காசி பாதயாத்திரை பயணக் கட்டுரை ......
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் 11ஆம் ஆண்டு இராமேசுவரம் காசி பாதயாத்திரை. இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமியை வணங்கிக் கொண்டு 26.05.2014 அன்று காசி-பாதயாத்திரையைத் தொடங்கி, நேற்று பால்கொண்டா ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு வந்து சேர்ந்து தங்கி இருந்தோம்.
இன்று 69ஆம் நாள் - ஆடி 17 (02.08.2014) சனிக் கிழமை.
பால்கொண்டாவிலிருந்து புறப்பட்டு மோன்டிகுட்டா (Mondigutta) என்ற ஊருக்குச் சென்று சேர்ந்தோம்.
இன்றைய பயண தூரம் சுமார் 43 கி.மீ.
https://goo.gl/maps/RUamz5eFTP9Q37a39
இன்று அதிகாலை 2.35 மணிக்கு யாத்திரைக்குத் தயார் ஆனோம். வழக்கம்போல் காலை வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டுவிட்டு
பால்கொண்டா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருந்து யாத்திரை புறப்பட்டோம்.
காலை 6.00 மணிக்கு கோதாவரி ஆற்றின் குறுக்கே பாலத்தின் வழியாக நடந்து சென்றோம். அணையிலிருந்து ஆற்றிற்குச் சிறிதளவே தண்ணீர் ஓடிக் கொண்டு இருந்தது. மிகவும் இதமான காற்று வீசியது..
அதிகாலை 2.30 மணிக்கு யாத்திரை கிளம்பியது. நான்கு மணிநேரம் தொடர்ந்து நடந்த களைப்பு.
காலை 6.30 மணிக்கு அன்னதான வண்டி வரும் என்று யாத்திரிகர் அனைவரும் சாலையோரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தோம். ஆனால் இன்று பகல் முழுவதும் நடைப்பயணம் இருக்கின்றன காரணத்தினால், காலைஉணவு மற்றும் மதிய உணவு என இரண்டு வேலைகளுக்கான உணவுகளையும் தயாரித்துக் கிளம்ப அவர்களுக்குக் காலதாமதம் ஆகிவிட்டது. எனவே நாம் தொடர்ந்து நடப்போம், அன்னதான வண்டி வரும்போது தேநீர் குடித்துக் கொள்வோம் என்று குருசாமி பச்சைக்காவடி அவர்கள் கூறினார். அதன்படி யாத்திரிகர்கள் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தனர்.

6.49 am
6.56 am
காலை 7.00 மணி இருக்கும் போது சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்கில் யாத்திரிகர் அனைவரும் சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர்.
காலை 8.40 மணிக்கு கடல் (KADTAL) ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு வந்து சேர்ந்தோம். வழிபாடு. காலை உணவு.
சிறிது நேரம் ஒய்வு.
அதன்பின்னர் காலை 11.15 மணி யளவில் அங்கிருந்து புறப்பட்டோம்.
அதன்பின்னர் காலை 11.15 மணி யளவில் அங்கிருந்து புறப்பட்டோம்.
பத்திரிக்கையாளர் இருவர் வந்து யாத்திரை பற்றிய செய்திகளைக் கேட்டறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டு சென்றனர். காசிஸ்ரீ தனசேகரன் வர்கள் யாத்திரை பற்றிய செய்திகளைத் தெலுங்கில் நிருபர்களுக்கு விளக்கிக் கூறினார்.
கடல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இருந்து காசி 1003 கி.மீ.
இந்தத் தகவல் பலகையைப் பார்த்த யாத்திரிகர்கள் பெரிதும் மகிழ்ந்து இதுவரை பாதயாத்திரை செய்துள்ள தொலைவு, இனிமேல் நடக்க வேண்டிய நாட்கள் பற்றித் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டே நடந்தனர்.
தேசிய நெடுஞ்சாலையானது நிர்மல் ஊருக்குள் சென்று, நிர்மல் காடு வழியாகச் சென்றுள்ளது. நான்கு வழிச்சாலை அமைக்கும் போது, நிர்மல் ஊருக்குள் செல்லாமல் பாதையை மாற்றி அமைத்துள்ளனர். மேலும் மலைகளை வெட்டிச் சாலையை அகலப் படுத்தியுள்ளனர். இதனால் வாகனங்கள் எளிதாக மலையைக் கடந்து செல்கின்றன.
11.30 am
11.30 am
நிலைபெட்ட (NeelaiPeta) பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து மதிய உணவு..
சிறிது நேரம் ஓய்வு.
உச்சி வெயிலில் நிழல் கிடைப்பது அரிதாக இருந்தது.
சிலர் உட்கார்ந்தபடியே தூங்கினர்.
சிலர் துண்டை விரித்துப் படுத்துத் தூங்கினர்.
சிலர் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று ஓய்வு எடுத்தனர். ஆனால் அங்கேயும் சூரிய வெளிச்சம் நேரிடையாகப் பட்டதால், அவர்களால் படுத்துத் தூங்க இயலவில்லை.

மாலை 5.30 மணிக்கு மொன்டிகுட்டா (Mondigutta) கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். மலைகளுக்கு நடுவே கிராமம் அமைந்துள்ளது. அருகில் வேறு எந்த கிராமமும் இல்லை. சுமார் 10 கி.மீ. தொலைவு மலைக்கு ஊடே பயணம் செய்தால்தான் அடுத்துள்ள கிராமத்திற்குச் செல்ல முடியும். இயற்யோடு ஒன்றி மக்கள் வாழ்கின்றனர்.
இங்குள்ள பள்ளிக்கூடத்தில் தங்கினோம். ஊரில் உள்ள சிறுவர் சிறுமியர் அனைவரும் வந்து கூடிவிட்டனர்.
மாலை நேர வழிபாடு..
வழிபாடு முடிந்ததும் ரொட்டியும் தேநீரும்.
அங்கு நின்ற அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ரொட்டியும் தேநீரும் கொடுத்தார்.
வழிபாடு முடிந்ததும் ரொட்டியும் தேநீரும்.
அங்கு நின்ற அனைத்துச் சிறுவர் சிறுமியருக்கும் குருசாமி பச்சைக்காவடி அவர்கள் ரொட்டியும் தேநீரும் கொடுத்தார்.
சிலர் இரண்டு கைகளில் ரொட்டி வாங்கிக் கொண்டனர்.
நல்லபடியாகப் படிக்க வேண்டும் எனக் குழந்தைகளைக் குருசாமி ஆசிர்வதித்தார்.
நல்லபடியாகப் படிக்க வேண்டும் எனக் குழந்தைகளைக் குருசாமி ஆசிர்வதித்தார்.
இங்கு சாலையோரம் ஒரு சிமிண்ட் தொட்டியில் தண்ணீர் நிறப்பி வைத்துள்ளனர். யாத்திரிகர் பலரும் சென்று உடல் குளிரக் குளிரக் குளித்தோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக