அறுபடைவீடு - பச்சைக்காவடி அவர்களின் இரண்டாம் ஆண்டு பாதயாத்திரை - 60 நாட்கள், 1126 கி.மீ. பயணம்.
குருவருளால் 08.06.2017 அன்று பிள்ளையார்பட்டியில் பாதயாத்திரை தொடங்கி, 1) பழமுதிர்சோலை 2) திருப்பரங்குன்றம் 3)திருச்செந்தூர் 4) பழனி 5) சுவாமிமலை ஆகிய ஐந்து திருத்தலங்களிலும் அருள்மிகு முருகப்பெருமானை வழிபடும் பேறு பெற்றோம்.
சுவாமிமலையில் இருந்து திருத்தணிகை செல்லும் வழியில், வைத்தீசுவரன்கோயில் சிதம்பரம் வழிபாடு செய்து கொண்டு
நேற்று திண்டிவனம் வந்து தங்கி இருந்தோம்.
இன்று 55 ஆவது நாள், ஆடி 16 ( 01.08.2017) வெள்ளிக் கிழமை.
இன்று அதிகாலை 2.03 மணிக்கு எழுந்து வழிபாடு முடித்து ரொட்டியும் தேநீரும் சாப்பிட்டோம்.
யாத்திரை தொடங்கியது.
குளிர்காற்று சுகமாக வீசியது.
தெள்ளாற்றை நோக்கி நடந்தோம்.
இன்று காலையில் முதன்முதலில் அரசமரத்துப் பிள்ளையாரின் திருக்காட்சி கிடைத்தது. பிள்ளையாரை வணங்கிக்கொண்டு யாத்திரையைத் தொடர்ந்தோம்.
வழியில் ரொட்டியும் தேநீரும்
அருள்மிகு ஸ்ரீ மகாதிரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ திரிபுரசுந்தரர் திருக்கோயிலைக் கண்டு வணங்கிக் கொண்டோம்.
காலை 8.23 மணிக்கு ஸ்ரீ கஸ்தூரி திருமண மண்டபத்தை அடைந்து தங்கினோம்.
9.00 மணிக்கு காலை உணவு.
ஓய்வு.
யாத்திரிகர்கள் தங்கியிருந்த மண்டபத்திற்கு அருகே, அருள்மிகு திருமூலட்டானேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. நாங்கள் மூவர் மட்டும் 11.00 மணியளவில் கோயிலுக்குச் சென்றோம். ஆனால் கோயில் நடை சாத்தி யிருந்தது. மிகவும் பழையான தெய்வ வடிவங்கள் கோயில் வளாகத்தில் இருந்தன. அந்தத் தெய்வ வடிவங்களை வணங்கிக் கொண்டு திரும்பி வந்து விட்டோம்.
மதிய உணவு.
ஓய்வு.
“மேல்மா கூட்டுரோடு” அருகே கோயில் கட்டியுள்ள காசிஸ்ரீ ஜானகிராமன் அவர்கள் வந்திருந்து குருசாமி பச்சைக்காவடி அவர்களிடம் ஆசி பெற்றார். நாளைய தினம் யாத்திரிகர்கள் மேல்மாகூட்டுரோடில் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக தகவல் சொல்லி, அனைவரையும் அன்புடன் அழைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக