அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.
சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு
நேற்று காஞ்சிபுரம் வந்து தங்கி இருந்தோம்.
இன்று 58 ஆவது நாள், ஆடி 19 ( 04.08.2017) திங்கள் கிழமை.
அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டோம்.
வழியில் தேநீர்.
நெமிலிரோடு சேந்தமங்கலம் பாரத் வித்யா மெட்ரிகுலேசன் பள்ளியில் 9.00 மணிக்கு சிற்றுண்டி.
பள்ளி நிருவாகத்தினரும் ஆசிரியர்களும் குருசாமி பச்சைக்காவடி அவர்களை வணங்கி, விபூதி பிரசாதம்பெற்றுக் கொண்டனர்.
மதிய உணவு.
ஓய்வு.
மாலை நேரத்தில் தேநீர்.
அதன்பின்னர் யாத்திரை நிறைவு செய்வது தொடர்பான சில அறிவுரைகளை குருசாமி அவர்கள் வழங்கினார்.
இரவு வழிபாடு.
ஓய்வு.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அறுபடைவீடு ஆறுமுகப்பெருமானின் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக