அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம். சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு நேற்று தெள்ளாறு வந்து தங்கி இருந்தோம்.
இன்று 56 ஆவது நாள், ஆடி 17 ( 02.08.2017) சனிக் கிழமை.
இரவு நல்ல மழை.
காலை மணி 4.30க்கு யாத்திரை தொடங்கியது.
வழிநெடுக மழை பெய்து இருந்தது. வந்தவாசியைக் கடந்து செல்லும் வரை குடை பிடித்துக் கொண்டே நடந்தோம்.
வந்தவாசி கடந்து 3 கி.மீ. சென்ற பின்னர் சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்கில் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
வந்தவாசியிலிருந்து சுமார் 3 கி.மீ.தொலைவில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில், மலைமேல் உள்ள அருள்மிகு ஸ்ரீ தவலகிரி ஈஸ்வரர் கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டு சென்றோம்.
https://goo.gl/maps/DjxMzSiWNHQFCdkP9
இன்னும் ஒரு 4 கி.மீ. நடந்த பின்னர் காலைச் சிற்றுண்டி. நல்ல வெயில்.
பகல் 11.15 மணிக்கு மேல்மா கூட்டுரோடு சீனிவாசா மண்டபத்தை அடைந்தோம்.
ஓய்வு.
மதிய உணவு.
மாலை நேரம் தேநீர் சாப்பிட்ட பின்னர், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்களுடன்,
மாலை நேரம் தேநீர் சாப்பிட்ட பின்னர், குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்களுடன்,
அருகில் உள்ள சிவனடியார் ஜானகிராமன் பிரதிஷ்டை செய்திருந்து அருள்மிகு அகிலாண்டேசுவரி உடனமர் அண்ணாமலேசுவரர் திருக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து கொண்டோம்.
காசிஸ்ரீ ஜானகிராமன் அவர்கள் இந்த இடத்தில் ஆலயம் அமைந்த அற்புதமான நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார். சந்நிதியின் நேர்பார்வையில் வீதி அமைந்துள்ளதையும் காட்டினார்.
இரவு வழிபாடு.
உணவு
ஓய்வு.
https://goo.gl/maps/8c4eN8T3Ro4keCij9
இன்றைய பயணம் சுமார் 25 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக