திங்கள், 10 ஆகஸ்ட், 2020

11.08.2014 காசி பாதயாத்திரை - 78ஆம் நாள், ஆடி 26

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.   இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று குட்கி என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.  

இன்று 78ஆம் நாள் - ஆடி 26 (11.08.2014) திங்கள் கிழமை. 

இன்று தினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 2.20 மணிக்கு குட்கி என்ற ஊரில்  இருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.  குட்கி ஊரில் இருந்து நெடுஞ்சாலை நன்றாக நான்குவழிச் சாலையாக இருந்தது.

கிங்கன்காட் (Hinganghat, Maharashtra 442301) என்ற ஊருக்குப் புறவழிச்சாலை போடப்படவில்லை.  ஊரில் நடுவே சாலை அமைந்துள்ளது.  எனவே ஆங்காங்கே வழிகேட்டு விசாரித்துக் கொண்டு நடந்து வந்தோம்.  அதிகாலை நேரத்தில் சாலையில் அதிகமானவர்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.  ஒரு மேம்பாலம் அடைக்கப்பட்டிருந்தது.  ஆனால் ஒருவர் அந்த மேம்பாலத்தின் மேலே எங்களை நடந்து செல்லுமாறு வழிகாட்டி உதவினார்.  அதனால் நாங்கள் விரைவாகவும் எளிதாகவும் அந்த ஊரைக் கடந்து வந்து விட்டோம்.  பாலம் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பாலத்திற்குக் கீழே நடந்து வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக் காலதாமதமாக வந்து சேர்ந்தார்கள்.

04.17 am

5.31 am

5.41 am

5.56 am

6.00 am

6.15 am
வாரணாசி இன்னும் 777 கி.மீ. தொலைவில் உள்ளது என்பதை அறிந்து மகிழ்ந்து யாத்திரையைத் தொடர்ந்தோம்.
6.33 am

6.40 am

6.44 am
வழியில் தேநீருக்காக யாத்திரிகர் அனைவரும் காத்திருந்தோம்.   வழக்கம்போல் அன்னதானவண்டி சிறிது நேரம் காலதாமதமாக 7.00 மணிக்கு வந்து சேர்ந்தது.  ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
7.17 am

7.40 am

7.47 am

7.48 am

7.51 am
பெங்களூர் 1008 கி.மீ. என்றிருந்த மைல்கல்லைக் கண்டு அனைவரும் படம் எடுத்துக் கொண்டோம்.

8.19 am

8.20 am

காலை 9.00 மணிக்கு ஜாம் என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.   இங்குள்ள பாரத்பெட்ரோலியம் அருகில் உள்ள பயணிகள் தங்கும் விடுதியில் தங்கினோம்.  அதன் உரிமையாளர் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களை வரவேற்றார்.
அந்த  உணவகத்தில் தங்கி யிருந்தோம்.

2.43 pm

மதிய உணவிற்கு பின்பு 2.30 மணிக்கு வழக்கமான வழிபாட்டை முடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

2.44 pm

2.46 pm
இராமேசுவரத்திலிருந்து காசிக்குப் பாதயாத்திரை செல்கிறோம் என்பதை அறிந்த அன்பர் ஒருவர் பெரிதும் வியந்து பாராட்டினார்.

3.01 pm

3.30 pm
காலையில் ஜாம் என்ற ஊருக்கு வரும் போது வாரணாசி 777 கி.மீ. என்று மைல்கல் இருந்தது.
வெகுதூரம் கடந்து ஜாம் வந்து சேர்ந்தோம்.  இப்போது ஜாம் நகரையும் கடந்து வெகுதூரம் வந்து விட்டோம்.  ஆனால் வாரணாசி 789 கி.மீ. என்று மைல்கல் இருந்து.  வெகுதூரம் நடந்த பின்னரும்  தொலைவு குறையாமல் 12 கி.மீ. கூடுதல் தொலைவு மைல்கல் காட்டியது.  யாத்திரிகர் அனைவரும் நெடுஞ்சாலையில் நடப்பட்டுள்ள இந்த மைல் அளவைக் கண்டு வியந்து, இது எப்படிச் சாத்தியமாகும் என நொந்துபோனார்கள்.

3.38 pm

மேகமூட்டமாக இருந்தது.

மழையும் இல்லை , வெயிலும் இல்லை.

5.01 pm

5.56 pm

5.56 pm

கண்டள என்ற ஊரை அடுத்துள்ள “கொறை” என்ற ஊரில் உள்ள “ஜகன்கபரி மாதா” கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.


5.57 pm

6.27 pm

6.35 pm

"வன நதி "  என்ற ஆற்றின் தென் கரையில் ஊரும் கோயிலும் உள்ளன. இந்த ஊரில் இந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக ஓடுகிறது.  குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அனுமதி பெற்று நாங்கள் மூவர் மட்டும் ஆற்றுக்குச் சென்றோம்.

ஆற்றில் மணல் இல்லை.  ஆற்லில் அமைந்துள்ள பாறைகளின் அமைப்பு வினோதமாக இருந்தது.

 தண்ணீர் சுத்தமாக குளிர்ச்சியாக இருந்தது.
ஆற்றில் நீராடினோம்.  சூரிய மேற்கே ஆற்றில் மறைந்து கொண்டிருந்தது.  அது  காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

6.39 pm

இரவு 7.00 மணிக்கு ஊரார் பஜனை செய்து தீபிகாமாதாவை வழிபட்டனர்.

இரவு உணவு.


https://goo.gl/maps/DFnWGT23HGmd2KP9A

இன்றைய பயண தூரம் சுமார் 36 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக