காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று மொன்டிகுட்டா வந்து சேர்ந்து பள்ளிக்கூடத்தில் தங்கி இருந்தோம்.
இன்று 70ஆம் நாள் - ஆடி 18 (03.08.2014) ஞாயிற்றுக் கிழமை.
இன்று அதிகாலை 2.35 மணிக்கு யாத்திரைக்குத் தயார் ஆனோம். வழக்கம்போல் காலை வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு
அதிகாலை 3.00 மணிக்கு மொன்டிகுட்டா (Mondigutta) கிராமத்தில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.
பெரிய மலைகளுக்கு இடையில் சாலை சென்றது.
மிகப்பெரிய ஏற்றம். அங்கு பைரவள்ளி என்ற கிராமம். அதற்கு அடுத்து லிங்கோத் என்ற கிராமம். பெரிய மலைகளின் சரிவுகளில் உள்ள கிராமங்களில் தெருவிளக்குகள் எரிவது தெரிந்தது.
பேரிக்கான் (B) என்ற ஊர் அருகில் பகல் உணவு.
நெரிடிகுண்டாவில் தனியார் பள்ளியில் ஓய்வு , மதிய உணவு.
2.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டோம்.
லிக்சப்பூர் வந்து ஒரு ஏற்றம்.
அங்கிருந்து பார்த்தால் பெரிய மலைத்தொடர்கள் தூரத்தில் தெரிந்தன. சிறிது தூரத்தில் பள்ளத்தாக்கு, சாலையில் பெரிய இறக்கம். அங்கே குப்டி , தானம் என்ற இரண்டு கிராமங்கள். பிறகு மலை ஏற்றம்.
அங்கு தேநீர்.
தேவரு நாயக் தண்டா, சாத்நாயர் , இஸ்லாம்பூர் வழியாக இச்சோடா என்ற ஊர் எல்லையில் உள்ள "சார்ப் கார்டன் " என்ற கல்யாண மண்டபத்திற்கு
மாலை 5.00 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
இன்றைய பயணம் முழுவதும் மலைகளுக்கு இடையே அமைந்தது.
ஏழையின் கண்ணீரும் இளநீரும் - இந்த மண்டபத்தில் அருகில் இளநீர் விற்றுக் கொண்டிருந்த ஒருவர் யாத்திரிகர் அனைவருக்கும் இளநீரை இலவசமாகக் கொடுத்தார். இளநீர் வியாபாரியிடம் இலவசத்தை வாங்க விரும்பாமல் நாங்கள் பணம் கொடுத்த போது வாங்க மறுத்து விட்டார். 2013ஆம் ஆண்டு அவருடைய மகன் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்துள்ளார். அந்த வருடம் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் பாதயாத்திரை வந்தபோது அவருக்கு இளநீர் கொடுத்து உபசரித்துக் கண்ணீர்விட்டுத் தனது துன்பநிலையைக் கூறியுள்ளார். குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அருள்வாக்குப்படி, ஆச்சரியமான முறையில் நோய்வாய்ப்பட்டிருந்த மகன் பிழைத்துக் கொண்டார் என்றும், குருசாமி பச்சைக்காவடி அவர்களின் ஆசியால்தான் இது நடந்தது என்றும் கூறினார். https://goo.gl/maps/zA4LYMmmtxpPT6T57
ஓய்வு.
தங்கல்.
https://goo.gl/maps/TrbMixqhHVEVrsMS6
இன்றைய பயணம் சுமார் 37 கி.மீ.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக