16.08.2015 காசி பாதயாத்திரை -
வலையபட்டி பச்சைக்காவடி அவர்களது தலைமையிலான இராமேச்சுரம் காசி பாதயாத்திரை குழுவினர் மத்தியப் பிரதேசம் மங்காவான் என்ற ஊரில் உள்ள துர்கா கோயிலிலிருந்து அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டோம்.
காலையில் தேநீர் அருந்தும் போது நான்கு மிதிவண்டி யாத்திரிகர் வந்தனர். 200கிமீ தொலைவில் உள்ள கோயிலுக்குச் சென்று வருவதாகக் கூறினர். குருசாமி அவர்கள் அவர்களுக்கும் ரொட்டியும் தேநீரும் வழங்கச் செய்தார்.
மௌகஞ் ஊரார் ஊருக்குப் 12கிமீ. தொலைவிலேயே வந்து நின்று வரவேற்பு அளித்தனர். மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது.
மதியம் 1.00 மணிக்கு மௌகஞ் என்ற ஊருக்கு வந்து சேர்ந்தோம். கல்லூரி வளாகத்தில் தங்கினோம். Government SKN PG College Mauganj Rewa MP
காசி 169 கி.மீ. தொலைவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக