வெள்ளி, 12 ஜூன், 2020

13.06.2017 அறுபடைவீடு பாதயாத்திரை - 6ஆம் நாள் , வைகாசி 30

அறுபடைவீடு பாதயாத்திரை  - 6ஆம் நாள் 
வைகாசி 30 (13.06.2017) செவ்வாய்க் கிழமை

இன்று காலை மணி 4:45 க்கு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் அருகே உள்ள நகரத்தார் விடுதியில் இருந்து புறப்பட்டு மணி 7:05 அளவில் திருப்பரங்குன்றம் நகரத்தார் விடுதியை அடைந்தோம்.




நடந்து வரும்போது திப்பரங்குன்றம் மலையையும், இடும்பன் மலையையும் கண்டவுன் வணங்கிக் கொண்டோம்.




தடாதகை, தடாதகைப் பிராட்டியார்

அதன்பின் திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று உச்சிகால வழிபாடு செய்து கொண்டோம்.   வடக்குப் பார்த்த குடவரைக்கோயிலில் மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.  1) நேர்கிழக்கே உள்ள பெருமாளைப் பார்த்தபடி சிவலிங்கம். 2) மேற்கேயுள்ள சிவலிங்கத்தைப் பார்த்தபடி பெருமாள்.
சிவலிங்கத்திற்கும் பெருமாளுக்கும் இடையே வடக்குப் பார்த்தபடி 3) நாரதர் தேவசேனையுடன் முருகன் 4) துர்க்கை 5) பிள்ளையார்.   அதாவது கோயிலின் வெளியே நின்று கும்பிட்டால் நேர் எதிரே துர்க்கை இருக்கும்.   துர்க்கை நடுவில் இருக்க, துர்க்கைக்கு வலதுபுறம் முருகனும் பெருமாளும் உள்ளனர்.  துர்க்கையின் இடதுபுறம் பிள்ளையாரும் சத்தியகிரீஸ்வரரும் (சிவலிங்கமும்) உள்ளனர். 

மதுரையில் உள்ள நகரத்தார் சிலரும், திருப்பரங்குன்றம் அருகில் வசிக்கும் நகரத்தார் சிலரும் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றுச் சென்றனர்.

அறுபடைவீடு பாதயாத்திரை

https://goo.gl/maps/aE1kANeLFGKUxrFD8
இன்றைய பயணம் சுமார் 8 கி.மீ.

காலை உணவு.

மண்டபம் நன்கு காற்றோட்டமாக இருந்தது.  தண்ணீர் வசதியும் நன்றாக இருந்தது.   யாத்திரிகர் பலரும் அவரவர் ஆடைகளைத் துவைத்து உலர்த்தி மடித்து வைத்துக் கொண்டனர்.  

மண்டபத்தின் உள்ளே சமையக்கட்டை யடுத்தாற்போல் மரகதவிநாயகர் கோயில் உள்ளது.  யாத்திரிகர் அனைவரும் மரகதவிநாயகரை வணங்கி வழிபட்டனர்.

மதிய உணவு.
ஓய்வு.
மாலைநேர வழிபாடு, ரொட்டியும் தேநீரும்.
இரவு உணவு.
ஓய்வு.

குருசாமி பச்சைக்காவடி அவர்களது அடியார்க்கும் அடியேன்,

அன்பன் 
காசிஸ்ரீ முனைவர் நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக