திங்கள், 3 ஆகஸ்ட், 2020

தலைகீழாக நிற்கும் மைல்கற்கள்

தலைகீழாக நிற்கும் மைல்கற்கள்

காசி பாதயாத்திரையின் போது கண்டது ....

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று இராமேசுவரத்தில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது.  அந்த நேரம் முதல்,  கண்ணில் தட்டுப்படும் மயில் கல் (Mail stone) ஒவ்வொன்றையும் பார்த்து எவ்வளவு தொலைவு நடந்து வந்துள்ளோம்? எவ்வளவு நேரம் நடந்துள்ளோம்? என மனக்கணக்காகப் போட்டுக் கொண்டே யாத்திரிகர்கள் நடந்து சென்றோம்.

110 நாட்களில் - 7 மாநிலங்கள் வழியாக - 2464 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்தப் பாதயாத்திரைப் பயணத்தில்,  நாமக்கல் முதல் காசி (வாரணாசி) வரை சுமர் 2100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை எண் 7 வழியாக அமைந்தது.  

இந்த நெடுந்தொலைவுப் பயணத்தில் இரண்டு இடங்களில் மட்டும் மைல்கற்கள் தலைகீழாக நடப்பட்டிருந்தன.  தலைகீழாக நடப்பட்டிருந்த அந்த மயில் கற்களைக் கண்டு வியந்து போனோம்.   இவ்வாறு தலைகீழாக நடப்பட்ட மைல்கற்களை வேறு எங்கும் நாங்கள் காணவில்லை.

01.08.2014  03.28 am

01.08.2014  05.35 am

1) ஆந்திர மாநிலத்தில், அர்மூர் (ARMOOR) என்ற ஊரை நெருங்கும் போது, 01.08.2014 அன்று அதிகாலையில் நடந்து செல்லும் போது 330 கி.மீ. என்ற மைல்கல் தலைகீழாக நடப்பட்டிருந்ததைக் கண்டு வியந்து போனாம்.  சிறிது தொலைவு நடந்தவுடன் நாக்பூர் 330 கி.மீ. என்ற பெரியதொரு மைல்கல் இருந்தது.

01.08.2014  05.37 am


01.08.2014  06.20 am

01.08.2014  06.51 am

2)
330 கி.மீ. மைல்கல் பற்றி யாத்திரிகர்கள் பேசிக்கொண்டே நடந்து செல்லும்போது,   325 கி.மீ. என்றொரு கல்லும் தலைகீழாக நடப்பட்டிருந்தது கண்டு மேலும் வியந்து போனோம்.    இந்த இடத்திலிருந்து சிறிதுதூரம் நடந்து சென்றவுடன் நாக்பூர் 325 கி.மீ. என்று பெரியதொரு மைல்கல் இருந்தது.


01.08.2014  06.58 am

2464 கி.மீ. தொலைவிலான இராமேசுரவம் - காசி பாதயாத்திரையில் எத்தனையே நிகழ்ச்சிகள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருந்தாலும்,  தலைகீழாக நின்ற இந்த இரண்டு மைல்கற்களும் யாத்திரிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பெற்றுவிட்டன என்றால் அது மிகையாகாது.

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக