வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று தும்ரிகார்டு ஊரின் புறத்தே இருந்த அரிசி ஆலைக்கு வந்து சேர்ந்து இருந்தோம்.
இன்று 84ஆம் நாள் - ஆவணி 1 (17.08.2014) ஞாயிற்றுக் கிழமை.
இன்றுதினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 2.50 மணிக்கு தும்ரிகார்டு ஊரின் புறத்தே இருந்த அரிசி ஆலையில் இருந்து யாத்திரையைதொடர்ந்தோம்.
3.03 amமண்சேர் என்ற ஊரில் இருந்து பயோனி வரை அடர்த்தியான காடு. புலிகள் சரணாலயம் உள்ளது.
வழியில் அன்பர் ஒருவர் வண்டியை நிறுத்தி இறங்கி வந்து யாத்திரிகர் களுக்கு வாழைப்பழம் வழங்கினார். தானும் காசிக்கு சென்று கொண்டு இருப்பதாக கூறினார். பல முறை முயன்றும் காசிக்குப் பாதயாத்திரையாகச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை யென்றும், நடந்து செல்லும் நீங்கள் எல்லோரும் பாக்கியவான்கள் என்றும் சொன்னார்.
चोरबहुलि मोगरा சோர்பாஹுலி மோக்ரா என்று திருடர்கள் நிறைந்த இடம் என்ற பெயரும், புலிகள் நிறைந்த காடு என்ற செய்தியும் மனதிற்குச் சிறிதளவும் அச்சத்தைக் கொடுத்தது. ஆனால் நடைப்பயணத்தில் எந்தவிதமான அச்சமும் இல்லை. சாலை விரிவாக்கத்தினால் வாகனங்கள் அதிகமான எண்ணிக்கையில் சென்று கொண்டிருந்தன.
चोरबहुलि मोगरा சோர்பாஹுலி மோக்ரா என்ற ஊர் வழியாக பயோனி என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.
10.57 am
11.25 மணிக்கு தும்ரிகார்டு கூட்டுறவு சங்கத்தில்
மதிய உணவு.
பயோனியில் தங்கல், ஓய்வு.
https://goo.gl/maps/kE2fGYph2ESQaSkh9
பயண தூரம் 24 கி.மீ
இரவு உணவு.
தங்கல்.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக