காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று மதை என்ற ஊர் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 91ஆம் நாள் - ஆவணி 8 (24.08.2014) ஞாயிற்றுக் கிழமை.
தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.30க்கு மதை என்ற ஊரில் உள்ள பள்ளியில்இருந்து யாத்திரயை தொடர்ந்தோம். சாமரூர் (Sammarur) என்ற ஊர் வரும் போது விடிந்து விட்டது. ஆயிரக்கணக்கான காகங்கள் ஒன்றாக பறப்பதைப் பார்க்க முடிந்தது.
சுற்றிலும் மலைத்தொடர்கள் நிறைந்து காணப்பட்டன. பாதை ஏற்றமும் இறக்கமுமாகவே இருந்தது. 13 கி.மீ. பயணத்திற்கு பின்னர் ஒரு மலை ஏற்றத்தின் உச்சியில் உள்ள அனுமன் கோயிலில் தேநீர். அந்த இடத்தை தாண்டியதும் பெரும் பள்ளத்தாக்குகளும், சிறு ஓடைகளும் தென்பட்டன. அங்கிருந்த கிராமத்தில் காலை உணவு.
குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அடியார் ஒருவர் யாத்திரிகர்கள் நடந்து வந்து கொண்டிருப்பதை அறிந்து அவரது மோட்டார்பைக்கில் குருசாமியைக் காண வந்தார்.
வந்திருந்த அடியாருடன் யாத்திரிகர் அனைவரும் சாலையோரம் இருந்த பள்ளிக்கூட வாயிலில் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டோம். அதன்பிறகு குருசாமி அந்த அடியவரை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
10.15 am
குருசாமி பச்சைக்காவடியின் அடியார் சாய் தாபாவில் யாத்திரிகர்கள் தங்குவதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார். நீண்ட தூரம் நடந்து வந்த களைப்பினால் யாத்திரிகர் பலரும் அயர்ந்து படுத்துவிட்டதைக் கண்ட அவர் விரைந்து சென்று அனைவருக்கும் "குளோப்ஜாம்" வாங்கி வழங்கினார்.
காலிஃபிளவர் சூப் வழங்கப் பட்டது.
ஓய்வு.
மதிய உணவு.
தங்கல்.
இரவு முழுவதும் கடை (தாபா) திறந்து இருந்தது. பயணிகள் பலர் வந்து உணவு சாப்பிட்டுச் சென்றனர்.
https://goo.gl/maps/NKVvmztqyhP8DGPcA
இன்றைய பயண தூரம் சுமார் 29 கி.மீ.
காசி இன்னும் 520 கி.மீ. உள்ளது.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக