வியாழன், 27 ஆகஸ்ட், 2020

28.08.2014 காசி பாதயாத்திரை 95 ஆம் நாள் - ஆவணி 12

காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......

வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.     இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,   நேற்று 27.08.2014  பணகர் என்ற ஊருக்கு  வந்து சேர்ந்து தங்கியிருந்தோம்.

இன்று 95 ஆம் நாள் - 28.08.2014 ஆவணி 12 

தினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 2.15 மணிக்கு பணகரில் இருந்து யாத்திரயை தொடர்ந்தோம்.  காந்திகிராமம் ஊர்   வழியாக குனேறு (https://goo.gl/maps/vmAncavCC1urZyAz8) என்ற ஊருக்குக் காலை 9.50 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

2.03 am

6.02 am
காலையில் சூரியன் உதித்ததில் இருந்து கடுமையான வெயில்.

6.30 am
வழியில் சாலையோரம் அமர்ந்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு நடைப்பயணத்தைத் தொடர்ந்தோம்.



6.34 am

6.55 am
ஹிரன் (Hiren) நதியின் வடகரையில் சாலையின் மேற்கே இந்த முனிவர் சிற்பம் உள்ளது.

6.56 am

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து மைல்கல் ஒன்று கண்ணில் தென்பட்டது.

7.32 am
இராமாயணக் காட்சிகளைச் சிற்பங்களாக வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.  


இங்கு அனுமனை வழிபாடு செய்கின்றனர்.   இந்தக் கோயிலில் காலை உணவு.

7.53 am

8.06 am


இரண்டுபேர் மிகவும் கஷ்டப்பட்டு நடந்து காசிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

8.30 am

8.30 am


8.31 am

8.41 am

9.15 am

9.32 am

குனேறு என்ற ஊரில் உள்ள குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அடியார்கள் தேசிநெடுஞ்சாலையில் வந்து நின்று மலர்மாலை அணிவித்துக் குருசாமி அவர்களை வரவேற்று வழி நெடுக வெடிகள் வெடித்து வரவேற்று அவர்களது கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். 


9.40 am



ஊருக்குள் நுழையும் போது, கிராமத்தினர் வெடிவெடித்துத் தங்களது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் குருசாமி பச்சைக்காவடி அவர்களையும் யாத்திரிகர்களையும் வரவேற்றனர்.





அடியார் ஒருவரது இல்லத்தில் குருசாமி அவர்களுக்கும் ஒவ்வொரு யாத்திரிகர்களுக்கும் பாத பூஜை செய்து வரவேற்பு அளித்தனர்.




9.44 am




9.53 am

ஆதீனங்களில் குருவழிபாடு செய்யப்படும் முறையில்,  குருசாமி பச்சைக்காவடி அவர்களுக்கு நெற்றியில் விபூதி அணிவித்துத் தலையில் வில்வம் வைத்து, குருவந்தனை பாடித் தீபம் காட்டி வழிபட்டனர்.  குருசாமி பச்சைக்காவடி அவர்கள் அனைவரையும் ஆசீர்வதித்து விபூதி பிரசாதம் வழங்கினார்.  

அதன்பின்னர் அனைவருக்கும் இனிப்பு மிக்சர் பழங்கள் தேநீர் வழங்கி மகிழ்ந்தனர்.




10.14 am

10.15 am

10.16 am

பின்னர் அங்கிருந்து, அருகேயுள்ள குளத்தின் மேற்குக் கரையில் உள்ள கோயிலுக்குச் சென்று தங்கினோம். யாத்திரிகர் தங்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் நன்றாகச் செய்து கொடுத்தனர்.

கோயிலில் குருஜியின் படத்தையும் வைத்து ஊரார் வழிபட்டு வருவதைக் கண்டு வியந்து போனோம்.   காரணம் கேட்ட போது, 2007 ஆம் ஆண்டில் மாந்திரீகன் ஒருவனால் கிராமத்தில் அடிக்கடி துர்மரணங்கள் நிகழ்ந்தைக் கதையாகக் கூறினர்.  தினமும் யார் வீட்டிலோ யாரோ ஒருவர் இறந்து கொண்டிருந்திருக்கிறார்.  பொழுது விடிந்ததும் வீட்டை விட்டு வெளியே வந்தால் ஏதேனும் ஒரு மரணச் செய்தியும் அழுகுரலும் கேட்டபடி இருந்துள்ளது.   நாளை யார்வீட்டில் யார் மரணம் அடைவார்களோ என்ற பயத்தில் ஊரால் வாழ்ந்துள்ளனர்.  

அப்போது குருசாமி அவர்கள் காசிக்கு நடைப்பயணமாகச் சென்று கொண்டிருக்கும் செய்தியை அறிந்த கிராமத்தினர் சிலர் குருசாமி பச்சைக்காவடி அவர்களை நேரில் சந்தித்து தங்களது ஊருக்கு எழுந்தருள வேண்டுமென வேண்டிக் கொண்டுள்ளனர்.  குருசாமி அவர்களும் ஊராரின் வேண்டுகோளை ஏற்று இங்கு வந்து தங்கியுள்ளார்.  

உங்களது ஊரில் முதன் முதலாகத் துர்மரணம் நிகழ்ந்த நாட்களில்,  ஊருக்குப் புதிதாக வெளி நபர்கள் வந்து தங்கிச் சென்றார்களா? என்று கேட்டுள்ளார்?  ஆமாம் ஒரு மாந்திரிகன் வந்திருந்தான்,  அவனை விரட்டி விட்டோம்.  அவன் இந்த ஊரணியின் மறுகரையில் உள்ள மூங்கில் மரத்தடியில் தங்கியிருந்தான் என்று சொல்லியுள்ளனர்.  குருசாமி அவர்களும் ஊராருடன் அந்த மாந்திரிகன் தங்கியிருந்த மூங்கில் புதருக்குச் சென்று பார்த்த போது, அங்கே மாந்திரிகன் இல்லை.    இவனை இந்த இடத்தில் பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டன என்று சிலர் சொல்லியுள்ளனர்.   அது கேட்ட குருசாமி அவர்களும் இந்த இடத்தில் தன்னிடம் இருந்த விபூதியைத் தூவி வழிபாடு செய்துள்ளார்.   இது நடந்த மறுநாளில் இருந்து கிராமத்தில் துர்மரணங்கள் நிகழ்வது நின்றுவிட்டது.   கிராமத்தினர் பயமின்றிப் பழைய இயல்பு நிலையில்  வாழத் தொடங்கினர்.   சில நாட்கள் சென்றபின்னர் அந்த மாந்திரிகன் சாலையோரம் மரணமடைந்து கிடந்ததைக் கிராமத்தார் ஒருவர் பார்த்துள்ளார்.

தங்களது கிராமத்தில் ஏற்பட்ட துர்மரணங்கள் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் அருளாசியால் நீங்கியது என்றும்,  அதனால் இவரே எங்களுக்குக் கண்கண்ட தெய்வம் என்றும் கிராமத்தார் வழிபடுகின்றனர்.   கோயிலில் பிள்ளையாருக்கு அருகில் குருசாமி பச்சைக்காவடி அவர்களின் படத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

செங்கற்களால் வீடு போன்ற வடிவத்தில்  கோயிலில் கட்டியிருந்தனர். சிலர் மாடிக்குச்  சென்று படுத்துத் கொண்டோம்.  

நாளையும் ஓய்வு.


10.18 am

கோயிலில் ஓய்வு.
மாணவர்கள் பலரும் வந்து குருசாமி அவர்களுடனும் யாத்திரிகர்களுடனும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர்.

குஸ்தி போட்டுப் பிள்ளையாரைக் கும்பிடுகின்றனர் விடிந்தால் பிள்ளையார் சதுர்த்தி,  இன்று மாலை நேரத்தில் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் குஸ்தி போட்டிகள் நடைபெற்றன.  யாத்திரிகர்கள் அனைவரும் சென்று பார்த்து வந்தோம்.  குஸ்தி பற்றிய விரிவான தகவல்களையும் படங்களையும் இதில் இணைத்துள்ளேன்.

அன்பர் ஒருவரது வீட்டில் இரவு உணவு.  அவரது வீடு முழுவதும் பசுமாடுகள் நிறைந்து இருந்தன.

https://goo.gl/maps/waxbhwHjx2iehCG28
மேலேயுள்ள கூகுள் புவிப்படத்தில் சிஹோரா புறவழிச்சாலை வழியாகப் பாதை காட்டி 34கி.மீ. தொலைவு எனக் குறிப்பிடுகிறது.  ஆனால் யாத்திரிகர்கள் புறவழிச்சாலை வழியாகச் செல்லாமல், சிஹோரா ஊரின் வழியாகச் சென்றோம்.  எனவே உண்மையான பயணதூரம் தூரம் 31 கி.மீ.  மட்டுமே.  

இங்கிருந்து காசி 414 கி.மீ. தூரத்தில் உள்ளது.

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

@sarvesh mishra

@Rajesh Mishra

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக