காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று கோபால்கஞ்ச் என்ற ஊரின் புறத்தே இருந்த சிவன் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 87ஆம் நாள் - ஆவணி 4 (20.08.2014) புதன் கிழமை.
மாற்றி அமைக்கப்பட்ட பயணத்திட்டப்படி, தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.00 க்கு கோபால்கஞ்ச் என்ற ஊரின் புறத்தே இருந்த சிவன் கோயிலில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.
வழிநெடுகிலும் பசுமையான வயல்கள் நிறைந்து காணப்பட்டன. ஓரிடத்தில் இடங்களில் சில மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன.
பண்டோல் என்ற ஊர் பைபாஸில் உள்ள "சிங்" பெட்ரோல் பங்க் உரிமையாளர் வரவேற்றார்.
சிறிது நேரம் ஓய்வு.
மதிய உணவு.
சுமார் 2.30 மணி அளவில் யாத்திரையைத் தொடர்ந்தோம்.
கோரக்பூர் கிராமத்தினர் சார்பாக இருவர் இவ்வளவு தொலைவு வந்திருந்து வரவேற்றனர்.
குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அவர்கள் இருவரையும் ஆசீர்வதித்தார்.
கோரக்பூர் அருகில் சாலையோரம் ஒரு குருதுவார் இருந்தது. யாத்திரிகர்கள் விரும்பி படம் எடுத்துக் கொண்டனர்.
ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் பெண்கள் நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அவர்களுக்கு அருள்வாக்குச் சொல்லி குருசாமி ஆசிர்வதித்தார்.
தனது மூத்த சகோதரனை வரவேற்பது போன்று அந்தக் குடும்பத்தினர் பெரிதும் மனம் நெகிழ்ந்து குருசாமி அவர்களை வரவேற்றனர்.
கோரக்பூர் கிராமத்திற்கு நாளை வருவதாகத்தான் பயணத் திட்டம். மாற்றியமைக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி ஒரு நாள் முன்னதாகவே (20.08.2014) 5.00 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
https://goo.gl/maps/61K9Bwum56HUrkKG6
இன்றைய பயண தூரம் சுமார் 38 கி.மீ
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக