திங்கள், 31 ஆகஸ்ட், 2020

01.09.2014 காசி பாதயாத்திரை - 99 ஆம் நாள், ஆவணி 16

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று 31.08.2014  கட்னி என்ற ஊருக்கு வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.

இன்று 99 ஆம் நாள் - 01.09.2014 ஆவணி 16 

இன்று கட்னியில் தங்கியிருந்தோம்.  ஓய்வு.



கட்னியில் வாழும் அடியார்கள் பலரும் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றனர்.



மாலை நேரம் சூரியன் மறையும் வரை வெயில் கடுமையாக இருந்தது.



0குருசாமி அவர்கள் முதன்முதலாக இராமேசுவரம் காசி பாதயாத்திரை மேற்கொண்டிருந்த போது, கட்னியில் இந்த அடியார் வீட்டில் தங்கியுள்ளார்.   அந்த வீட்டிற்கு மட்டும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் யாத்திரிகர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு  சென்று வந்தார்.


யாத்திரிகர் பலரும் ஒன்றாகக் கூடி அமர்ந்து தத்துவ விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.



பல்வேறு விதமான காய்கறிகளுடன் சுவையான உணவு.



ஓய்வு.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக