காசி பாதயாத்திரைப் பயணத்தில்
காவலர்களின் கனிவு
வலையபட்டி சித்தர் காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களின் இராமேசுவரம் - காசி பாதயாத்திரையும் அமைந்து இருந்தது.
இன்று 64ஆம் நாள் - ஆடி 12 (28.07.2014) திங்கள் கிழமை.
தினசரி வழிபாட்டை முடித்துக் கொண்டு ரொட்டியும் ஹார்லிக்சும் சாப்பிட்டுவிட்டு அதிகாலை மணி 3.50 க்கு நரசிங்கியில் இருந்து புறப்பட்டு யாத்திரையை தொடர்ந்தோம்.
யாத்திரிகர்கள் சாலையோரம் நடந்து செல்லும்போது, ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர் வந்து யாத்திரிகர்களை வழிமறித்து விசாரித்தனர். எங்கிருந்து வருகின்றீர்கள்? எங்கே செல்கின்றீர்கள்? எங்கே தங்குவீர்கள்? உங்களது குருசாமி யார்? உங்களது அலைபேசி எண் என்ன? என்பன போன்ற பல கேள்விகளைக் கேட்டனர். நீண்ட நேரத்திற்குப் பின்னர் எங்களது பதிலில் திருப்தி அடைந்தவர்களாகச் சென்றுவிட்டனர்.
சிறிது நேரம் கழித்து, அவர்களே மீண்டும் வந்து அவர்களது வண்டியை நிறுத்தி யாத்திரிகர்களின் வழியை மறித்தனர். எதற்காக மீண்டும் இவர்கள் வரவேண்டும்? என யாத்திரிகர் அனைவரும் சற்று குழம்பிப் போயினர்.
ஆனால் அவர்களோ, வண்டியிலிருந்து ஒரு பெரிய பெட்டி நிறைய சுவை மிகுந்த ரொட்டிகளைக் கொடுத்துச் சிறப்புச் செய்தனர். இதைச் சற்றும் எதிர்பாராத யாத்திரிகர்கள் அனைவரும் வியந்து போனனோம். குருசாமி அவர்களிடம் சென்று கொடுங்கள் என்று சொன்னோம். உங்களது குருசாமி அவர்கள் சற்று தொலைவில் வந்துகொண்டிருக்கிறார், அவரிடம்தான் இதைக் கொடுத்தோம். அவர்தான் உங்களிடம் கொடுக்கச் சொன்னார். எனவே தயக்கம் ஏதுமில்லாமல் இந்த ரொட்டிப் பெட்டியை வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.
யாத்திரிகர்களிடம் மிகவும் அன்பு பாராட்டிய கடமை தவறாத கண்ணியமான காவலர்களுடன் படம் எடுத்துக் கொண்டோம். இன்றைய யாத்திரையின் சிறப்பு நிகழ்வாக இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
குருசாமி காசிஸ்ரீ பச்சைக்காவடி அவர்களது குருவருளும், அருள்மிகு காசிவிசுவநாதர் திருவருளும் நம் அனைவருக்கும் ஆகுக.
அன்பன்
காசிஸ்ரீ, முனைவர், நா.ரா.கி. காளைராசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக