காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று புட்டிபூரி என்ற ஊர் வந்து சேர்ந்து இருந்தோம்.
இன்று 80ஆம் நாள் - ஆடி 28 (13.08.2014) புதன் கிழமை. தினவழிபாட்டை முடித்துக் கொண்டு அதிகாலை 3.10 மணிக்கு புட்டிபூரி என்ற ஊரில் இருந்து யாத்திரையை தொடர்ந்தோம்.
நாக்பூர் ஊருக்குள் நுழைந்ததும் சிறிது நேரம் ஓய்வு.
ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுக் கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
நாக்பூரில் வசித்து வரும் நகரத்தார் திரு முத்துக்கருப்பன் அவர்களும் அவரது மகனும் வழியில் வந்து யாத்திரிகர்களை வரவேற்றனர்.
காலை உணவு கொண்டுவந்து வழங்கினர்.
காலை உணவு முடிந்த பின், அவரது வீட்டிற்கு யாத்திரிகர்ளை அழைத்துச் சென்றார். யாத்திரிகர்கள் சிலர் அவரது வீட்டிலும், சிலர் அருகில் உள்ள கோயிலிலும் வசதியாகவும் தங்கினோம். இன்றும் நாளையும் இவரது இல்லத்தில் தங்கியிருந்தோம். இந்த இரண்டு நாட்களிலும் இவரது இல்லத்திலேயே யாத்திரிகர்களுக்கு உணவு வழங்கிச் சிறப்புச் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக