வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.
இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று அடிலாபாத் அருகில் மாவாலா என்ற ஊரின் எல்லையில் உள்ள லெட்சுமி கல்யாண மண்டபம் வந்து தங்கி இருந்தோம்.
இன்று 73ஆம் நாள் - ஆடி 21 (06.08.2014) புதன் கிழமை.
அடிலாபாத்தில் வசிக்கும் குருஜி பச்சைக்காவடி அவரிகளின் அடியார்கள் பலரும் வந்து பார்த்து ஆசிபெற்றுச் சென்றனர். யாத்திரிகர்கள் தங்குதவற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தனர்.
யாத்திரிகர்களுக்கு முழு ஓய்வு. பலருக்கும் நடையன் (செருப்பு) தேய்ந்து விட்டன. குருசாமி பச்சைக்காவடி அவர்கள், அன்னதான வண்டியில் கட்டி வைக்கப்பட்டிருந்த புதிய நடையன்களை எடுத்துவரச் செய்து, தேவையானவர்களுக்குப் புதிய நடையன்களை வழங்கினார். இது போன்று, தேவைப்படுவோருக்கு எண்ணைய், குளியல் சோப்பு, சலவை சோப்பு, பற்பசை, டார்ச்லைட் பேட்டரி, புது வேட்டி, புதுச் சட்டை, படுக்கை விரிப்பு என எல்லாப் பொருட்களும் வழங்கப்பட்டன.
யாத்திரிகர்களின் படுக்கை விரிப்புகள் மாறிவிடாமல் இருப்பதற்காக அந்தந்த யாத்திரிகர்களின் வரிசைஎண்ணை காசிஸ்ரீ கலியபெருமாள் அவர்கள் பெயிண்டில் எழுதிக் கொடுத்தார்.
யாத்திரிகர்களின் படுக்கை விரிப்புகள் மாறிவிடாமல் இருப்பதற்காக அந்தந்த யாத்திரிகர்களின் வரிசைஎண்ணை காசிஸ்ரீ கலியபெருமாள் அவர்கள் பெயிண்டில் எழுதிக் கொடுத்தார்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக