திங்கள், 24 ஆகஸ்ட், 2020

25.08.2014 காசி பாதயாத்திரை - 92ஆம் நாள் - ஆவணி 9

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.    இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று தூமான் என்ற ஊர் வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.  

இன்று 92ஆம் நாள் - ஆவணி 9 (25.08.2014) திங்கள் கிழமை.

தினவழிபாட்டை முடித்துக் கொண்டு 3.15 க்கு மௌகான் என்ற ஊரில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.

6.06 am

6.16 am

6.17 am

வழி நெடுகிலும் அடுத்தடுத்து அமைந்திருக்கும் மலைத்தொடர்களின் வழியாக சாலை சென்றது. "ல" வடிவ வளைவுகளுடன் சாலை ஏற்ற இறக்கமாக இருந்தது.

6.26 am

6.36 am

6.49 am

6.39 am

6.36 am

6.40 am

வழியில் சாலையோரம் உள்ள மசூதி அருகே அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம்.

7.10 am

7.48 am

7.49 am

8.13 am

சாலையோரம் இருந்த தாபாவில் உள்ள மரத்தடியில் அமர்ந்து காலை உணவு.  

வயிறு உபாதையால் வண்டியில் ஏறிய யாத்திரிகர் - மலை இறக்கத்தில் களைப்பு அடைந்து சோர்ந்துபோன யாத்திரிகர் ஒருவர் காலை உணவிற்குப் பின்னர் அன்னதான வண்டியில் ஏறி அமர்ந்து சுக்ரி வந்து சேர்ந்தார்.   “இராமேசுவரம் - காசி பாதயாத்திரைப் பயணம் மிகவும் புனிதமானது.  எனவே தேவைப்பட்டால் கூடுதல் நேரம் ஓய்வு எடுத்து மெதுவாக நடந்து வாருங்கள்,  நடப்பதைத் தவிர்த்து வண்டியில் ஏறி வரவேண்டாம்” என குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அறிவுரை கூறினார்.  தாபாவில் விற்பனை செய்யப்படுவன யாத்திரையின்போது உடலுக்கு ஒத்துக் கொள்ளாது.  கடைகளில் எதையும் வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்றும் குருசாமி அவர்கள் அறிவுரை கூறினார்.

8.52 am

பணம் கொடுத்த பத்திரிக்கையாளர் - மலை முகட்டின் இறக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் எங்களிடம் வழிச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் எனக்கூறி 500 ரூபாய் கொடுத்து சென்றார். தன்னையொரு பத்திரிக்கையாளர் என்று அறிமுகம் செய்து கொண்டார். இதுபோன்றதொரு நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க, இராமேசுவரம் காசி என்ற இரண்டு பெரிய வழிபாட்டுத் தலங்களிடையே பாதயாத்திரை மேற்கொண்டுள்ள யாத்திரிகர்களைக் காண்பதே தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றார்.   காசிஸ்ரீ சரவணன் அவர்கள் அந்தப் பணத்தைக் குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் கொடுத்து, பத்திரிக்கையாளர் விசாரித்துச் சென்ற விபரத்தையும் கூறினார்.

9.07 am

சாலையோரம் அத்திமரம் ஒன்று இருந்தது.  யாத்திரிகர்கள் சிலர் அத்திப் பழங்களை எடுத்து வைத்துக் கொண்டனர்.

9.25 am

9.46 am


9.56 am

பங்கரை என்ற ஊர் வழியாக சுக்ரி என்ற ஊரின் கிராம அலுவலகத்திற்கு  11.00 மணிக்கு வந்து சேர்ந்து தங்கினோம்.

இங்கிருந்து காசி 499 கி.மீ.


10.14 am

அருகே மிகவும் பழைமையான கோயில் உள்ளது.  கோயில் அர்ச்சகர் அருகேயுள்ள ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.   யாத்திரிகர்களுக்கு  வழிபாடு செய்து வைத்தார்.

கிராம அலுவலுகக் கட்டிடத்திற்குள் யாத்திரிகர்கள் அனைவரும் தங்கும் அளவிற்குப் போதுமான இடவசதி இல்லை.   சில யாத்திரிகர்கள் அலுவலகத்தின் அருகேயுள்ள கோயில் வளாகத்தில் உள்ள மிகப்பெரிய அரசமரத்தடியில் படுத்துச் சிலர் ஓய்வு எடுத்தனர்.

அந்த அரசமரத்தடியில் மதிய உணவு.

ஓய்வு.  

இன்று இங்கே தங்கினோம். 

தாயைத் தேடிய தனையன்கள் - இரவு 7.00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் இருவர் வந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களை வணங்கினர்.  ஒரு படத்தைக் காண்பித்து, அந்தப் படத்தில் இருப்பது அவர்களது தாயார் என்றும், அவரைக் காணவில்லை என்றும், வழியில் யாத்திரிகர் யாரேனும் எங்களது தாயாரைக் கண்டீர்களா? என்றும் கேட்டனர்.     நாங்கள் இன்று மௌகானில் இருந்து சுக்கிரி வரை நடந்து வந்துள்ளோம்.  தங்களது தாயாரைப் பார்க்க வில்லை.  “உங்களது தாயார் இன்னும் 10 நாட்களுக்குள் கிடைப்பார்” என குருஜி அவர்களை ஆசிர்வதித்தார்.

https://goo.gl/maps/i9AeK5uo6b53RQ6k8

இன்றைய பயண தூரம் சுமார் 27 கி.மீ.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக