப்பட்டு ஹரித்வார் வழியாக பத்ரி சென்று, அங்கும் அலக்னந்தா கரையில் ஸ்ராத்தம் செய்கின்றனர். பிரம்ம கபாலத்தில் பிண்டம் கொடுக்கலாம் என்றனர்.   ஆனால் நாங்கள் அதற்கான ஏற்பாடுகளுடன் வரவில்லை.  இன்றே காசிக்குத் திரும்பிச் செல்ல வேண்டி இருந்த காரணத்தினால் நாங்க்ள் அலக்னந்தா செல்லவில்லை.

நகரத்தார் சத்திரத்தில் மதிய உணவு.  
அதன்பின்னர் புத்தகயா சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
அங்கிருந்து பயணமாகி காசிக்குத் திரும்பி வந்து சேர்ந்தோம்.

மெய்யன்பர்  அனைவருக்கும் குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும்,  அருள்மிகு காசி விசுவேசுவர், விசாலாட்சி, அன்னபூரணி, காசி உறை தெய்வங்கள், மற்றும் காலபைரவர் திருவருள் சித்திப்பதாக...

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


திங்கள், 27 ஜூலை, 2020

27.07.2014 குணம் என்னும் குன்றேறி நின்ற குருசாமி

குணம் என்னும் குன்றேறி நின்ற குருசாமி



காசி புனித பாதயாத்திரை - வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை 
நேற்று துப்ரான் என்ற ஊருக்கு வந்து தங்கி இருந்தோம்.

இன்று 63ஆம் நாள் - ஆடி 11 (27.07.2014) ஞாயிற்றுக் கிழமை. 
துப்ரானில் இருந்து புறப்பட்டு நரசிங்கி என்ற ஊருக்கு வந்து சேர்ந்து, இங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கியிருந்தோம்.

மாலைநேர வழிபாட்டிற்குப் பின்னால், குருசாமியின் முகம் சற்று வாட்டமாகக் காணப்பட்டது.   சற்று கோபமாகவும் இருந்தார். 
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் இப்படிக் கோபமாக இருந்ததை அன்றுதான் நான் முதன்முறையாகப் பார்த்தேன்.

ஏன் இந்தக் கோபம்?  
எதற்காக இந்த முகவாட்டம்?  
யார் என்ன செய்தார்?  
யார் என்ன சொன்னார்? என்று தெரியவில்லை.

ஆனால்,  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவருக்கு முன்னால் இருந்த ஒரு காங்கிரிட் தூணை வெறித்துப் பார்த்த படி இருந்தார்.

அவ்வளவு வருத்தத்திலும் கோபத்திலும், யாத்திரிகர் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் சொல்லாமல்,  யாத்திரிகர் யாருடைய முகத்தையும் பார்க்காமல்,  “இந்த யாத்திரையானது மிகவும் புனிதமானது,  இதை நான் நடத்தவில்லை, இதைப் பிள்ளையார் நடத்துகிறார்,  யாத்திரையில் நடக்கும் ஒவ்வொவரையும் பிள்ளையார் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்,  யாத்திரிகர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், என்னால் இயன்ற அளவிற்கு நல்லபடியாகச் செய்து கொடுத்து வருகிறேன்,  அன்னதான வண்டியில் ஒட்டப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டில் உள்ள பிள்ளையார் நடப்பதை யெல்லாம் பார்த்துக் கொண்டே வருகிறார்” என்று சொன்னார்.   

அவ்வளவுதான்,  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் எந்தத் தூணைப் பார்த்தபடி இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாரோ,  அந்தத் தூணில் கட்டப்பட்டிருந்த மின்சார பல்ப்  அப்படியே தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  குருசாமியின் கோபச் சொற்கள் குண்டுபல்லை எரித்து விட்டன.

இது போன்ற  நிகழ்ச்சிகளை நான் தமிழ்ச் சினிமாக்களில்தான் பார்த்துள்ளேன்.  இப்போது முதன்முறையாக நேரில் பார்த்து வியந்து பயந்து போனேன்.  சற்றே சுதாரித்துக் கொண்டு,  தீப்பிடித்து எரியும் பல்ப் சுவிட்சை அனைத்தோம்.    காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் எரிந்துபோன அந்த பல்ப், ஹோல்டர், வயர் எல்லாவற்றையும் வெட்டி எடுத்து விட்டுப் புதிதாக மின்சார பல்ப் ஒன்றை மாற்றினார்.  யாத்திரிகர் அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு வியந்து பயந்து, புதிய மின்விளக்கு ஒளியில் மிகவும் அமைதியாக அப்படியே ஆடாமல் அசையாமல் அமர்ந்து இருந்தனர்.

“குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி 
கணமேயும் காத்தல் அரிது” 
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:29).  என்ற திருக்குறளுக்குப் பொருள் சேர்ப்பதாய் நிகழ்ந்தது இந்த நிகழ்ச்சி)


குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

வெள்ளி, 19 ஜூன், 2020

20.06.2014 காசி பாதயாத்திரை - 26ஆம் நாள் - ஆனி 6

பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
6 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....

இன்று 26ஆம் நாள் - ஆனி 6 (20.06.2014) வெள்ளிக் கிழமை, 

இன்று முழுதும் ஓய்வு.
தருமபுரி கடைவீதி அருகேயுள்ள ஸ்ரீ அபிராமி மஹாலில் தங்கி யிருந்தோம்.  இன்றும் தருமபுரி அன்பர்கள் பலரும் குடும்பம் குடும்பமாக வந்திருந்து குருசாமி அவர்களிடம் ஆசிபெற்றுச் சென்றனர்.
அறுபடைவீடு பாதயாத்திரை

அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று யாத்திரிகர்கள் வழிபாடு செய்து கொண்டனர்.


குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

புதன், 17 ஜூன், 2020

18.06.2014 பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 24ஆம் நாள், ஆனி 4

பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்

6 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....

இன்று 24ஆம் நாள் - ஆனி 4 (18.06.2014) புதன் கிழமை, 
அதிகாலை 2.50 மணிக்கு சேலம் தெய்வீகம் திருமணமண்டபத்திலிருந்துபுறப்பட்டோம்.
வழக்கம்போல் காலைநேர வழிபாடு முடித்து, ஹார்லிக்ஸ் ரொட்டி சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினோம்.

காலை 6.00 மணிக்குச் சுங்கச்சாவடி வந்து சேர்ந்தோம்.
தேநீர்.

காசி பாதயாத்திரை

காசி பாதயாத்திரை


8.00 மணிக்கு ஓமலூர் அக்ரஹாரம் அருள்மிகு தைலாம்பிகை சமேத வைத்தீசுவரன் கோயில்  வந்து சேர்ந்தோம்.
காலை உணவு.
ஓய்வு.

மணி 1.30 க்கு மதிய உணவு.
2.30 க்கு அருள்மிகு தைலாம்பிகை சமேத வைத்தீசுவரன் கோயில்  புறப்பட்டோம்.

காசி பாதயாத்திரை

3.50 pm



மாலை மணி 4.30 அளவில் சாலையோரம் இருந்து ஒரு வீட்டில் அமர்ந்து தீவட்டிப்பட்டியில் தங்குவதற்கான முகவரி அடங்கிய கடிதத்தையும், அங்கே தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் அன்பரின் அலைபேசி எண்ணையும் தேடிப்பார்த்து எடுத்தார்.  சிறிது நேரத்தில் அன்னதான வண்டியும் வந்து சேர்ந்தது.  ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.  குருசாமி அவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களுக்கும் ரொட்டியும் தேநீரும் கொடுத்தார்.   சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்து 

காசி பாதயாத்திரை
5.00
காசி பாதயாத்திரை
5,10

பூசாரிப்பட்டியில் ஒரு சிறு குன்றின்மேல் கோயில் ஒன்று இருந்தது.  





6.30 க்கு தீவட்டிப்பட்டி S.V.T. திருமணமண்டபம் வந்து சேர்ந்தோம்.   ஊரார் ஒன்று கூடி நின்று வரவேற்பு அளித்தனர்.


குருஜி க்கு பாதபாஜை செய்து வழிபட்டனர்.
குருஜி அவர்களை ஆசிர்வதித்தார். 

இரவு ஊரார் அன்னதானம் அளித்தனர்.  உணவிற்குப் பிறகு, யாத்திரிகர் அனைவரும் அசதி மிகுதியால் அயர்ந்து தூங்கி விட்டனர்.





குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவரைக் காண வந்திருந்தோரின் நலம் விசாரித்தார்.  அவர்களது குறைகள் நீங்கச் சில வழிகாட்டுதல்களை அருளிச் செய்தார்.


https://goo.gl/maps/MNswNvrbEjH8GPzt5
இன்றைய பயணம் 29 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 14 ஜூன், 2020

15.06.2014 காசி பாதயாத்திரை - 21ஆம் நாள், ஆனி 1


காசி பாதயாத்திரை -  21ஆம் நாள் 
ஆனி 1 (15.06.2014) ஞாயிற்றுக் கிழமை, 

பொம்மைக்குட்டைமேடு அருகேயுள்ள லட்சுமி கல்யாண மட்ணபத்திலிருந்து புறப்பட்டு புதுச்சத்திரம் விலக்குப்பாதை யருகே உள்ள பேருந்துநிறுத்தத்தில் காத்திருந்தோம். சிறிது நேரத்தில் அன்னதான வண்டி வந்து சேர்ந்தது.  காலை நேர ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.  








தேநீர் சாப்பிட்டு முடித்தவுடன் அந்தப் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு அண்டலூர்கேட்  வழியாக முத்துக்காளிப்பட்டி அருகேயுள்ள சக்திபீடம் வந்து சேர்ந்தோம்.







ஸ்ரீ சிவ சக்தி பீடம், பிரசன்ன ஆருட வல்லுநர் சிம்மம் ஆர்.யூ. மேகநாதன் அவர்கள் அடியார்களை வரவேற்று உபசரித்தார்.   மிகவும் இயற்கையான மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஸ்ரீ சிவ சத்தி பீடம் இருந்தது.  அடியார்கள் அனைவரும் பயணக் களைப்புத் தீரக் குளித்தனர்.   திரு மேகநாதன் அவர்கள் அவரது வீட்டில் வைத்திருந்த பச்சைக்கல் விநாயகர், பச்சைக்கல் சிவலிங்கம், மற்றும் பல்வேறு பளிங்குக் கற்களையும்,  படிக மாலைகளையும் காட்டினார்.


திரு மேகநாதன் அவர்களின் நண்பர் ஒருவரும் குருசாமி அவர்களைக் காண வந்திருந்தார்.  அவர் நெற்றி யெல்லாம் சந்தனம் பூசிக் குங்கும் வைத்து மிகவும் அருள் நிறைந்தவராகக் காட்சியளித்தார்.  அவரிடமிருந்த வலம்புரிச் சங்கு முதலாகப் பல்வேறு படிகமாலைகளையும் பளிங்குக் கற்களையும் கொண்டு வந்திருந்து ஒரு ஜமுக்காளத்தை விரித்து அதில் அழகாக அடுக்கி வைத்துக் காட்சிப் படுத்திக் குருசாமி அவர்களுக்கும் யாத்திரிகர்களுக்கம் காட்டினார்.

யாத்திரிகர் காசிஸ்ரீ தனசேகரன் அவர்கள் மதிய நேர உணவு தயாரிப்பதில் பெரிதும் உதவியாக இருந்து வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

ஓய்வு.
மதிய உணவு.

மாலை தேநீர் நேரத்தில், திரு மேகநாதன் அவர்களின் நண்பர் யாத்திரிகர்களிடம் இராமேசுவரம்-காசி பாதயாத்திரையின் சிறப்பு பற்றியும்,  குருவருளால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வெகுவாக எடுத்துக் கூறினார்.  யாத்திரை முடியும்வரை குருசாமி அவர்கள் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்யுங்கள்.  குருசாமியின் வழிகாட்டுதல் ஒன்றே இந்த யாத்திரையைப் புனிதமாக்கும் என்று கூறினார்.   அவரது பேச்சின் முடிவில் குருசாமி அவர்கள் அனைவருக்கும் விபூதி பிரசாதம் வழங்கினார்.  



இரவு உணவு.  திரு மேகநாதன் அவர்களும் அவரது குடும்பத்தினரும் யாத்திரிகர்களுடன் சேர்ந்து உணவு உண்டனர்.

ஓய்வு.


https://goo.gl/maps/FgLXp5w7UsFWvRwY6
இன்றைய பயண தூரம் 21 கி.மீ.