காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று நர்மதா தில்வாராகாட் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 94ஆம் நாள் - ஆவணி 11 (27.08.2014) புதன் கிழமை.
தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 2.15 க்கு நர்மதா தில்வாராகாட் என்ற இடத்தில் இருந்து யாத்திரயைத் தொடர்ந்தோம். அந்த அர்த்தசாமி நேரத்திலும் கோரக்பூர் அன்பர்கள் நேரில் வந்து யாத்திரிகர்களை வழி அனுப்பி வைத்தனர்.
ஜபல்பூர் பைபாஸ் வழியாக பனகர் என்ற ஊருக்கு 9.10 க்கு வந்து சேர்ந்தோம்.
பணகர் ( Panagar, पनागर) ஊரில் உள்ள குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அடியார் ஒருவர் ஊர் எல்லையில் வந்து நின்று யாத்திரிகர்களை வரவேற்று, அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அடியாரின் இல்லத்தில் தங்கினோம்.
அவர் யாத்திரிகர்கள் தங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நன்றாக செய்து கொடுத்தார்.
பணநகரில் நகரத்தார் வீடு - நாங்கள் தங்கியிருந்து வீடானது அப்படியே செட்டிநாடு வீடுகளை போன்றதொரு அமைப்பில் கட்டப்பட்டிருந்தது. வீட்டின் முன் மிகப் பெரிய திண்ணை, முகப்பு (வரவேற்பறை), வளவு ( புழங்கும் இடம் ), வளவு முற்றம் மற்றும் வீட்டின் அறைகளை கொண்டதாகும், சாப்பிடும் இடம், சமையலறை, கொள்ளை என அமைந்திருந்தது.
குருசாமியின் அடியார்கள் பலரும் வந்திருந்து ஆசிபெற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக