திங்கள், 8 ஜூன், 2020

07.06.2014 காசி பாதயாத்திரை (13 ஆவது நாள்)

07.06.2014 காசி பாதயாத்திரை (13 ஆவது நாள்)
வைகாசி 24  சனிக் கிழமை.

07.06.2014 அதிகாலை 3.40 க்கு நச்சாந்துபட்டியிலிருந்து புறப்பட்டோம்.
பேரையூர், நமணசமுத்திரம் , ஊர்கள் வழியாக  வெள்ளாறு  குண்டாறு களைக் கடந்து புதுக்கோட்டைக்கு 8.00 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

நகரத்தார்களும், காசிஸ்ரீ ஆறுமுகம் அவர்களும், பொதுமக்களும் ஊர் எல்லையில் ஒன்று கூடி மேளதாளங்கள் வைத்து வரவேற்பு வழங்கி அழைத்துச் சென்றனர்.







ஸ்ரீ ருக்மணி தாயார் சமே ஸ்ரீவிட்டல் பாண்டுரெங்கர் ஆலயத்தின் கோபுரக் கட்டுமானப் பணிகளைக் குருசாமி அவர்கள் பார்வையிட்டுத் தாயாரையும்  பெருமாளையும் வணங்கித் திருப்பணிக்குழுவினரை ஆசிர்வதித்தார்.
இயந்திரங்களின் உதவியுடன் தெப்பக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.





புதுக்கோட்டை நாட்டுக்கோட்டை நகரத்தார் திருமண மஹாலில் சிறப்பான வரவேற்புக் கொடுத்தனர்.   குருசாமி அவர்களிடம் நகரத்தார் பலரும் ஆசிகள் பெற்றுப் பிரசாதம் வாங்கிச் கொண்டனர்.













          

புதுக்கோட்டை காசிஸ்ரீ ஆறுமுகம் அவர்கள் அவரது இல்லத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்று சிறப்பானதொரு வரவேற்பு கொடுத்தார்.  குருசாமி அவர்களுக்கும்  யாத்திரிகர்களுக்கும் பாதபூஜை செய்து வரவேற்று விருந்தளித்தார்.  



ஊடகத்தினர்  வந்திருந்து குருசாமி அவர்களைப் பேட்டி எடுத்தனர்.  மழைவேண்டி மக்கள்நலன் வேண்டி இந்தப் பாதயாத்திரையை  மேற்கொள்வதாகக் குருசாமி அவர்கள் தெரிவித்தார்.

காசி பாதயாத்திரை

https://goo.gl/maps/qwVPkgcMUoBgtL3x5
இன்றைய பயணம் சுமார் 15 கி.மீ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக