சனி, 22 ஆகஸ்ட், 2020

குஸ்தி போட்டுப் பிள்ளையாரைக் கும்பிடும் கிராமத்தினர்.

பாதயாத்திரையில் பார்த்தது .....

பிள்ளையார்சதுர்த்தி சிறப்புக் கட்டுரை -

குஸ்தி போட்டுப் பிள்ளையாரைக் கும்பிடும் குனேறுமோசாம் கிராமத்தினர்.  

மத்தியப்பிரதேசம் சிகோரா நகரின் அருகில் உள்ளது  குனேறுமோசாம் என்ற கிராமம்.  இங்கு வருடந்தோரும் பிள்ளையார்சதுர்த்திக்கு முதல்நாள் மாலைநேரத்தில் குஸ்தி போட்டிகளை நடத்துகின்றனர்.

ஆறு வருடங்களுக்கு முன்பு....  இராமேசுவரத்தில் இருந்து காசிக்குப் பாதயாத்திரை சென்ற போதுஆவணி 12(28.08.2014) அன்று குனேறுமோசாம் என்ற கிராமத்தைச் சென்று சேர்ந்து தங்கியிருந்தோம்.


விடிந்தால் விநாயகர் சதுர்த்தி . கிராமத்தில் நிலத்தை கிளறி விளையாட்டு மைதானம் அமைத்திருந்தனர்.  பார்ப்பதற்கு கபடி விளையாட்டு மைதானம் போல் இருந்தது.  என்ன விளையாட்டு என் விசாரித்த போது "அஹாடா" (aakhada) என்றனர்.  எங்களில் யாருக்கும் இந்தச் சொல்லின் பொருள் தெரியவில்லை.





மாலை 4.00 மணிக்கு கூட்டம் கூட ஆரம்பித்தது.  யாத்திரையாக வந்து தங்கியிருந்த நாங்களும் விளையாட்டை வேடிக்கை பார்க்கச் சென்றோம்.

ஊரார் எங்களை வரவேற்று இருக்கைகள் கொடுத்து அமரச் செய்து வெற்றி வீரர்களுக்கான பரிசுகளை எங்கள் கைகளால் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  

போட்டி ஆரம்பமான போதுதான் அது "மல்யுத்தம்என்று தெரிந்தது.









வயது சிறுவர் முதல் 30 வயது இளைஞர் வரை பங்கேற்றனர்.

முதலில் பயிற்சியின் போது பயன் படுத்தும் பொருட்களை வைத்து பூஜை செய்து அவரவர் ஆசான்களை வணங்கிக் கொண்டனர்.  பரிசு பொருளை கூட்டத்தினரிடம் காட்டி,  பரிசை வென்றிட வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்

போட்டியாளர் (முதல் இருவர் ) களத்தில் இறங்கிய உடன் போட்டி துவங்கி விடுகிறது.   போட்டிக்கு 2, 3, 5 நிமிடங்கள் என நேரம் ஒதுக்கப் படுகிறது.

முதுகில் மண் ஒட்டுமாறு எதிராளியை கீழே தள்ள வேண்டும் . 

முதுகில் மண் ஒட்டியவர் தோற்றவர் ஆவார்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் யாரும் வெற்றி தோல்வி அடைய வில்லை என்றால் , போட்டி சமன் என்று அறிவிக்கப்படுகிறதுபோட்டியாளர் இருவரும் விருப்பம் தெரிவித்தால் போட்டி மீண்டும் நடை பெறுகிறது.

போட்டிகள் மிகவும் கடுமையாகவும் விறுவிறுவுப்பாக இருந்தன.

வெற்றி வீரர்களுக்கு யாத்திரிகர் பரிசுகளை வழங்கினர்

வீரர் களை ஊக்கப்படுத்தும் வகையில் பணப்பரிசுகளும் யாத்திரிகர்களால் 

வழங்கப்பட்டன.







































நடுவர் மற்றும் ஆசான்களை வணங்கி போட்டிகள் நிறைவடைந்தன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆண்டு தோறும் குஸ்தி போட்டி களை கிராமத்தினர் சிறப்பாக நடத்துவது பெருமையாக இருந்தது.

இந்தியாவின் ஆன்மிகம் வீரம் வளமை கிராமங்களில் உள்ளன.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக