சனி, 8 ஆகஸ்ட், 2020

வாட்கியில் ஸ்ரீ ராமர் கோயில் -

வாட்கியில்  (Wadki) ஸ்ரீ ராமர் கோயில் - 


வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை.   இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி,  இன்று 76ஆம் நாள் - ஆடி 24 (09.08.2014) சனிக் கிழமை, மாலை 4.00 மணிக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் வாட்கி என்ற ஊரின் எல்லையில் சாலையோரம் அமைந்துள்ள ராமர் மற்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம்.   இங்கிருந்து வாட்கி சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ளது.


ஸ்ரீ ராமர் கோயில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.  மிகவும் பழமையான ஆஞ்சநேயர் சிற்பம் ஒன்று வழிபாட்டில் இருந்தது.  


வாட்கி ஸ்ரீராமர் கோயில் இருப்பிடம்.  https://goo.gl/maps/N71cDMD5kLeMDbZo6

குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.

அன்பன்

காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
https://kasi-pathayathrai-kalairajan.blogspot.com/2020/08/09082014-76-24.html 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக