காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, 13.08.2014 அன்று நாக்பூர் வந்து சேர்ந்தோம். 14.08.2014 நேற்று முன்தினமும், 15.08.2014 நேற்றும் நாக்பூரில் தங்கியிருந்தோம்.
இன்று 83ஆம் நாள் - ஆடி 31 (16.08.2014) சனிக் கிழமை.
இன்று தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 2.30 க்கு நாக்பூர் அன்பரின் வீட்டில் இருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.
3.01amகாலை 10.00 மணிக்கு இராமர் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கினோம். கோயில் அர்ச்சகர் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். கோயிலுக்கு அருகே சமையல்கூடம் இருந்தது. குரங்குகள் அதிகம் காணப்பட்டன.
https://goo.gl/maps/PqFLmgsLXBt6NmV68
மதிய உணவு. ஓய்வு.
மதிய உணவிற்குப் பின்னர் 3.11 மணிக்கு வழக்கமான வழிபாடு முடிந்ததும் யாத்திரையைத் தொடர்ந்தோம்.
மாலை 4.50 மணி அளவில், சாலையோரம் இருந்த “தாபா”வில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தோம்.
இங்கிருந்து காசி 700 கி.மீ. என்பதை அறிந்து யாத்திரிகர் மகிழ்ச்சி அடைந்தனர்.
4.55 pm
5.16 pm
தும்ரிகார்டு என்ற ஊரைக் கடந்து மன்சார் என்ற ஊரின் எல்லையில் உள்ள அரிசி ஆலைக்கு வந்து சேர்ந்தோம். குருசாமி பச்சைக்காடிவ அவர்களின் அடியார் இங்கே தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இரவு உணவு.
தங்கல்.
இன்றைய பயணம் சுமார் 37 கி.மீ
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக