ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

10.08.2014 காசி பாதயாத்திரை - 77ஆம் நாள் - ஆடி 25

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.   இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  நேற்று வாட்கி என்ற ஊருக்கு அருகேயுள்ள ஸ்ரீராமர் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.  

இன்று 77ஆம் நாள் - ஆடி 25 (10.08.2014) ஞாயிற்றுக் கிழமை. 

இன்றுதினவழிபாட்டை முடித்துக் கொண்டு ஸ்ரீ ராமர் கோயிலில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு யாத்திரையை தொடர்ந்தோம்.  நேற்று அதிகாலையில்  மழையும் , பின்பு நல்ல வெயிலும் இருந்த காரணத்தால் எல்லோரும் கையில் குடை எடுத்துக் கொண்டோம்.


வழியில் காலை நேரத்தில் அன்னதான வண்டி வந்தவுடன் தேநீர் சாப்பிடலாம் என, வழியடைக்கப் பட்ட சாலையில் அமர்ந்து யாத்திரிகர்கள் ஓய்வு எடுத்தனர்.  சிலர் அப்படியே படுத்துத் தூங்கி விட்டனர்.  காலை 7.00 ஆகியும் அன்னதான வண்டி வரவில்லை.  காலதாமதம் ஆகிறது எனக் குருசாமி அவர்கள் நடைப்பயணத்தைத் தொடரச் சொன்னார்.
7.01 am
குருசாமி அவர்கள் வழிகாட்டுதலின்படி  அனைத்து யாத்திரிகர்களும் எழுந்து நடக்கத் தொடங்கினர்.  அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கிய நடைப்பயணம்.  என்னிடம் இருந்த குடிதண்ணீர் தீர்ந்து விட்டது.  அன்னதான வண்டி வந்து விடும் என்ற நம்பிக்கையில் சிறிதளவு இருந்த தண்ணீரையும் குடித்து விட்டேன்.  இப்போது மிகவும் தாகமாக இருந்தது.  என்னுடன் பேசிக்கொண்டே நடந்து வந்த காசிஸ்ரீ சிவப்பாவிடமும் தண்ணீர் தீர்ந்து விட்டது.   என்னைப்போல் மற்றவர்களும் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தாகத்துடன் நடந்தனர்.

8.11 am

காலை 8.10 மணிக்கு அன்னதான வண்டி வந்து சேர்ந்தது.   குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அன்னதான வண்டி ஓட்டுனரிடமும் சமையல்காரரிடமும் ஏன் காலதாமதம்? ஏன் அலைபேசியை எடுத்துப் பேசவில்லை? எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.  

யாத்திரிகர் அனைவருமே  ரொட்டியைப் பற்றியோ, தேநீரைப் பற்றியோ சிறிதும் கவலைப்படவில்லை.  வண்டியிலிருந்த தண்ணீரைக் குடித்துத் தாகம் தீர்த்துக் கொண்டனர்.  சிலர் தண்ணீரைக் குடித்துக் கொண்டு நடக்கவும் தொடங்கி விட்டனர்.

குருசாமி அவர்கள் யாத்திரிகர் அனைவரையும் அழைத்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுச் செல்லுமாறு சொன்னார்.  நேற்று தங்கியிருந்த இடத்தல் மின்சாரம் இல்லாத காரணத்தினால் பேட்டரிலைட் வெளிச்சத்தில் சமையல் செய்வதில் காலதாமதம் ஆகிவிட்டது என்றும்,  அலைபேசியிலும் பேட்டரி தீர்ந்து விட்டபடியால் அவர்களால் தகவல் சொல்ல இயலாமல் போனது என்றும் விளக்கம் கூறினார்.

குருசாமி சொன்னவுடன் அனைத்து யாத்திரிகர்களும் ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.

9.03 am

வழிநெடுகிலும் தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமாகவும் குறுகியதாகவும் இருந்தது. ஐந்து வருடங்களாக இந்நிலை நீடித்து இருப்பதாக கூறினர்.

9.03 am
9.03 am
9.03 am

9.03 am
சாலையில் நடப்பது சிரம்மமாகவும் பாதுகாப்பு அற்றதாக வும் இருந்தது.
9.03 am
9.03 am
9.07 am
9.08 am
9.08 am
9.08 am
9.08 am
9.08 am
9.13 am

வாட்னர் என்ற ஊரின் எல்லையில் உள்ள மருத்துவமனை எதிரே, காலை 9.15 மணிக்கு உணவு.   சாலையோரம் இருந்த கடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டோம்.

9.35 am
9.48 am
9.48 am

வாட்னர் ஊரில் இருந்து நான்குவழிச்சாலை நல்லபடியாக அமைக்கப்பட்டிருந்தது.
10.03 am
10.41 am
11.23 am

நல்ல வெயில். நீண்ட தொலைவு நடந்துவிட்ட காரணத்தினாலும், வெயிலில் தொடர்ந்து நடக்க இயலாத காரணத்தினாலும், யாத்திரிகர் ஒருவர் சாப்பாடு வண்டியில் ஏறி அமர்ந்து குட்கி வந்து சேர்ந்தார்.

11.39 am
உச்சி வெயிலில் 11.30 மணி யளவில் சாலையோரம் மிகப் பெரிய மரம் இருந்து.  அந்த மரத்தின் கீழே தெய்வங்களை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.  நாங்கள் சிலர் அந்த மரத்தின் நிழலில் தங்கிச் சற்று ஓய்வு எடுத்தோம்.
12.10 pm
ஆச்சரியமாக, நன்பகல் 12.00 மணிக்கு சிறுசிறு மேகங்கள் கூடின. வெயில் குறைந்தது.  நாங்களும் நடக்கத் தொடங்கினோம்.
12.25 pm
12.28 pm

12.36 pm

தேசிய நெடுஞ்சாலை சாலையின் ஒருபுறம் குட்கி என்ற ஊரும், சாலையின் மறுபுறம் ஆர்வி என்ற ஊரும் உள்ளன.  குட்கி ஊருக்குப் பெயர்ப் பலகை இல்லை.  "ஆர்வி" என்ற ஊருக்கு மட்டுமே பெயர் பலகை வைத்து இருந்தனர்.   எனவே குட்கி இன்னும் தொலைவில் உள்ளது எனக் கருதி, முன்னால் வேகமாகச் சென்ற யாத்திரிகர் பலரும் ஊரைக் கடந்து நெடுந்தூரம் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

மெதுவாக நடந்து வந்து நாங்கள் சிலர் மட்டும் மதியம்  12.40 மணிக்கு குட்கி   என்ற ஊர் வந்து சேர்ந்தோம்.  எங்களுக்கு முன்னதாக நடந்தவர்களைக் காணாது, எங்கே இருக்கின்றீர்கள்? என அலைபேசியில் கேட்டபோது, நாங்கள் ஆர்வி ஊரைத்தாண்டி நடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்றனர்.  ஆர்விதான் குட்கி, குட்கிதான் ஆர்வி என்று விளக்கம் கூறி அவர்களைத் திரும்பி வருமாறு கூறினோம்.    காசிஸ்ரீ மோகன் என்ற சின்னக்கருப்பன் மட்டும் கடைசிவரை அலைபேசியை எடுக்கவே இல்லை.   அவர் மட்டும் நெடுந்தொலைவு நடந்து சென்றுவிட்டுத் திரும்பி வந்து சேர்ந்தார்.

முயல் ஆமை கதையாக இந்த நிகழ்ச்சி அமைந்து இருந்தது..

12.38 pm
ஈச்ச மரத்தின் ஓலையைக் குட்கி கிராமத்தில் வெயிலில் காய வைத்திருந்தனர்.  இந்த ஈச்ச ஓலையில் படுப்பதற்கான பாய் செய்யலாம்.  ஈச்சங்குச்சியில் கூடை செய்யலாம்.    நான் 1960-70 ஆம் ஆண்டுகளில் ஈச்சம்பாய், ஈச்சங்கூடை எல்லாம் திருப்பூவணத்தில் பார்த்துள்ளேன்.  இங்கே குட்சியில் இது இன்றும் பயன்படுத்தப்படுவதைக் கண்டு வியந்து போனேன்.
12.38 pm
குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அன்பர் ஒருவர் வந்து யாத்திரிகர்களை வரவேற்று அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

கிராமத்தில் சிறுவர் சிறுமியர் விளையாடிக் கொண்டிருந்தனர்.  இதுபோன்றதொரு விளையாட்டை நீங்கள் தமிழ்நாட்டில் கண்டது உண்டா? இது என்ன விளையாட்டு என உங்களால் யூகிக்க முடிகிறதா?

குருசாமியின் அடியார் வீட்டில் தங்கினோம்.  வீடும் வயலும் அருகருகே இருந்தன. வீட்டில் கைவினைப் பொருட்கள் செய்து வைத்திருந்தனர்.  காதிகிராப்ட் நிறுவனத்தினர் வந்து இந்தப் பொருட்களை விற்பனைக்கு வாங்கிச் செல்வார்கள் என்று கூறினர்.  https://goo.gl/maps/A5FqhzyNTHa73qgXA

வெண்டைக்காய் சூப் வழங்கப்பட்டது.

1.30 க்கு மதிய உணவு.

ஓய்வு.

மாலை 5.00 மணிக்கு ரொட்டி , தேநீர்.
வழிபாடு.

இரவு 7.00 மணியளவில், யாத்திரிகர்களுக்கு அந்த அடியாரின் இல்லதிலேயே சப்பாத்தி தயாரித்து வழங்கி உபசரித்தனர்.  சப்பாத்தியில் எண்ணை இல்லை.  அடுப்பில் சுட்டு எடுத்தனர். சுவையாக இருந்தது.  யாத்திரிகர் அனைவரும் சாப்பாத்திகளை விரும்பி கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.

https://goo.gl/maps/b6iTdZNesAtk535J8

இன்றைய பயண தூரம் சுமார் 34 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக