காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று இச்சோடா என்ற ஊர் எல்லையில் உள்ள "சார்ப் கார்டன் " என்ற கல்யாண மண்டபத்திற்கு வந்து தங்கி இருந்தோம்.
இன்று 71ஆம் நாள் - ஆடி 19 (04.08.2014) திங்கள் கிழமை.
இன்று முழு ஓய்வு.
காலத்தாற் செய்த உதவி -
இச்சோடாவில் வசிக்கும் அன்பர் ஒருவர் வந்து, யாத்திரிகர்களின் கிழந்துபோன பைகளை எல்லாம் வாங்கிச் சென்று தைத்துக் கொண்டுவந்து கொடுத்தார். யாத்திரிகர்கள் கேட்டுக் கொண்ட சிறுசிறு வேலைகளை எல்லாம் சலிப்பு இல்லாமல் செய்து கொடுத்தார். நிறைய மிக்சர் முருக்கு கொண்டுவந்து கொடுத்தார்.
மாட்டுச் சந்தை -
மண்டபத்திற்கு அருகே ஆடுமாடு விற்பனைச் சந்தை நடந்து. பெரிய அளவில் மக்கள் கூடியிருந்தனர். ஏராளமான ஆடு மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
மண்டபத்திற்கு அருகே ஆடுமாடு விற்பனைச் சந்தை நடந்து. பெரிய அளவில் மக்கள் கூடியிருந்தனர். ஏராளமான ஆடு மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இட்லிக்கு ஆசைப்பட்டு -
யாத்திரிகர்கள் இட்லி சாப்பிட்டு வெகுநாட்களாகி விட்டன. மொத்தம் 25 பேர் சாப்பிடத் தேவையான இட்லிகளுக்கு மாவு ஆட்டுவது யார்?
இரண்டுஇரண்டு பேர்களாகச் ஜோடி சேர்ந்து இட்லிமாவு ஆட்டுவது என்று முடிவானது.
காசிஸ்ரீ சிவப்பாவும் காசிஸ்ரீ காளைராசனும் ஒருஜோடி.
காசிஸ்ரீ சரவணனும் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் ஒருஜோடி.
காசிஸ்ரீ சரவணனும் காசிஸ்ரீ அங்கமுத்து அவர்களும் ஒருஜோடி.
காசிஸ்ரீ சுப்பிரமணியன் அவர்களும் காசிஸ்ரீ நம்பிராஜன் அவர்களும் ஒருஜோடி.
காசிஸ்ரீ தொப்பை என்ற கலியபெருமாள் அவர்கள் யாருக்குக் கைவலித்தாலும், அவர்களுக்குப் பதிலாக மாவு ஆட்டினார்.
இப்படியாக இட்லிமாவு ஆட்டி முடித்தோம்.
முடிவாகக் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் மாவுகரைத்துத் தருகிறேன், ஆட்டிய மாவு எல்லாவற்றையும் எடுத்து வாருங்கள் என்று கேட்டார். ஆனால் சமையல்காரர் கொடுக்க மறுத்துவிட்டார். (மறுநாள் காலைப் பலகாரமாக இட்லி வரும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில், இட்லிக்குப் பதிலாக ஊத்தப்பம் வந்தது.)

யாத்திரிகர் பலரும் ஆடைகளைத் துவைத்துக் காயவைத்துக் கொண்டனர்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக