காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று “கொறை” என்ற ஊரில் உள்ள “ஜகன்கபரி மாதா” கோயிலுக்கு வந்து சேர்ந்து இருந்தோம்.
இன்று 79ஆம் நாள் - ஆடி 27 (12.08.2014) செவ்வாய்க் கிழமை. தினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 3.10 மணிக்கு “கொறை” என்ற ஊரில் இருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.
6.08 am
பம்கனி (Bamhani) என்ற ஊரின் அருகே இரயில்வே மேம்பாலம் அருகே இருந்த காட்டில் அதிகாலையில் ஆயிரக்கணக்கான பச்சைக்கிளிகள் கூட்டம் கூட்டமாக பறந்து சென்றன. காணக் கண்கோடி வேண்டும். குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அருள்மிகு அன்னை மதுரை மீனாட்சியை நினைந்து வணங்கிக் கொண்டார்.
காலை உணவு.
https://goo.gl/maps/CrLVptWvxQEJUAZP7
இன்றைய பயணதூரம் சுமார் 25 கி.மீ.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக