செவ்வாய், 23 ஜூன், 2020

காசி பாதயாத்திரை - 30ஆம் நாள் - ஆனி 10 (24.06.2014)

பயணக் கட்டுரை - 
காசி பாதயாத்திரை - 
110 நாட்கள் - 7 மாநிலங்கள் - 2464 கி.மீ. பயணம்
6 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ....

இன்று 30ஆம் நாள் - ஆனி 10 (24.06.2014) செவ்வாய்க் கிழமை.

இன்று   காமன்தொட்டி என்ற ஊரில் இருந்து  புறப்பட்டோம்.  அதிகாலை மணி 3.10க்கு புறப்பட்டு குமுதேபள்ளி ஊர் வழியாக 6.10 க்கு  மணிக்கு ஓசூர்  வந்து சேர்ந்தோம்.

6.11 am

6.12 am
ஓசூர் குண்டாய் மோட்டார் நிறுவனம் அருகில் ஓசூர் நகரத்தார் வரவேற்பு அளித்தனர்.
6.20க்கு தேநீர்.


6.20 am
நகரத்தார் வரவேற்று அளித்த இடத்திற்கு அருகில் ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் சிற்பத் தொழிற்சாலை இருந்தது.  அதில் அழகழகான சிற்பங்கள் செதுக்கி வைத்திருந்தனர்.

6.24 am

6.25 am
தேநீர் சாப்பிட்டு முடிந்தவுடன் அங்கிருந்து புறப்பட்டுக் காலை 7.15 மணி க்கு ஓசூர் நகரத்தார் சங்கம் கல்யாண மஹால் வந்து அடைந்தோம்.  புதிதாகக் கட்டி முடித்துப் பயன்பாட்டிற்குத் தயாராக இருந்தது.  முதன்முதலாக காசிப் பாதயாத்திரிகர் தங்குவதற்காகப் பெருந்தன்மையோடு நகரத்தார் பெருமக்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

6.48 am

8.45 am
காலை உணவு.
நகரத்தார் பலரும் வந்து  குருஜியை வணங்கிக் கொண்டனர்.  குருஜி அவர்களை ஆசிர்வதித்தார்.
யாத்திரிகர் அனைவரும் நன்கு வசதியாகத் தங்கினர்.
ஓய்வு.
தங்கல்.

சமையல்காரர்களுக்குள் சண்டை - சமையல்காரர் மூன்று பேர்.  அவர்களில் ஒருவர் ஓசூருடன் பணியிலிருந்து நின்று கொள்வதாகத் தெரிவித்தார்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்தச் சமையல்காரருக்குப் பலவாறு அறிவுரைகளை வழங்கிக் காசிவரை பணியில் இருக்குமாறு சொன்னார்.  ஆனால் தலைமைச் சமையல்காரருக்கும் தனக்கும் எந்தவிதத்திலும் ஒத்துவராது என்றும்,  இத்துடன் வேலையிலிருந்து நின்று கொள்வதே அனைவருக்கும் நல்லது என்று தெரிவித்தார்.  குருசாமி அவர்களும் வேறு வழியில்லாமல் வேறொரு சமையல்காரரை ஏற்பாடு செய்து ஒசூருக்கு அனுப்பி வைக்குமாறு பொன்னமராவதில் உள்ள அன்பர்களுக்கு அலைபேசி வழியாகப் பேசினார்.  பணியிலிருந்து நின்று கொண்டவருக்கு உரிய பணத்தையும் வேட்டி துண்டும் கொடுத்து அனுப்பி வைத்தார்.  ஊருக்குப் போய்ச் சேர்ந்தவுடன் அலைபேசியில் தகவல் தெரிவிக்குமாறு கூறி வழியனுப்பி வைத்தார்.  யாத்திரிகர் பலரும் அவரவருக்கு இயன்ற உதவிகளைச் செய்து அந்தச் சமையல்காரரை நல்லபடியாக வழியனுப்பி வைத்தனர்.

https://goo.gl/maps/vFnCuZE1H1juymB56
இன்றைய பயணம் சுமார் 14 கி.மீ.

கடல்கோள் - குமரிக்கோட்டைக் கொடுங்கடல் கொண்டபோது உண்டான கடல்கோளால் தென்னிந்தியா முழுவதும் அழிந்துள்ளது.  கடல்கோளின் எச்சங்களை ஓசூரிலும் காண முடிந்தது.  இதன் விபரத்தைத் தனியாக எழுதிப் பதிவு செய்துள்ளேன்.  
https://theory-of-tsunamis-kalairajan.blogspot.com/2020/06/blog-post.html

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக