பயணக் கட்டுரை -
அறுபடைவீடு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
இன்று 15ஆம் நாள் - ஆனி 8 (22.06.2017) வியாழக் கிழமை.
ஸ்பிக்நகர் கலையரங்கத்தில் அதிகாலை 3.00 மணிக்குக் காலைநேர வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டி ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுத் திருசசெந்தூருக்கு நடக்கத் தொடங்கினோம்.
வழியில் ரொட்டியும் தேநீரும்.
அன்னதான வண்டி வருவதற்குச் சிறிது நேரம் ஆனது. அதற்குள் யாத்திரிகர் சிலர் கோயில் வளாகத்தில் படுத்து அயர்ந்து தூங்கினர்.
கீரனூர் சாலையோரம் பதநீர் விற்பனை செய்தனர்.
அன்னதான வண்டியில் இருந்து கொடுப்பதைத் தவிர, வேறு எதையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது என்பது யாத்திரையில் ஒரு முக்கியமான விதி.
சாலையோரம் விற்கும் பதநீர் வாங்கிக் குடிக்க ஒரு ஆசை.
ஆனால் அந்தப் பதநீர் விற்கும் அம்மாவோ, யாத்திரை செல்வோர் பதநீர் சாப்பிடக்கூடாது என்று சொல்லி, எங்களுக்குப் பதநீர் விற்க மறுத்துவிட்டது.
ஆறுமுகநேரியில் உள்ள K.T.K திருமண மண்டபத்தில் வந்து தங்கினோம்.
ஓய்வு.
மதிய உணவு.
1960 - 70 ஆண்டுகளில் வயல்களில் தண்ணீர் இறைக்கத் திலா பயன்படுத்தப்படுவதைப் பார்த்துள்ளேன். இப்போது இங்கே ஒரு இடத்தில்தான் இன்றளவும் திலா பயன்படுத்தப்படுவதைப் பார்க்க முடிந்தது.
இதுவும் யாத்திரிகர்கள் பயன்படுத்துவதற்காகக் கட்டியுள்ளனர்.
இதுவும் யாத்திரிகர்கள் பயன்படுத்துவதற்காகக் கட்டியுள்ளனர்.
ஆறுமுகநேரியில் இருந்து புறப்பட்டு வீரபாண்டியன் பட்டணம் வழியாக மாலை 6.00 அளவில் திருச்செந்தூர் நகரத்தார் விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.
இரவு உணவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக