வியாழன், 13 ஆகஸ்ட், 2020

15.08.2014 காசி பாதயாத்திரை - 82ஆம் நாள், ஆடி 30

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று முன்தினம் நாக்பூர் வந்து சேர்ந்து இருந்தோம்.  

இன்று 82ஆம் நாள் - ஆடி 30 (15.08.2014) வெள்ளிக் கிழமை.  

நேற்றும் இன்றும் நாக்பூரிலேயே தங்கி இருந்தோம்.

யாத்திரிகர்கள் நாக்பூர் வந்து சேர்ந்துள்ளது பற்றியும், நாளை (16.08.2014) நாக்பூரிலிருந்து காசிக்கு யாத்திரை மேற்கொள்ள உள்ளது பற்றியும்,

காசி (வாரணாசி) மற்றும் யாத்திரை நாட்களில் தங்கும் இடங்களில் உள்ள அன்பர்களின் முகவரிக்குக் கடிதம் அனுப்பட்டன.

தபால் பணிசெய்வோர் தவிர்த்து, மற்றபிற யாத்திரிகர் அனைவருக்கும் முழு ஓய்வு.


குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக