பயணக் கட்டுரை - காசி பாதயாத்திரை -
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
6 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....
இன்று 24ஆம் நாள் - ஆனி 4 (18.06.2014) புதன் கிழமை,
அதிகாலை 2.50 மணிக்கு சேலம் தெய்வீகம் திருமணமண்டபத்திலிருந்துபுறப்பட்டோம்.
வழக்கம்போல் காலைநேர வழிபாடு முடித்து, ஹார்லிக்ஸ் ரொட்டி சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினோம்.
வழக்கம்போல் காலைநேர வழிபாடு முடித்து, ஹார்லிக்ஸ் ரொட்டி சாப்பிட்டுவிட்டு பயணத்தைத் தொடங்கினோம்.
காலை 6.00 மணிக்குச் சுங்கச்சாவடி வந்து சேர்ந்தோம்.
தேநீர்.
8.00 மணிக்கு ஓமலூர் அக்ரஹாரம் அருள்மிகு தைலாம்பிகை சமேத வைத்தீசுவரன் கோயில் வந்து சேர்ந்தோம்.
காலை உணவு.
ஓய்வு.
மணி 1.30 க்கு மதிய உணவு.
2.30 க்கு அருள்மிகு தைலாம்பிகை சமேத வைத்தீசுவரன் கோயில் புறப்பட்டோம்.
3.50 pm
மாலை மணி 4.30 அளவில் சாலையோரம் இருந்து ஒரு வீட்டில் அமர்ந்து தீவட்டிப்பட்டியில் தங்குவதற்கான முகவரி அடங்கிய கடிதத்தையும், அங்கே தங்குவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் அன்பரின் அலைபேசி எண்ணையும் தேடிப்பார்த்து எடுத்தார். சிறிது நேரத்தில் அன்னதான வண்டியும் வந்து சேர்ந்தது. ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம். குருசாமி அவர்கள் அந்த வீட்டில் இருந்தவர்களுக்கும் ரொட்டியும் தேநீரும் கொடுத்தார். சிறிது நேரம் அங்கே அமர்ந்திருந்து
5.00
5,10
பூசாரிப்பட்டியில் ஒரு சிறு குன்றின்மேல் கோயில் ஒன்று இருந்தது.
6.30 க்கு தீவட்டிப்பட்டி S.V.T. திருமணமண்டபம் வந்து சேர்ந்தோம். ஊரார் ஒன்று கூடி நின்று வரவேற்பு அளித்தனர்.
குருஜி க்கு பாதபாஜை செய்து வழிபட்டனர்.
குருஜி அவர்களை ஆசிர்வதித்தார்.
இரவு ஊரார் அன்னதானம் அளித்தனர். உணவிற்குப் பிறகு, யாத்திரிகர் அனைவரும் அசதி மிகுதியால் அயர்ந்து தூங்கி விட்டனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவரைக் காண வந்திருந்தோரின் நலம் விசாரித்தார். அவர்களது குறைகள் நீங்கச் சில வழிகாட்டுதல்களை அருளிச் செய்தார்.
https://goo.gl/maps/MNswNvrbEjH8GPzt5
இன்றைய பயணம் 29 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக