வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று 28.08.2014 குனேறு என்ற ஊருக்கு வந்து சேர்ந்து இங்குள்ள கோயிலில் தங்கியிருந்தோம்.
இன்று 96 ஆம் நாள் - 29.08.2014 ஆவணி 13
கோயிலில் சூரியன் அனுமன் நாகம் முதலான சிற்பங்களை வைத்திருந்தனர்.
முழு ஓய்வு நாள்.
கிராமத்தினர் பலரும் கூட்டம்கூட்டமாக வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றனர்.
எல்லோரும் அவரவர் வீடுகளுக்குச் சாப்பிட வருமாறு அழைப்பு விடுத்தனர். கோயிலுக்கு அருகில் இருந்த அன்பர் வீட்டிற்கும் சற்று அருகேயுள்ள மற்றொரு அன்பர் வீட்டிற்கும் குருசாமி அவர்கள் யாத்திரிகர்களை அழைத்துச் சென்றார்.
இவர்களது வீட்டில் உள்ள பூஜை அறைகளில் எல்லாம் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் படமும் வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டு யாத்திரிகர் அனைவரும் வியந்து போனாம்.
இவர்களது வீட்டில் வழிபாடு செய்தோம். வழிபாடு முடிந்த பின்னர் உணவு. ரொட்டி சாப்பாடு எல்லாமும் குண்டோதர பூதத்திற்கு வைத்தது போன்று நிறையநிறைய வைத்தனர். சாப்பிட்டு முடித்ததும் பழங்கள் கொடுத்தனர். ஒவ்வொருவருக்கும் சுமார் 1/4 லிட்டர் அளவிற்குப் பால் கொடுத்தனர். சாப்பிட்டு முடிப்பதற்குப் போதும் போதும் என்றாகி விட்டது.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
@sarvesh mishra
@Rajesh Mishra
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக