சனி, 29 டிசம்பர், 2018

பத்தி என்றால் என்ன?, ஊரும் பேரும்

பத்தி என்றால் என்ன?

அறுபடைவீடு பாதயாத்திரை.   பிள்ளையார்பட்டியில் துவங்கி, பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் வழிபாடு செய்துமுடித்துத் திருச்செந்தூர் சென்று கொண்டிருந்தோம்.  எலியார்பத்தி என்ற ஊர் வழியாகச் சென்றோம். 
திருச்செந்தூரில் இருந்து திரும்பிப் பழனி செல்லும் போது பாரபத்தி என்ற ஊரைக் கண்டேன்.

இந்த ஊர்ப் பெயர்கள் எனக்கு வினோதமாகப் பட்டன.



1) ஊதுபத்தி
2) பத்தி பிரித்துப் பதில் எழுத வேண்டும் என்று தமிழாசிரியர் வழிப்படுத்துவர்.
3) தலபுராணங்களில் "பக்தி" என்பதைப் "பத்தி" என்றும் கூறியிருப்பர்.

ஆனால் மதுரைக்குத் தெற்கே அருப்புக்கோட்டை செல்லும் சாலையில், பாரபத்தி, எலியார்பத்தி என "பத்தி" என்று முடியும் ஊர்கள் உள்ளன !
பத்தி என்றால் என்ன ?

பாரபத்தி, எலியார்பத்தி என்ற பெயர்கள் இந்த ஊர்களுக்கு எதனால் உண்டாகியுள்ளன?

அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள். சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?

சமுத்திரம் என்று முடியும் ஊர்ப் பெயர்கள்.
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?

நான்கு முறை மதுரைக்குக் கடல்வெள்ளம் (சுனாமி, ஆழிப்பேரலை) வந்ததாகத் திருவிளையாடற் புராணம் குறிப்பிடுகிறது[1].  பஃறுளி ஆற்றுப் பன்மலை யடுக்கத்தையும், குமரிக்கோட்டையும், முதற் தமிழ்ச்சங்கம் நடைபெற்ற தென்மதுரையையும், இரண்டாம் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற கபாடபுரத்தையும் கடல்கொண்டது பற்றித் தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் பல காணப்படுகின்றன.



இந்த இலக்கியக் குறிப்புகள் குறித்து முறையான ஆய்வுகள் ஏதும் செய்யப்படாமலேயே, இக்கருத்துகள் எல்லாம் பொய்யில் புலவர்களால் புனைந்து உருவாக்கப்பட்ட தொன்மம் என்று கூறிவந்தனர்.  இந் நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்கே “செழியன் கொடிநுடங்க மறுகின் கூடல்“[2] என்று அகநானூறும்,  “மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முட்டாள் தாமரை” என்று நக்கீரரின் திருமுருகாற்றுப்படையும் சிறப்பித்துக் கூறும் கூடல் நகரம் தொல்லியலாளர்களால் தோண்டிக் கண்டுபிடிக்கப் பட்டது.

கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் இதுபோன்ற ஆய்வுகளில் பூமிக்கு அடியிலே பெருநகரங்கள் புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.  இந்த ஆய்வுகளால், தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கோள் என்ற செய்தியானது தொன்மக் கதைகள் அல்ல.  அவைகள் உண்மை நிகழ்வுகள் என்று உணர்ந்து கொண்டேன்.

இந்நிலையில், இறையருளால்
2014 ஆம் ஆண்டு இராமேச்சுரம்-காசி பாதயாத்திரையும்,  மீண்டும்
2015 ஆம் ஆண்டு நாக்பூர்-காசி பாதயாத்திரையும்,
2016 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும், மீண்டும்
2017 ஆம் ஆண்டு அறுபடைவீடு பாதயாத்திரையும்
செல்லும் செல்லும் பேறு கிடைக்கப் பெற்றேன்.

பாதயாத்திரைப் பயணத்தில் வழிநெடுகிலும் காணக்கிடைக்கும் கல்லையும் மண்ணையும் சுனாமியின் எச்சங்களாகக் கண்டேன். அவற்றினைச் சேகரித்து முறையான அறிவியல் ஆய்விற்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளேன்.  பாதயாத்திரை செல்லும் வழிகளில் “சமுத்திரம்” என்று முடியும் பெயர்களை ஊர்களையும் ஆங்காங்கே கண்டேன்.

இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயரைச் சேர்த்து வைத்தது யார் ?
சமுத்திரத்திற்கும் இந்த ஊர்களுக்கும் என்ன தொடர்பு ?
அல்லது,
இந்த ஊர்களுக்குச் சமுத்திரம் என்ற பெயர் வைத்த காரணம் என்ன ?
என்ற ஐயங்கள் என்னுள் எழுந்தன.

பண்டைத் தமிழகம் முழுவதையும் கடல்வெள்ளம் (சுனாமி) தாக்கி அழிந்துள்ளது என்ற தமிழ் இலக்கியச் செய்திகளை அறிவியில் அடிப்படையில் நிறுவுவதற்கு ஏதுவாகச் சமுத்திரம் என்று முடியும் ஊர்களின் பெயர்களைத் தொகுத்து இணைத்துள்ளேன். எனது தேடலில்  56 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

1)      கடலூர்
2)      கொண்ட சமுத்திரம், kondasamudram 608701, cuddalore Dist
3)      செக சமுத்திரம்,  Jakka samudram 636805, Dharmapuri
4)      வேங்கட சமுத்திரம், Venkata samudram 636905, Dharmapuri
5)      பாலசமுத்திரம்  Bala samudram 624610, Dindigul Dist
6)      சமுத்திரா பட்டி,  Samudrapatti 624402, Dindigul Dist
7)      கெட்டி சமுத்திரம், Getti samudram 638501 Erode dist
8)      ரெங்க சமுத்திரம், Rangasamudram 638402, Erode Dist
9)      திம்ம சமுத்திரம், Thimam samudram 631 502 Kanchipuram dist
10)   எல்.என்.சமுத்திரம்,  L.N.Samudram 639002, Karur Dist
11)   வேங்கட சமுத்திரம், Venkata samudram 635104, Krishnagiri
12)   கோபால சமுத்திரம், Gopala samudram 609108, Nagapattinam Dist
13)   வில்லந்திட சமுத்திரம்,  Vilanthida Samudram 609111, Nagapattinam Dist
14)   பூமா சமுத்திரம்,  Bomma samudram 637001, Namakkal Dist
15)   மால சமுத்திரம், Malla samudram 637503, Namakkal Dist
16)   நமன சமுத்திரம், Namana samudram 622422, Pudukottai Dist
17)   அப்பம்மா சமுத்திரம்,  Appama samudram 636108, Salem Dist
18)   சங்கம்மா சமுத்திரம், Jangamma samudram 636 113, Salem Dist
19)   கோண சமுத்திரம், Kona samudram 637102, Salem Dist
20)   சமுத்திரம், Samudram 636306, Salem Dist
21)   சமுத்திரம், Samudram 630710, Sivaganga Dist
22)   திருமலை சமுத்திரம், Thirumalai samudram 613402, Thanjavur Dist
23)   தியாக சமுத்திரம், Tyaga samudram 612301, Thanjavur Dist
24)   ரெங்க சமுத்திரம், Renga samudram 625562, Teni Dist
25)   பாலசமுத்திரம்  625512
26)   திம்மராய சமுத்திரம், Thimmaraya Samuthiram, Near New Cauvery Bridge, Tiruchirappalli,
27)   திருமலை சமுத்திரம், Thirumalai Samudram village in Thanjavur Tehsil, Thanjavur,
28)   சின்னபாபு சமுத்திரம், chinnababu samudram 605102, Villupuram Dist.
29)   மூல சமுத்திரம், Moola samudram 606107 , villupuram Dist
30)   பெரியபாபு சமுத்திரம், periyababu samudram 605102, villupuram Dist
31)   தாண்டவசமுத்திரம்  Thandava samudram 604151, Villupuram Dist
32)   அப்பம்மாசமுத்திரம் 616108
33)   அம்பா சமுத்திரம்  Amba samudram 627401, Tirunelveli Dist
34)   அம்பா சமுத்திரம்  Amba samudram Pudukudi 627435, Tirunelveli Dist
அம்பாசமுத்திரம்
https://ta.wikipedia.org/s/2we
பெயர்க் காரணம்[தொகு]
தமிழ்நாட்டு மன்னர்கள், செல்வந்தர்கள் உண்டாக்கிய பெரிய ஏரிகள் கடல் என்றும், சமுத்திரம் என்றும் அழைக்கப்பெற்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் வந்து குடியேறிய படைத்தலைவர்கள் பெயரில் பெருங்குளங்கள் பல ஆங்காங்கே அமைந்தன. அவற்றைச் சார்ந்த ஊர்களை அவரவர் பெயரால் அழைத்தனர். இரவணன், வடமலை, அரங்கன், தளபதி, வாலன், கோபாலன் என்பவர்களுடைய பெயரால் தென்பாண்டி நாட்டில் ஆங்காங்கே ஊர்கள் அமைந்தன. இரவண சமுத்திரம், வடமலை சமுத்திரம், அரங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வாலசமுத்திரம், கோபால சமுத்திரம் என்பவை இவ்வாறு பெயர் பெற்ற ஊர்களாகும். பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன. இங்கு அம்பா, அம்மா, அம்மை என்ற சொற்கள் தாய், காளி, உமாதேவி என்ற பொருளை உடையன.இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும்.[6]

35)   தளபதி சமுத்திரம், Dalapathi samudram 627101, Tirunelveli Dist
36)   கோபல சமுத்திரம், Gopala samudram 627451, Tirunelveli Dist
37)   இராவண சமுத்திரம், Ravana samudram 627424, Tirunelveli Dist
38)   இரெங்க சமுத்திரம், Renga samudram 627413, Tirunelveli Dist
39)   கோண சமுத்திரம், Kona samudram 631202,Tiruvallur Dist
40)   கிருஷ்ண சமுத்திரம், Krishna samudram 631 206, Tiruvallur Dist
41)   இராம சமுத்திரம், Rama samudram 631206, Tiruvallur Dist
42)   கோபால சமுத்திரம், Gopala samudram 614001, Tiruvarur Dist
43)   வடமலை சமுத்திரம், Vadamalai samudram  628907 Thoothukudi Dist
44)   வால சமுத்திரம், தூத்துக்குடி அருகில்
45)   சென்ன சமுத்திரம், Chenna samudram 632506, Vellore Dist
46)   சின்ன சமுத்திரம், Chinna samudram 635653, Vellore Dist
47)   கிரி சமுத்திரம், Giri samudram 635751, Vellore Dist
48)   காம சமுத்திரம்,  Kamma samudram 632319, Vellore Dist
49)   சோம சமுத்திரம், Soma samudram 631102, Vellore Dist
50)   திப்ப சமுத்திரம், Tippa samudram 635809, Vellore Dist
51)   வேங்கிட சமுத்திரம், Venkata samudram 635811, Vellore Dist
52)   மூல சமுத்திரம், Moola samudram 606107, Villupuram Dist
53)   சங்கம்மாசமுத்திரம் 636113
54)   கிருஷ்ண சமுத்திரம் 620013 (திருவெறும்பூர் அருகில்)
55)   நாக சமுத்திரம் nagasamthiram karnadaga (away from Bangalore)
56)  சமுத்திரபூர் Samudrapur समुद्रपूर Maharashtra 442305

கடலூரையும் சேர்த்து மொத்தம் 56 ஊர்களின் பெயர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  சமுத்திரம் என்று முடியும் பெயர்களைக் கொண்ட ஊர்கள் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.
கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சமுத்திரம் என்ற பெயரில் உள்ள ஊர்கள் கண்டறியப்பட வேண்டும்.

மேலும் சமுத்திரம் என்ற பெயருடைய ஊர்களில் உள்ள கிணற்றுநீரின் உப்பின் அளவையும், மண்ணில் கலந்துள்ள கடல்சார்ந்து உப்பின் அளவையும் கண்டறிந்து ஒப்பிட்டுப் பார்க்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.
இந்த ஊர்களில் பூர்வீகமாக வாழும் சமூகத்தினர் விஜயநகரப்பேரசு காலத்தில் குடியேறியவர்களா? விஜயநகரப்பேரசு காலத்தில் இந்த ஊர்களுக்கு இந்தப் பெயர் சூட்டப்பெற்றுள்ளதா? என்றும் கண்டறிய முற்சிகள் மேற்கொண்டுள்ளேன்.


அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்