02.08.2015 காசி யாத்திரை,
குருசாமி பச்சைக்காவடி அவர்களும், யாத்திரிகர்களும் நர்மதை
ஆற்றங்கரையில் உள்ள தில்வார்காட் வந்து சேர்ந்தோம்.
தில்வார்காட்டில் உள்ள அடியார்கள் வந்து நின்று குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர்.
தில்வாரா காட்டில் (Tilwara Ghat) உள்ள பயணியர் விடுதியில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தனர்.
இங்கு ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. பாலத்திற்கு உள்ளே தண்ணிர் ஓடுகிறது. அதாவது தண்ணீர்க் கால்வாய்க்கு மேலே சாலை அமைக்கப்பட்டுள்ளது. நர்மதை ஆற்றின் குறுக்கே அணைகட்டித் தண்ணீரைக் கால்வாய் வழியாகப் பாசனத்திற்குக் கொண்டு செல்கின்றனர். ஆற்றின் தென்பக்கம் ஓடிய தண்ணீர்க் கால்வாய் இந்த இடத்தில் பாலத்தின் வழியாக ஆற்றைக் கடந்து, ஆற்றிற்கு வடக்கே உள்ள பகுதிக்குச் செல்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக