இராமேசவரம் காசி பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமேசவரம் காசி பாதயாத்திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 ஆகஸ்ட், 2020

23.08.2015 காசி யாத்திரை

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி ஐயா அவர்களின், 12ஆவது வருட இராமேசுவரம் காசி நிறைவு பாதயாத்திரை.

23.08.2015 .....காலை மணி 10.00 க்கு கைலாகாட் என்ற ஊரில், ராஜ்தீப் கல்லூரி முதல்வரின் அன்பான வரவேற்பு. இன்றும் நாளையும் யாத்திரிகர் இங்கு தங்கல். நாளை 24.08.2015 இரவு இங்கிருந்து புறப்பட்டு செவ்வாய் 25.08.2015 அதிகாலை காசி மாநகர் அடைதல். காசி 30 கிமீ. தொலைவு.


 










23.08.2014 காசி பாதயாத்திரை - 90ஆம் நாள், ஆவணி 7

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று முன்தினம் (20.08.2014) கோரக்பூர் என்ற ஊர் வந்து சேர்ந்து இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம்.  

இன்று 90ஆம் நாள் - ஆவணி 7 (23.08.2014) சனிக் கிழமை.  அதிகாலை 3.00 மணிக்கு கோரக்பூரில் இருந்து புறப்பட்டோம்.

5.20 am

6.14 am

காலை மணி 6.15க்கு வெயின்கங்கா (bainganga https://en.wikipedia.org/wiki/Wainganga_River) நதிக்கரையில் உள்ள சாப்பரா (Chhapara) நகருக்கு வந்து சேர்ந்தோம்.

கோரக்பூர் வாழ் இளைஞர்கள் சாப்பரா வந்திருந்து நதிக்கரையில் நின்று யாத்திரிகர்களை வரவேற்றனர்.

6.17 am

இரும்பு சிமிண்ட் பயன்படுத்தப்படாமல்,  செங்கலும் சுண்ணாம்பும் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய பாலம் ஒன்று இருந்தது.
6.26 am
சாப்பரா (Chhapara) நகரில் வசிக்கும் கோரக்பூர் கிராமத்தினரின் உறவினர்கள் சாலையோரம் வந்து நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்றனர்.


யாத்திரிகர்களை அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர்.

6.41 am



அவரது இல்லத்தில்  ரொட்டியும் தேநீரும் கொடுத்து உபசரித்தனர்.  வழிச் செலவிற்குச் சிறிது பொருளுதவியும் செய்தனர். 





குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அந்தக் குடும்பத்தினர் அனைவரையும் ஆசீர்வதித்தார்.

7.04 am


7.10 am
காலை 7.05 அளவில் இங்கிருந்து மதை கிராமம் நோக்கிப் புறப்பட்டோம்.    



7.15 am

7.24 am
சாப்பரா (Chhapara) புறவழிச்சாலை வரை அந்த இளைஞர்கள் வந்து நின்று வழியனுப்பி வைத்தனர்.  இங்கிருந்து மலைகளின் நடுவே பாதை அமைந்து இருந்தது. 



8.20 am
8.56 am
காலை 9.00 மணிக்கு மலைகளின் நடுவே அமைந்துள்ள பஞ்சாரிமாதா கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.  
https://goo.gl/maps/G6MSuo5frLn6REeT8


கோரக்பூர் கிராம இளைஞர்கள் மூவரும் இந்தக் கோயிலுக்கும் வந்து சேர்ந்தனர்.



இங்கு மாதா வழிபாட்டுடன், இராம லெட்சுமணர்களை அனுமன் தன் தோளில் தூக்கிச் செல்வது போன்ற சிற்பமும் வழிபாட்டில் உள்ளது.

9.11 am
இங்கு யாத்திரிகர்களும் வாகனஓட்டிகளும் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.   சுத்தமான குடிநீர் வசதியும் உள்ளது.

9.48 am
சிறிது தூரத்தில் சிறியதொரு காட்டாறு ஓடுகிறது.

10.06 am

10.30 am
காலை 11.00 மணி அளவில் மதை என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்து இங்கள்ள பள்ளிக்கூடத்தில் தங்கி இருந்தோம்.

https://goo.gl/maps/mcyucn9XbofGQbqo8

இன்றைய பயணம் சுமார் 32 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


வியாழன், 20 ஆகஸ்ட், 2020

21.08.2014 காசி பாதயாத்திரை

21.08.2014 காசி பாதயாத்திரை 

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று  20.08.2014 என்ற ஊர் வந்து சேர்ந்து இருந்தோம்.  

இன்று 88ஆம் நாள் - ஆவணி 5 (21.08.2014) வியாழன் கிழமை.

இன்று முழு ஓய்வு நாள்.





குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


புதன், 19 ஆகஸ்ட், 2020

20.08.2014 காசி பாதயாத்திரை - 87ஆம் நாள், ஆவணி 4

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று  கோபால்கஞ்ச் என்ற ஊரின் புறத்தே இருந்த சிவன் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.

இன்று 87ஆம் நாள் - ஆவணி 4 (20.08.2014) புதன் கிழமை.

மாற்றி அமைக்கப்பட்ட பயணத்திட்டப்படி,   தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.00 க்கு கோபால்கஞ்ச் என்ற ஊரின் புறத்தே இருந்த சிவன் கோயிலில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.


வழிநெடுகிலும் பசுமையான வயல்கள் நிறைந்து காணப்பட்டன.  ஓரிடத்தில் இடங்களில் சில மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. 
சியோனி பைபாஸில் தேநீர்.




பண்டோல் என்ற ஊர் பைபாஸில் உள்ள "சிங்" பெட்ரோல் பங்க் உரிமையாளர் வரவேற்றார்.

சிறிது நேரம் ஓய்வு.

மதிய உணவு.

சுமார் 2.30 மணி அளவில் யாத்திரையைத் தொடர்ந்தோம்.




கோரக்பூர் கிராமத்தினர் சார்பாக இருவர்  இவ்வளவு தொலைவு வந்திருந்து வரவேற்றனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்தார்.





கோரக்பூர் அருகில் சாலையோரம் ஒரு குருதுவார் இருந்தது.  யாத்திரிகர்கள் விரும்பி படம் எடுத்துக் கொண்டனர்.




கோரக்பூர் கிராமத்தினர் கிராமத்தில் இருந்து நெடுஞ்சாலைக்கு வந்துநின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களை மலர்தூவி வரவேற்றனர்.  குருசாமி அவர்கள் எல்லோரையும் ஆசிர்வதித்தார்.












நெடுஞ்சாலையில் இருந்து கோரக்பூர் கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர்.




ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பெண்கள் நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.    அவர்களுக்கு அருள்வாக்குச் சொல்லி குருசாமி ஆசிர்வதித்தார்.




ஒருவருக்கு காலில் ஏற்பட்டிருந்த நோய்நீங்கிட வைத்தியம் கூறி ஆசிர்வதித்தார்.








தலைமைஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரும் இவரது குடும்பத்தின்ர் அனைவரும்  குருசாமி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றார். 




தனது மூத்த சகோதரனை வரவேற்பது போன்று அந்தக் குடும்பத்தினர் பெரிதும் மனம் நெகிழ்ந்து குருசாமி அவர்களை வரவேற்றனர். 

கோரக்பூர் கிராமத்திற்கு நாளை வருவதாகத்தான் பயணத் திட்டம்.  மாற்றியமைக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி ஒரு நாள் முன்னதாகவே  (20.08.2014) 5.00 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

21.08.2014 &  22.08.2014  இரண்டு நாட்கள் ஓய்வு நாட்கள். இங்கேயே தங்கியிருந்தோம்.

அடியார் வீட்டில் இரவு உணவு , ஓய்வு.

https://goo.gl/maps/61K9Bwum56HUrkKG6

இன்றைய பயண தூரம் சுமார் 38 கி.மீ

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

--------------------------------

काशी पाठ यात्रा

सिद्धार काशीश्री पचैक्कवडी अपनी 11वीं वार्षिक रामेश्वरम काशी पथयात्रा पर थे।

हमने 26.05.2014 को रामेश्वरम अरुलमिगु रामनाथस्वामी की पूजा करके काशी-पथयात्रा शुरू की

और कल हम गोपालगंज के एक शिव मंदिर में आकर रुके।

आज 87वाँ दिन है - 4 अगस्त (20.08.2014), बुधवार।

अपनी दैनिक पूजा के बाद हमने गोपालगंज के उस शिव मंदिर से सुबह 3 बजे अपनी तीर्थयात्रा जारी रखी।

रास्ते में हरे-भरे खेत दिखाई दे रहे थे। एक जगह कुछ हिरण चर रहे थे।

सिवनी बाईपास पर चाय और बिस्कुट।

पंडोल बाईपास स्थित "सिंह पेट्रोल पंप" के मालिक ने हमारा गर्मजोशी से स्वागत किया।

थोड़ी देर आराम किया।

दोपहर का भोजन किया।

लगभग 2:30 बजे हमने तीर्थयात्रा जारी रखी।

टोल प्लाजा के पास गोरखपुर के ग्रामीणों की ओर से दोनों युवाओं का स्वागत किया गया।

गुरुमगराज पचैकावटी ने दोनों को आशीर्वाद दिया।

गोरखपुर के पास सड़क किनारे एक गुरुद्वारा था। तीर्थयात्रियों ने तस्वीरें लीं।

गोरखपुर के ग्रामीण गाँव से राजमार्ग पर आए और गुरुमगराज पचैकावडी ने उनका फूलों से स्वागत किया।

गुरुमगराज ने सभी को आशीर्वाद दिया।

ग्रामीणों ने राजमार्ग से गोरखपुर गाँव तक गर्मजोशी से स्वागत किया।

महिलाएँ हर घर के द्वार पर खड़ी थीं और फूलों की वर्षा करके स्वागत कर रही थीं।

गुरुमगराज ने उन्हें आशीर्वाद दिया।

उन्होंने एक व्यक्ति को उसके पैर की बीमारी से शीघ्र स्वस्थ होने का आशीर्वाद दिया।

सेवानिवृत्त प्रधानाध्यापक, उन्होंने और उनके परिवार के सभी सदस्यों ने गुरुमगराज और तीर्थयात्रियों का स्वागत किया।

वे गुरुमगराज को अपना बड़ा भाई मानते थे।

यात्रा कार्यक्रम कल गोरखपुर गाँव पहुँचने का है।

लेकिन संशोधित यात्रा कार्यक्रम के अनुसार हम एक दिन पहले (20.08.2014) शाम 5 बजे पहुँच गए।

21.08.2014 और 22.08.2014 दो दिन विश्राम। हम यहीं रुके।

उनके घर पर भोजन और विश्राम।

https://goo.gl/maps/61K9Bwum56HUrkKG6

आज की यात्रा दूरी लगभग 38 किमी है।

गुरुमगराज काशीश्री पचैक्कवती का आशीर्वाद

और भगवान काशी विष्णुनाथ की कृपा हम पर सदैव बनी रहे।

आपका

काशीश्री, डॉ. एन.आर.के. कलैराजन,

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்